ரஷ்யா-உக்ரைன் இடையே தொடங்கியது பேச்சுவார்த்தை.. போர் நிற்குமா.. உலகமே எதிர்பார்ப்பு
கீவ்: உக்ரைன் - ரஷ்யா இடையே பேச்சுவார்த்தை தற்போது பெலாரஸில் தொடங்கியது. போரை முடிவுக்கு கொண்டு வர இரு நாட்டு பிரதிநிதிகளும் பேச்சு வார்த்தை நடத்திவருகின்றனர்.
உக்ரைன் மீது ரஷ்யா இன்று ஐந்தாவது நாளாக தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில் உக்ரைன் மற்றும் ரஷ்யா அமைதிப் பேச்சுவார்த்தைக்கு தயாராகி இருக்கின்றன.
அதனடிப்படையில் இன்று மதியம் 2.30 மணிக்கு அமைதி பேச்சு வார்த்தை தொடங்கும் என்று கூறப்பட்ட நிலையில், தற்போது பேச்சு வார்த்தை தொடங்கி இருக்கிறது.

போர்
உக்ரைன் நேட்டோ நாடுகளின் சபையில் தன்னை இணைத்துக்கொள்ள விரும்பியது. இதற்கு ரஷ்யா எதிர்ப்பு தெரிவித்தது. ஆனால் உக்ரைன், சோவியத் யூனியனில் இருந்து பிரிந்து வந்ததும், ஐரோப்பாவோடு சேர விரும்பியது. உக்ரைன் நேட்டோவில் சேர்ந்தால், அந்த பக்கம் அமெரிக்க படை நிறுத்தப்படும் என்று கருதி ரஷ்யா தொடர்ந்து எதிர்த்து வந்தது.

போர்
இதனால் இரண்டு நாடுகளும் தங்கள் எல்லையில் ராணுவ வீரர்கள் நிறுத்தி வைத்தனர். இதனால் பதற்றம் அதிகரித்தது. ரஷ்யா போர் தொடுக்கும் என உலக நாடுகள் எச்சரித்தன. நேட்டோ நாடுகள் உக்ரைனுக்கு ஆதரவு தெரிவித்து வந்தன. இந்நிலையில், ஐந்து நாட்களுக்கு முன், உக்ரைன் மீது தாக்குதல் நடத்துகிறோம் என அறிவித்துவிட்டு தாக்குதலைத் தொடங்கியது ரஷ்யா.

பேச்சுவார்த்தை
இரு தரப்பிலும் போர் தீவிரமாக நடந்து வருகிறது. இரு தரப்பிலும் பொருட் சேதம், உயிர் சேதமும் நடந்திருக்கிறது. உக்ரைன் மீது தீவிரமாக தாக்கியது ரஷ்யா. இதனால் செர்னோபில் உள்ளிட்ட முக்கிய இடங்களைக் கைப்பற்றியது ரஷ்யா. தலைநகர் கீவ் நோக்கி முன்னேறியது ரஷ்ய படை. இந்நிலையில், உக்ரைன் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருந்த நிலையில், ரஷ்யாவும் தயாரானது.
Recommended Video

அமைதி திரும்பட்டும்
இதையடுத்து, உக்ரைன் - ரஷ்யா இடையே பேச்சுவார்த்தை தற்போது பெலாரஸில் தொடங்கியது. போரை முடிவுக்கு கொண்டு வர இரு நாட்டு பிரதிநிதிகளும் பேச்சு வார்த்தை நடத்திவருகின்றனர். அமைதி பேச்சுவார்த்தைக்கு முன் போருக்கான எச்சரிக்கை ஒலி நிறுத்தப்பட்டது. போரின் தீவிரத்தை ரஷ்யா குறைத்திருப்பதாக உக்ரைன் தற்போது தெரிவித்துள்ளது.
-
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை












Click it and Unblock the Notifications