"சாரி, அதுக்கு மட்டும் வாய்ப்பில்லை!" ரஷ்யா உடனான உறவு.. ஜெர்மனி கூறிய பரபர கருத்து.. அப்போ உக்ரைன்?

Subscribe to Oneindia Tamil

பெர்லின்: உக்ரைன் போர் இன்னும் முழுமையாக முடிவுக்கு வராத நிலையில், ரஷ்யா குறித்து ஜெர்மனி கூறியுள்ள கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா கடந்த பிப். 24ஆம் தேதி முழு வீச்சிலான போரைத் தொடங்கியது. முதலில் உக்ரைன் நகரில் இருக்கும் அனைத்து பகுதிகளையும் நோக்கி ரஷ்யா முழு வீச்சிலான போரை ஆரம்பித்தது.

இருப்பினும், ரஷ்ய ராணுவத்திற்கு எதிராக உக்ரைன் வீரர்கள் துணிச்சலாகப் போராடினர். இதனால் பல பகுதிகளில் ரஷ்ய ராணுவத்தால் முன்னேற முடியாத சூழல் ஏற்பட்டது.

 உலக நாடுகள்

உலக நாடுகள்

ரஷ்ய அதிபர் புதினின் இந்தப் போர் நடவடிக்கைக்கு உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்திருந்தன. மேலும், அமெரிக்கா தொடங்கி உலகின் பல்வேறு நாடுகளும் ரஷ்யா மீது முன்னெப்போதும் இல்லாத அளவுக்குப் பொருளாதாரத் தடைகளை அறிவித்துள்ளன. இதனால் ரஷ்யாவின் பொருளாதாரம் நிச்சயம் மிக மோசமாகப் பாதிக்கப்படும் என்றே உலக நாடுகள் தொடர்ந்து கூறி வந்தனர். அதேநேரம் உலக நாடுகள் உக்ரைனுக்கு போதிய உதவிகளைச் செய்யவில்லை என்று அந்நாட்டின் அதிபர் ஜெலன்ஸ்கி வேதனை தெரிவித்திருந்தார்.

ஜெர்மனி

ஜெர்மனி

இந்தச் சூழலில் ரஷ்யா குறித்து ஜெர்மனி கூறியுள்ள கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ரஷ்யா மீது ஐரோப்பிய ஒன்றியம் மேலும் பல புதிய பொருளாதாரத் தடைகளை அறிவிக்கத் தயாராகி வருவதாகத் தகவல் வெளியாகி உள்ளன. இருப்பினும், இதுபோன்ற பொருளாதாரத் தடைகள் உண்மையில் ரஷ்யாவுக்கான நெருக்கடியை அதிகரிக்குமா என்பது உறுதியாகத் தெரியவில்லை.

 பொருளாதாரத் தடைகள்

பொருளாதாரத் தடைகள்

ஏனென்றால் பொருளாதாரத் தடைகளை அறிவிக்கும் போதிலும், மறுபுறம் ரஷ்யாவிடம் இருந்து எரிபொருள், கேஸ் போன்றவற்றை உலக நாடுகள் தொடர்ந்து வாங்கி வருகின்றன. இதன் காரணமாகப் பொருளாதாரத் தடைகள் என்பதே அர்த்தமற்றதாக போய்விடுவதாகச் சிலர் சாடி வருகின்றனர். இந்நிலையில், ரஷ்யாவிடம் இருந்து எரிபொருளை வாங்குவது தொடர்பாக அந்நாட்டின் நிதி அமைச்சர் சில முக்கிய தகவல்களைத் தெரிவித்துள்ளார்.

 நிறுத்த முடியாது

நிறுத்த முடியாது

இது தொடர்பாக ஐரோப்பிய ஒன்றிய நிதி அமைச்சர்கள் கூட்டத்தில் பேசிய ஜெர்மனி நிதி அமைச்சர் கிறிஸ்டியன் லிண்ட்னர், "ரஷ்யா உடனான அனைத்து பொருளாதார உறவுகளையும் நாங்கள் துண்டித்து விட்டோம். இருப்பினும், இப்போது உள்ள சூழலில் ரஷ்யாவிடம் இருந்து பெறும் ​​எரிவாயு சப்ளேவை நிறுத்த முடியாது. இது தொடர்பாக முடிவெடுக்க எங்களுக்கு சில காலம் தேவை. கச்சா எண்ணெய், நிலக்கரி மற்றும் கேஸ் ஆகியவை குறித்து தனித்தனியாக ஆய்வு செய்து முடிவு எடுக்க வேண்டும்" என்றார்.

 ஜெர்மனி அமைச்சர்

ஜெர்மனி அமைச்சர்

ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் மற்றும் நிலக்கரி இறக்குமதியை இப்போது உடனடியாக நிறுத்துவது என்பது ரஷ்யாவை விட ஐரோப்பிய நாடுகளுக்கே அதிக பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் ஜெர்மனி அமைச்சர் கிறிஸ்டியன் லிண்ட்னர் குறிப்பிட்டுள்ளார். ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் பெரும்பாலும் ரஷ்யாவிடம் இருந்தே எரிவாயுவை இறக்குமதி செய்கின்றன. அதிலும் குறிப்பாக ஜெர்மனி தனது பெரும்பாலான தேவையை ரஷ்யாவிடம் இருந்தே பெறுகிறது. ஜெர்மனி தனது இயற்கை எரிவாயு தேவையில் 55 சதவிகிதத்தையும், கச்சா எண்ணெய் தேவையில் 35 சதவிகிதத்தையும் நிலக்கரி தேவையில் 45 சதவிகிதத்தையும் ரஷ்யாவிடம் இருந்தே இறக்குமதி செய்கிறது. வரும் காலத்தில் இந்த நிலையை மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். இதற்கிடையே நாளை (புதன்) அல்லது நாளை மறுநாள் (வியாழன்) ரஷ்யா மீது புதிய பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட வாய்ப்புகள் உள்ளன.

 இறக்குமதி

இறக்குமதி

ஜெர்மனி தனது இயற்கை எரிவாயு தேவையில் 55 சதவிகிதத்தையும், கச்சா எண்ணெய் தேவையில் 35 சதவிகிதத்தையும் நிலக்கரி தேவையில் 45 சதவிகிதத்தையும் ரஷ்யாவிடம் இருந்தே இறக்குமதி செய்கிறது. வரும் காலத்தில் இந்த நிலையை மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். இதற்கிடையே நாளை (புதன்) அல்லது நாளை மறுநாள் (வியாழன்) ரஷ்யா மீது புதிய பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட வாய்ப்புகள் உள்ளன.

Recommended Video

    திடீரென Russia-வை கண்டிக்கும் India..காரணம் Bucha | Oneindia Tamil
     உக்ரைன் போர்

    உக்ரைன் போர்

    இந்தப் போர் தொடங்கிய சில நாட்களில் இருந்தே இரு தரப்பிற்கும் இடையே அமைதி பேச்சுவார்த்தையும் தொடர்ந்து நடைபெற்று வந்தது. முதலில் நடைபெற்ற அமைதிப் பேச்சுவார்த்தையில் பெரியளவில் உடன்பாடு ஏற்படவில்லை. இருப்பினும், கடந்த வாரம் நடைபெற்ற அமைதிப் பேச்சுவார்த்தையில் பல விவகாரங்களில் உடன்பாடு ஏற்பட்ட நிலையில், விரைவில் போர் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+