சவுதி அரேபியா வாழ் இந்தியர்களை சந்தித்த பியூஷ் கோயல்! ரியாத்தில் களைக்கட்டிய கலாச்சார நிகழ்ச்சி!
ரியாத்: 2 நாள் பயணமாக சவுதி அரேபியா சென்ற மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், அங்குள்ள வெளிநாடு வாழ் இந்தியர்களை சந்தித்துப் பேசினார்.
அரசு முறை பயணம்: அரசு முறை பயணமாக சவுதி அரேபியாவின் ரியாத் நகருக்கு சென்றிருந்த மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், தனது அலுவல் பணிகளுக்கு மத்தியில் சவுதி அரேபியா வாழ் இந்தியர்களை ஆர்வமுடன் சந்தித்து கலந்துரையாடினார். சவுதி அரேபியா வாழ் இந்தியர்களை பார்த்ததும் விழா முழுவதுமே அமைச்சர் பியூஷ் கோயல் உற்சாகத்துடன் காணப்பட்டார். இந்திய கலாச்சார முறைப்படி பரதநாட்டியம் உள்ளிட்ட பல்வேறு பாரம்பரிய கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

ஆர்வமுடன் செல்ஃபி: NRTIA Saudi எனப்படும் வெளிநாடு வாழ் தமிழர் இந்தியர்கள் நலச்சங்கம் சார்பில் அதன் நிர்வாகிகள் டாக்டர் சந்தோஷ், ஜஹ்ரி ஹுசைன், வாசிம் ராஜா, டாக்டர் சலீம், பொறியாளர் திண்டுக்கல் முகமது சபீக் உள்ளிட்ட இன்னும் பலர் அந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். வெளிநாடு வாழ் இந்தியர்களுடனான சந்திப்பு நிகழ்ச்சி முடிந்ததும், அங்கிருந்த புறப்பட்ட மத்திய அமைச்சர் பியூஷ் கோயலுடன் பலரும் ஆர்வமுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர்.
வளர்ச்சிப் பாதையில் வர்த்தகம்: இந்நிகழ்ச்சியை தொடர்ந்து ரியாத்தில் நடைபெற்ற எதிர்கால முதலீட்டு முயற்சியின் (FII) 7வது கூட்டத்தில் பியூஷ் கோயல் கலந்து கொண்டார். அதேபோல் சவுதி சேம்பர்ஸ் கூட்டமைப்பு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட வணிக வட்ட மேசை மாநாட்டிலும் அமைச்சர் பியூஷ் கோயல் பங்கேற்றார். 2022-23 நிதியாண்டில் இரு நாடுகளுக்கும் இடையேயான வர்த்தகம் இதுவரை இல்லாத அளவுக்கு 52.75 பில்லியன் அமெரிக்க டாலர்களை எட்டியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
முக்கிய துறைகள்: பியூஷ் கோயலை பொறுத்தவரை வர்த்தகம், தொழில்துறை, நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகம், ஜவுளி என மூன்றுக்கும் மேற்பட்ட முக்கிய துறைகளுக்கு அமைச்சராக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications