எப்பவுமே பசங்க கூடதான் பேசுவியா? 5-ம் வகுப்பு சிறுமியை கொன்ற கொடூர பெற்றோர்.. உ.பி.யில் கொடுமை
மீரட்: ஐந்தாம் வகுப்பு பயிலும் தங்கள் எப்பொழுதும் ஆண் நண்பர்களுடன் பேசியதால் ஆத்திரமடைந்த பெற்றோர், அவரை இரக்கமின்றி கொலை செய்த சம்பவம் உத்தரபிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் மீரட் நகரைச் சேர்ந்தவர்கள் பப்லூ (43) - ரூபி (36) தம்பதியர். இவர்களது ஒரே மகளான சவுமியா (10), அங்குள்ள தனியார் பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்திருக்கிறார்.
படிப்பிலும், விளையாட்டிலும் படுசுட்டியாக இருந்த சவுமியாவுக்கு பள்ளியில் அதிக நண்பர்கள் இருந்துள்ளனர். அவர்களில் ஆண் நண்பர்களும் அடக்கம்.

தந்தைக்கு பிடிக்கவில்லை
ஆனால், சவுமியாவின் தந்தை பப்லூவுக்கு, தனது மகள் ஆண் நண்பர்களுடன் பேசுவது சுத்தமாக பிடிக்கவில்லை. 'பெண் பிள்ளைகளுடன் மட்டும் பழகு; ஆண் பிள்ளைகளுடன் பழகாதே' என அவர் மகள் சவுமியாவிடம் அடிக்கடி கூறி வந்திருக்கிறார். ஆனால், வெகுளியாக இருந்த சிறுமி சவுமியா, ஆண் - பெண் பேதம் இல்லாமல் அனைவரிடமும் அன்பாக பழகி வந்துள்ளார். பள்ளிப் பாடம் தொடர்பாக செல்போனில் நண்பர்களுடன் பேசுவதையும் அவர் வழக்கமாக கொண்டிருக்கிறார்.

கொலை செய்ய முடிவு
இதனிடையே, சவுமியாவின் இந்த நடவடிக்கை, சமீபகாலமாக தந்தை பப்லூவுக்கு மிகுந்த ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து மனைவி ரூபியிடமும் அவர் கூறியிருக்கிறார். ஆண் நண்பர்களுடன் பழகுவது தங்களுக்கு பிடிக்கவில்லை என தாயார் ரூபியும் சவுமியாவிடம் சொல்லி இருக்கிறார். ஆனால் அவர்களின் பேச்சை சிறுமி சவுமியா கேட்கவில்லை. இதனால் ஆத்திரத்தின் உச்சிக்கே சென்ற பப்லூ - ரூபி தம்பதியர், மகள் சவுமியாவை தீர்த்துக் கட்ட முடிவு செய்தனர்.

கால்வாயில் வீசினர்
அதன்படி, கடந்த 30-ம் தேதி இரவு, ஹோட்டலுக்கு சாப்பிட செல்லலாம் எனக் கூறி சவுமியாவை அவர்கள் காரில் அழைத்துச் சென்றனர். அப்போது இரவு 10 மணியளவில், யமுனா கால்வாய் மேம்பாலத்துக்கு வந்த அவர்கள், தங்கள் மகளை அழைத்து கால்வாயை பார்ப்பது போல நின்றுள்ளனர்.
இன்னும் சில நொடிகளில் தனக்கு என்ன நேரப் போகிறது என அறியாத சிறுமியான சவுமியா, ஏரியை உற்சாகமாக பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது பப்லூவும், ரூபியும் ஈவு இரக்கம் இல்லாமல் தங்கள் மகளை தூக்கி கால்வாயில் வீசினர். இதில் காட்டாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட சவுமியா நீரில் மூழ்கி உயிரிழந்தார்.

கைது நடவடிக்கை
பின்னர் இருவரும் ஒன்றும் நடக்காது போல வந்து, கடந்த 1-ம் தேதி தங்கள் மகளை காணவில்லை என காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதில் பெற்றோரின் நடவடிக்கையில் போலீஸாருக்கு சந்தேகம் வந்ததால் அவர்களை கண்காணித்துள்ளனர். இதில், மகள் காணாமல் போன பதற்றம் சிறிதும் இல்லாமல் அவர்கள் இருந்துள்ளனர்.
இதையடுத்து, போலீஸார் அவர்களை அழைத்துச் சென்று தனித்தனியாக விசாரணை நடத்தினர். இதில் இருவரும் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தால் போலீஸார் தங்கள் பாணியில் விசாரித்தனர். அப்போது இருவரும், தாங்கள் தான் தங்கள் மகளை கொன்றோம் என வாக்குமூலம் அளித்தனர். ஆண் நண்பர்களுடன் பேசுவது பிடிக்காததால் இப்படி செய்துவிட்டோம் என அவர்கள் கூறினர். இதனைத் தொடர்ந்து போலீஸார் அவர்களை கைது செய்தனர். இறந்து போன சவுமியாவின் உடலை தேடும் பணியில் தீயணைப்புப் படை வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications