3 ஆண்டுகளை கடந்த உக்ரைன் போர்.. ஜெலன்ஸ்கியை வைத்து அமெரிக்கா போட்ட பெரிய திட்டம்!

Subscribe to Oneindia Tamil

கீவ்: கடந்த 2022ம் ஆண்டு பிப்.24ம் தேதி தொடங்கிய உக்ரைன்-ரஷ்யா போர் இன்று 3 ஆண்டுகள் முடிந்து 4வது ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கிறது. போரில் பெரிய திருப்பமாக டிரம்ப்பின் பேச்சுகள் இருக்கின்றன.

போருக்கு ஜெலன்ஸ்கிதான் காரணம் என்று கூறும் டிரம்ப், இதுவரை உக்ரைனுக்காக செய்த செலவுகளுக்காக அந்நாட்டிலிருந்து வெட்டி எடுக்கப்படும் கனிமங்களை அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்ய முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

Ukraine United States

போருக்கான காரணம் இதுதான்:

சோவியத் ரஷ்யா காலத்தில், அதற்கு எதிராக அமெரிக்கா உருவாக்கிய அமைப்புதான் நேட்டோ (வட அட்லாண்டிக் உடன்படிக்கை அமைப்பு - NATO). ஆனால் 1990 தொடக்கத்தில் சோவியத் ரஷ்யா உடைந்து, வெறும் ரஷ்யாவாக மாறியது. சரி எதிரிதான் உடைந்துவிட்டானே.. நேட்டோவை கலைத்துவிடலாம் என பலரும் பேச தொடங்கினர். ஆனால், அமெரிக்கா இதை செய்வதற்கு பதில், நேட்டோவை பலப்படுத்தியது.

பிரச்சனை இங்குதான் தொடங்குகிறது. சோவியத் உடைந்த பின்னர், அதிலிருந்து பிரிந்து வந்த பல பகுதிகள் புதிய நாடுகளாக அங்கீகாரம் பெற்றன. உக்ரைனும் இதில் ஒன்று. இப்படி முன்னாள் சோவியத் நாடுகளை நேட்டோ இணைத்துக்கொண்டது.

உக்ரைனும் ரஷ்யாவும்:

கொஞ்சம் கொஞ்சமாக கிழக்கு நோக்கி முன்னாள் சோவியத் நாடுகளை இணைத்துக்கொண்டே நேட்டோ முன்னேறி கடைசியாக உக்ரைனிடம் வந்து நின்றது. உக்ரைனை தாண்டினால் ரஷ்யா. நேட்டோவில் இணைந்த நாடுகளின் எல்லையில் அமெரிக்க ராணுவம் நிலை நிறுத்தப்படும். உக்ரைன் இதில் இணைந்துவிட்டால் ரஷ்ய எல்லையில் அமெரிக்க ராணுவம் நிறுத்தப்படும். அதாவது பாகிஸ்தான் எல்லையில் சீன ராணுவம் நிற்பது போல.

இது ரஷ்யாவுக்கு நேரடி அச்சுறுத்தல், எனவே உக்ரைன் நேட்டோவில் இணையக்கூடாது என்று சொல்லி வந்தது. ஆனால் அமெரிக்க ஆதரவு நிலைப்பாடு கொண்ட உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி நேட்டோவில் இணைய ஒப்பந்தம் போட்டார். இதுதான் போரின் தொடக்கப்புள்ளி.

ஜெலன்ஸ்கியால் வெடித்த போர்:

கடந்த 2022ம் ஆண்டு பிப்.24ம் தேதி உக்ரைன் மீது போரை தொடங்குவதாக ரஷ்யா அறிவித்தது. உக்ரைனுக்கு அப்போதைய அமெரிக்க அதிபர் பைடன் முழு சப்போர்ட் செய்தார். அப்போது தொடங்கி 2025 பிப்ரவரி வரை சுமார் 300 பில்லியன் அமெரிக்க டாலரை அமெரிக்கா உதவியாக வழங்கியுள்ளது. இது எந்த அளவுக்கு பெரிய தொகை எனில்.. கடந்த 2024-2025ம் ஆண்டு தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த பட்ஜெட்டே 42 பில்லியன் டாலர்கள்தான். இந்த பட்ஜெட்டை விட 7 மடங்கு அதிக தொகையை, வெறும் 3.8 கோடி மக்கள் வாழும் உக்ரைனுக்கு அமெரிக்க கொடுத்திருக்கிறது.

இவ்வளவு நிதியை முழுமையாக ஜெலன்ஸ்கி போருக்கு செலவிடவில்லை என்றும் குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.

போர் நிறுத்தம்:

போர் நடந்துக்கொண்டிருந்த நிலையில், அமெரிக்க அதிபராக டிரம்ப் தேர்வாகியுள்ளார். பைடனை போல இவர் உக்ரைனுக்கு ஆதரவளிப்பார் என்று பார்த்தால், அதெல்லாம் முடியாது என்று கூறி, ஜெலன்ஸ்கியை கழற்றி விட்டிருக்கிறார். சமீபத்தில் சவுதியில் உக்ரைன்-ரஷ்யா போர் நிறுத்தம் குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்றது. சோகம் என்னவெனில், இதில் உக்ரைன் சார்பில் எந்த பிரதிநிதியும் பங்கேற்க அழைக்கப்படவில்லை. அமெரிக்கா-ரஷ்ய அதிகாரிகள் மட்டும் போர் நிறுத்தம் குறித்து பேசியுள்ளனர்.

உக்ரைனுக்கு செக்:

பேச்சு வார்த்தையில் போர் நிறுத்தம் குறித்து முடிவெடுக்கப்பட்டிருக்கிறது. மறுபுறம் போருக்காக வாரி இறைத்த பணத்தை வசூல் செய்ய டிரம்ப் ரெடியானார். எனவே உக்ரைனில் உள்ள கணிமங்களில் 50% எங்களுக்கு கொடுக்க வேண்டும் என்று டிரம்ப் கூறியுள்ளார். உக்ரைனில்,

இரும்பு, எஃகு
டைட்டேனியம்
யுரேனியம்
மெக்னீஸ்
கிராஃபைட்
இயற்கை எரிவாயு

உள்ளிட்டவை அதிகம் இருக்கின்றன. அமெரிக்காவில் உள்ள இரும்பை விட உக்ரைன் இரும்பு தனிச்சிறப்பு வாய்ந்தது. அதேபோல லேசான, ஆனால் மிக வலிமை வாய்ந்த உலோகமாக டைட்டேனியம் இருக்கிறது. அமெரிக்காவின் விமான தொழில், ராணுவ பாதுகாப்பு, மற்றும் விண்வெளி ஆராய்ச்சி ஆகியவற்றில் இதன் பயன்பாடு அதிகம்.

அணு ஆயுதம், அணு உலை உள்ளிட்டவற்றிற்கு யுரேனியம் மிக முக்கியமானதாகும். அதேபோல கார் உற்பத்தியிலும், லித்தியம் அயான் பேட்டரி உற்பத்தியிலும் மெக்னீஸ் பயன்படுகிறது. Tesla, Ford EVs போன்ற மின்சார வாகன (EV) பேட்டரிகளில் கிராஃபைட் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. இன்றைய தேதியில் சீனாதான் கிராஃபைட் உற்பத்தில் கெத்து காட்டுகிறது. ஆனால் உக்ரைனில் உள்ள கிராஃபைட்டை வெளியில் கொண்டு வந்தால் சீனாவின் மார்க்கெட் காலியாகிவிடும். எனவே கிராஃபைட்டை அமெரிக்கா பயன்படுத்த நினைக்கிறது.

இதேபோல ரஷ்யா சார்ந்த எரிவாயு ஆதாரங்களை குறைக்க உக்ரைனின் இயற்கை எரிவாயுவை பயன்படுத்த அமெரிக்கா திட்டமிட்டிருக்கிறது. ஆக போர் ரஷ்யாவுக்காக அல்ல.. உக்ரைனை அமெரிக்கா கைப்பற்றதான்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+