For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அமெரிக்காவுக்கு 'கிலியை' ஏற்படுத்திய வடகொரியா.. அவசர அவசரமாக பிடன் போட்ட புதிய தடை.. பின்னணி

Google Oneindia Tamil News

பியோங்யாங்: சமீபத்தில் வடகொரியா கண்டம் விட்டு கண்டம் பாயும் பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவி சோதனை செய்த நிலையில், தற்போது அந்நாட்டின் மூன்று தலைவர்களுக்கு அமெரிக்கா தடை விதித்துள்ளது.

ஏற்கெனவே அந்நாட்டின் மீது அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகள் பொருளாதார தடைகளை விதித்துள்ள நிலையில் தற்போது புதிய தடையும் விதிக்கப்பட்டுள்ளது.

இந்த தடை மூலம் குறிப்பிட்ட மூன்று தலைவர்கள் அமெரிக்காவில் நுழையவும், அங்கு இவர்களுக்கு சொத்துக்கள் இருப்பின் அதனை முடக்கவும் அமெரிக்கா உத்தரவிட்டுள்ளது.

 யார் அவர்கள்?

யார் அவர்கள்?

கடந்த காலத்தில் ஏவப்பட்ட பாலிஸ்டிக் ஏவகணைகளை தயாரிக்க இந்த மூன்று தலைவர்கள்தான் முக்கிய காரணமாக இருந்தார்கள் என்று அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது. ஜோன் இல் ஹோ, யு ஜின் மற்றும் கிம் சு கில் ஆகியோர்தான் இந்த மூவர். இவர்கள் தலைமையில் உருவாகிய பாலிஸ்டிக் ஏவுகணைகள் அமெரிக்காவையே தாக்கும் திறன் கொண்டதாகும். எனவேதான் அமெரிக்கா இவர்களுக்கு தடை விதித்திருக்கிறது. இதன் மூலம் இந்த மூன்று பேருடன் அமெரிக்காவில் இருப்பவர்கள் எந்த வர்த்தகமும் செய்ய முடியாது. அதேபோல இவர்களுடனான பணப்பரிவர்த்தனையும் தடை செய்யப்பட்டுள்ளது. இந்த தடை இருக்கும் வரை இவர்கள் மீது அமெரிக்கா ஒரு கண் வைத்திருக்கும் என்று கூறியுள்ளது. அதேபோல யாருக்கும் தெரியாமல் இவரை கண்காணிக்க தனி குழுவையும் அமெரிக்கா உருவாக்கியுள்ளதாக சில தகவல்கள் வெளியாகியுள்ளன.

அறிக்கை

அறிக்கை

இது தொடர்பாக அமெரிக்கா வெளியுறவுத்துறை சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், "இந்த தடை நடவடிக்கை தென்கொரியா மற்றும் ஜப்பான் குடியரசுடன் ஆலோசித்து மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. இதன் மூலம் வடகொரியா தனது பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். பாலிஸ்டிக் ஏவுகணை சோதனைக்கு பதிலளிக்கும் விதமாகவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை எங்களது நிலைப்பாட்டை அடிக்கோடிட்டு காட்டுகிறது" என்று கூறியுள்ளது. ஏற்கெனவே வடகொரியா மீது அமெரிக்காவுடன் ஜப்பான், தென் கொரியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் என பல நாடுகள் பொருளாதார தடைகளை விதித்திருந்தன.

காரணம்

காரணம்

இந்த தடைகள் அந்நாட்டின் வளர்ச்சியை மந்தமாக்கும் என்று அமெரிக்கா நம்பியது. ஆனால், பக்கத்திலேயே இருக்கும் சீனாவும், கொஞ்சம் தள்ளி இருக்கும் ரஷ்யாவும் வடகொரியாவுக்கு தொடர்ந்து ஆதரவளித்து உதவி செய்து வருகிறது. தொடக்கத்தில் தென்கொரியாவுடன் அமெரிக்கா கூட்டு ராணுவ பயிற்சியை மேற்கொண்டது. ஏற்கெனவே வடகொரியாவுக்கும் அமெரிக்காவுக்கும் அடிக்கடி சண்டை சர்ச்சரவுகள் நிலவி வருவதால் தென்கொரியாவுடன் அமெரிக்கா கைகோர்த்திருப்பது புதிய பதற்றத்தை கொரிய தீபகற்பத்தில் ஏற்படுத்தியது. எனவே வடகொரிய இது குறித்து எச்சரித்தும் கேட்காமல் இருநாடுகளும் கூட்டு ராணுவ பயிற்சியை மேற்கொண்டன. இதுதான் வடகொரியாவின் ஏவுகணை சோதனைக்கு காரணமாகும்.

தோல்வி

தோல்வி

இதில் சில ஏவுகணைகள் ஜப்பான் கடல் எல்லையை ஒட்டிய பகுதியில் விழுந்துள்ளன. இதனையடுத்து சமீபத்தில் நடந்த ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் வடகொரியாவுக்கு எதிராக அமெரிக்கா தீர்மானத்தை முன்மொழிந்தது. இதற்கு ஜப்பான், தென்கொரியா, பிரிட்டன், பிரான்ஸ், இந்தியா உட்பட 14 நாடுகள் ஆதரவு தெரிவித்தன. ஆனால் ரஷ்யாவும், சீனாவும் தங்களது அதிகாரத்தை பயன்படுத்தி இத்தீர்மானத்தை தோற்கடித்தன. அப்போதிலிருந்தே வடகொரியாவை எப்படி பழிவாங்கலாம் என அமெரிக்க யோசித்து வந்த நிலையில் தற்போது புதிய தடை உத்தரவை பிறப்பித்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
After North Korea recently tested intercontinental ballistic missiles, the United States has imposed sanctions on three of the country's leaders. Through this ban, the United States has ordered the entry of three specific leaders into the United States and the freezing of any assets they have there.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X