கம்யூனிஸ்டுகளுடன் தொடர்பு இருக்கிறதா? ஐநா அமைப்புகளுக்கு அமெரிக்கா கேள்வி! காரணம் இதுதான்
நியூயார்க்: ஐநா அமைப்புகளுக்கு அமெரிக்கா தொடர்ந்து நிதியுதவியை அளித்து வருகிறது. இந்நிலையில், கம்யூனிஸ்டுகளுடன் தொடர்பு இருக்கிறதா? சீனாவுடன் தொடர்பு இருக்கிறதா? என்று புதிய கேள்விகளை ஐநா அமைப்புகளிடம் அமெரிக்கா கேட்டிருக்கிறது.
அமெரிக்காவுக்கு சரிநிகராக கம்யூனிச நாடான சீனா வளர்ந்து வரும் நிலையில், இந்த கேள்விகள் முக்கியத்துவம் கொண்டதாக பார்க்கப்படுகிறது.

உதவித் திட்டங்களை மேற்கொள்கின்ற ஐநா ஏஜென்சிகளுக்கு புதிய கேள்விகளை அமெரிக்கா எழுப்பியிருப்பதான் மூலம், இந்த ஏஜென்சிகளுக்கான நிதி வெட்டபப்படுமா? என்றும் அச்சம் எழுந்திருக்கிறது. அமெரிக்காவின் நடவடிக்கைகள் குறிப்பாக மனிதாபிமான உதவிகள் வழங்கும் யுனிசெப் (Unicef), உலக உணவுத் திட்டம் (WFP) போன்ற அமைப்புகளுக்கு சிக்கலை ஏற்படுத்தக்கூடும் என்றும் சொல்லப்படுகிறது.
1. கம்யூனிசம் அல்லது அமெரிக்காவுக்கு எதிரான கருத்துக்களை கொண்ட கட்சிகளோடு தொடர்பு உள்ளதா?
2. சீனா, ரஷ்யா, கியூபா, ஈரான் போன்ற நாடுகளிடமிருந்து நிதி பெற்று இருக்கிறீர்களா?
3. உங்கள் திட்டங்களில் "DEI" (பல்வேறு இன, சமத்துவ, உள்ளடக்க) கொள்கைகள் அல்லது காலநிலை மாற்றம் (climate change) தொடர்பான விஷயங்கள் உள்ளனவா?
இப்படி பல கேள்விகள் கேட்கப்பட்டிருக்கிறது. டொனால்ட் டிரம்ப் ஆட்சி அதிகாரத்திற்கு வந்த பின்னர், அரசின் செலவுகளை குறைப்பதில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். ஏற்கெனவே உலக சுகாதார மையத்திலிருந்து அமெரிக்கா கழன்றுவிட்டது. நேட்டோவிலிருந்தும் வெளியேறுவது குறித்தும் பேச்சுக்கள் அடிப்பட்டு வருகின்றன. அந்த வகையில் ஐநா ஏஜென்சிகளுக்கு செலவிடப்படும் தொகையை தவிர்க்க புதிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன என்றும், அதன் வெளிப்பாடுதான் இந்த கேள்விகள் எனவும் சர்வதேச அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
இந்த கேள்விகளுக்கு ஐநா மனித உரிமை அமைப்பு (UN Human Rights) கண்டனம் தெரிவித்திருக்கிறது. "இந்த கேள்விகள் மிகக் குறுகிய (yes/no) பதில்களை மட்டுமே எதிர்பார்க்கின்றன. நாங்கள் விவரங்களை விளக்க இயலாத நிலையில் இருந்தோம்" என்று மனித உரிமை அமைப்பு கூறியிருக்கிறது. அமெரிக்கா ஐநா அமைப்பிலிருந்து முழுமையாக வெளியேறும் அறிகுறியாக இருப்பதாக பொருளாதார நிபுணர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.
அமெரிக்காவை பொறுத்தவரை கம்யூனிசம் என்பது ஒரு அலர்ஜி. கடந்த நூற்றாண்டில் அமெரிக்காவுக்கு போட்டியாக சோவியத் ரஷ்யா எனும் கம்யூனிச நாடு இருந்தது. இந்த நூற்றாண்டில் சீனாவின் கை ஓங்கியிருக்கிறது. தனக்கு நிகரான வளர்ச்சியை பொருத்துக்கொள்ள முடியாததால் ஜனநாயகம், சமத்துவம், சகோதரத்துவம், பொதுவுடமை, பெண்ணியம், பாலின சமத்துவம் உள்ளிட்ட கருத்துகளுக்கு அமெரிக்கா எதிராக இருக்கிறது என்றும் பலர் கூறி வருகின்றனர்.
அமெரிக்காவின் இந்த கேள்விகள் குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் வாசகர்களே?
-
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல்












Click it and Unblock the Notifications