"கில்லர் டிரோன்கள்!" உக்ரைனுக்கு வலியச் சென்று உதவும் அமெரிக்கா.. அடுத்த லெவலுக்கு செல்லும் போர்?
கீவ்: உக்ரைன் போர் ஒரு மாதத்திற்கும் மேலாக தொடர்ந்து வரும் நிலையில், உக்ரைனிற்கு அமெரிக்கா அதிநவீன ஆயுதங்களை அனுப்பி உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
உக்ரைன் நாட்டில் கடந்த பிப். மாதம் இறுதியில் தொடங்கிய போர் ஒரு மாதத்திற்கும் மேலாகத் தொடர்கிறது. உக்ரைனில் உள்ள படைகளை ரஷ்யா வாபஸ் பெற்றுள்ள போதிலும், போர் இன்னும் முழுமையாக முடிவுக்கு வரவில்லை.
உக்ரைன் போரில் உலக நாடுகள் நேரடியாக ஈடுபடவில்லை என்றாலும் கூட, ரஷ்யா மீது பல பொருளாதாரத் தடைகளை அறிவித்துள்ளன. அதேபோல போர் தொடங்கியதில் இருந்தே உக்ரைனுக்குப் பல உதவிகளையும் செய்து வருகிறது.

டிரோன்கள்
இந்தப் போர் தொடங்கியதில் இருந்து ரஷ்யா மற்றும் உக்ரைன் ஆகிய இரு நாடுகளும் அதிநவீன ஆயுதங்களுடன் தொடர்ந்து வான்வழித் தாக்குதல்களில் ஈடுபட்டு வருகிறது. ஏற்கனவே, ரஷ்யாவின் Vacuum bomb குறித்த தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், உக்ரைனுக்கு அமெரிக்கா 'காமிகேஸ் ட்ரோன்கள்' எனப்படும் கில்லர் டிரோன்களை அனுப்பி உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. பாதுகாப்பு வல்லுநர்கள் இதைத் தற்கொலை ட்ரோன்கள் என்றும் அழைக்கின்றனர்.

உக்ரைன்
உக்ரைனில் இருக்கும் ரஷ்யாவின் டாங்கிகள் மற்றும் ட்ரோன்களை அழிக்க இந்த ட்ரோன்கள் பயன்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரஷ்ய ராணுவத்தின் தாக்குதலை எதிர்த்து உக்ரைன் தொடர்ந்து போராடி வரும் நிலையில், இந்தப் புதிய டிரோன்களை உக்ரைன் ராணுவத்திற்குப் பெரியளவில் வலுசேர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த Switchblade அல்லது Kamikaze ட்ரோன்கள் உக்ரைன் போரில் பெரிய திருப்பத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கில்லர் ட்ரோன்கள்
இந்த கில்லர் ட்ரோன்கள் ஒரு முறை மட்டுமே பயன்படுத்தக் கூடிய ஆயுதங்கள் ஆகும். இவை இலக்கின் அருகே பறந்து சென்று வெடித்துச் சிதறும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. இவற்றை மிக எளிமையாகப் பயன்படுத்தலாம் என்றும் இவை ரஷ்யா ராணுவத்திற்கு பெரும் இழப்பை ஏற்படுத்தக் கூடும் என்றும் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். இந்த டிரோன்களால் 40 கிமீ (25 மைல்கள்) வரை சென்று தாக்க முடியும். ட்ரோன்கள், டிரக்குகள், டாங்கிகள் மற்றும் ஆயுதம் ஏந்திய வாகனங்களுக்கு எதிராகப் பயன்படுத்தப்படலாம்.

காமிகேஸ் அட்டாக்
AeroVironment IncAVAV.O என்ற நிறுவனம் தான் இந்த ட்ரோன்களை தயாரித்துள்ளன. காமிகேஸ் அட்டாக் என்றால் "எதிரி மீதான திடீர் வன்முறைத் தாக்குதல் என்று அர்த்தம். 2ஆம் உலகப் போர் சமயத்தில் இதுபோன்ற காமிகேஸ் தற்கொலைப் படை தாக்குதல் அடிக்கடி நடைபெற்றன. இது ஜப்பானியச் சிறப்புத் தாக்குதல்கள் உடன் தொடர்புடையது. இதில் ஜப்பானிய விமானிகள் எதிரி இலக்குகளில் மோதி அழித்தனர்.

இரு வகை டிரோன்கள்
சுவிட்ச் பிளேடு ட்ரோன்களில் ஸ்விட்ச் பிளேட் 300 மற்றும் 600 என்று 2 வகைகள் உள்ளன. ஸ்விட்ச் பிளேட் 300 டிரோன்கள் தனிநபர்களைத் தாக்கும் வகையில் உருவாக்கப்பட்டது. ஸ்விட்ச் பிளேட் 600 டிரோன்கள் டாங்கிகள் உள்ளிட்ட வாகனங்களை அழிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. மிகச் சிறிய அளவில் இருக்கும் இந்த டிரோன்கள் மின்னல் வேகத்தில் செல்லும் திறன் கொண்டவை. சுமார் 2.7 கிலோ எடை கொண்ட டிரோன்களை ராணுவத்தால் எளிதாக எழ முடியும்.

ஸ்மார்ட் ரோபோக்கள்
மேலும் கேமரா, வெடிமருந்துகளையும் எளிதாக எடுத்துச் செல்ல முடியும். சிறிய வகை ஸ்மார்ட் ரோபோக்கள் போலச் செயல்படும் இந்த டிரோன்களை ஒரு இலக்கை நோக்கி ஏவ முடியும். அல்லது இலக்கை நோக்கி மெதுவாகச் செலுத்தித் தேவைப்படும் நேரத்தில் தாக்கும் வகையில் வடிவமைக்க முடியும். அதேபோல ராக்கெட்கள் புறப்பட்ட பின்னர், கடைசி நேரத்தில் கூட ஆப்ரேஷனை நிறுத்தவும் முடியும். இதில் ஒரு டிரோன் விலை 6000 டாலராக உள்ளது.

15 நிமிடங்கள்
இந்த டிரோன்கள் மூலம் 15 நிமிடத்தில் 60 மைல்கள் செல்ல முடியும். இதைக் கண்டுபிடிப்பது கடினம் என்பதால் எளிதாகத் தாக்குதல் நடத்தலாம். எனவே, இந்த உக்ரைன் போரில் இந்த டிரோன்கள் கேம் சேஞ்ராக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. உக்ரைன் போரில் இரு தரப்பிற்கும் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து உக்ரைனில் இருக்கும் ராணுவத்தைக் குறைக்க ரஷ்யா ஒப்புக் கொண்டது குறிப்பிடத்தக்கது.
-
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு












Click it and Unblock the Notifications