For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அமெரிக்க வேலைக்கான ஹெச் 1 பி விசா.. ஏப்ரல் 1 முதல் விண்ணப்பங்கள் ஏற்கப்படும்

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: அமெரிக்காவில் தங்கி வேலை செய்ய வெளிநாட்டினருக்கு வழங்கப்படும் ஹெச்-1 பி விசாக்களுக்கான விண்ணப்பங்கள் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் ஏற்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் குடியுரிமை பெறாமல் அங்கு தங்கி இருந்து வேலை செய்வதற்கு வசதியாக வெளிநாட்டினருக்கு அந்த நாடு ஹெச்-1 பி விசாக்களை வழங்கி வருகிறது. இந்த விசாக்கள் இந்தியர்கள் உள்ளிட்ட பல்வேறு நாட்டவர்களிடையே பெருத்த வரவேற்பை பெற்றுள்ளன. குறிப்பாக தகவல் தொழில் நுட்பத்துறையில் வேலை செய்கிறவர்களிடையே இந்த விசாக்களுக்கு நல்ல மவுசு உள்ளது.

US to start accepting H-1B applications from April 1

2017 ஆம் நிதி ஆண்டுக்கான இந்த விசா விண்ணப்பங்களை அமெரிக்கா ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் ஏற்கத்தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. "அக்டோபர் 1 ஆம் தேதி தொடங்குகிற அமெரிக்க நிதி ஆண்டுக்கு 65 ஆயிரம் ஹெச்-1 பி விசாக்கள் வழங்கப்படும். இதில் எந்த மாற்றமும் இல்லை" என்று அமெரிக்கா அறிவித்துள்ளது.

முதலில் பெறப்படுகிற அமெரிக்காவின் முதுநிலை அல்லது உயர் பட்டங்கள் பெற்றவர்களின் 20 ஆயிரம் விண்ணப்பங்களுக்கு இந்த 65 ஆயிரம் ஹெச்-1 பி விசா என்ற எண்ணிக்கை வரையறையில் இருந்து விலக்கு அளிக்கப்படும். விசா விண்ணப்பங்கள் ஏற்கப்படுகிற முதல் 5 பணி நாட்களிலேயே 65 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் வந்து குவியும் என எதிர்பார்ப்பதாக அமெரிக்க குடியுரிமை மற்றும் குடியேற்ற சேவைகள் அமைப்பு கூறி உள்ளது.

மேலும், மிக அதிக எண்ணிக்கையிலான ஹெச்-1 பி விசா விண்ணப்பங்கள் பெறப்படுகிறபோது கணினி வழி லாட்டரி குலுக்கல் நடத்தி விசாக்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

English summary
The US would start accepting applications for the much sought-after H-1B work visas for highly-skilled workers for the fiscal year 2017 from the beginning of next month, officials said.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X