For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஷூ வெடிகுண்டு மூலம் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தலாம்: அமெரிக்கா எச்சரிக்கை

Google Oneindia Tamil News

US warns of airline shoe-bomb threat
வாஷிங்டன்: விமான பயணிகள் போல ‘ஷூ' வெடிகுண்டுகளுடன் தீவிரவாதிகள் ஊடுருவித் தாக்கலாம் என அமெரிக்கா தன் நாட்டு விமான நிலையங்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் அமெரிக்காவுக்கு ஆப்கான் தலீபான்கள் எச்சரிக்கை விடுத்திருந்தனர். அதில், ‘25 ஆண்டுகளுக்கு முன் நமது நாட்டில் இருந்து சோவியத் ரஷியப் படைகள் தப்பி ஓடின. அதே விதியைத்தான் இன்றைக்கு அமெரிக்காவும் சந்திக்கப்போகிறது. அந்தக் காலத்தில் ஆக்கிரமிப்பாளர்களுக்கு ஏற்பட்ட அதே கதியை இன்றைய அமெரிக்க ஆக்கிரமிப்பாளர்களுக்கும் ஆப்கானிஸ்தான் மக்கள் ஏற்படுத்த வேண்டும். அமெரிக்காவுக்கு நாங்கள் நினைவூட்ட விரும்புகிறோம். நாங்கள் ஆக்கிரமிப்பாளர்களை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டோம். அவர்களை (சோவியத் ரஷியா) உலக வரைபடத்தில் இருந்தே நீக்கி விட்டோம். அல்லா விரும்பினால், இதே நிலைதான் உங்களுக்கு ஏற்படும்.'' என மிரட்டியிருந்தனர்.

இந்நிலையில், அமெரிக்காவில் உள்ள விமான நிலையங்களுக்கு நேற்று முதல் பாதுகாப்பு அதிகரிக்கப் பட்டுள்ளது. விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகளிடம், விமான பயணிகள் போல ‘ஷூ' வெடிகுண்டுகளுடன் தீவிரவாதிகள் ஊடுருவலாம், எனவே உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து வரும் விமானங்களில் தீவிர சோதனையிடவும் என ஹோம்லண்ட் செக்யூரிட்டி பிரிவு கேட்டுக் கொண்டுள்ளது.

அதேபோல், வெளிநாடுகளில் இருந்து அமெரிக்காவிற்கு வரும் விமானங்களில் பயணி போல தீவிரவாதிகள் ஒப்பனை பொருட்கள் மற்றும் திரவங்கள் வாயிலாகவும் வெடிபொருட்களை மறைத்து வைத்து கொண்டு வரலாம் என எச்சரிக்கை விடுக்கப் பட்டுள்ளது. எனவே விமான பயணம் மேற்கொள்வோரை கண்காணிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளது.

ஆனால், எந்த தகவலின் அடிப்படையில் இந்த எச்சரிக்கையை அமெரிக்கா விடுத்துள்ளது என்ற தகவல்கள் தெளிவாக விளக்கப்படவில்லை.

English summary
US authorities issued a warning on Wednesday to airlines flying to the United States to watch out for militants who may have hidden bombs in their shoes, US government sources said.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X