இதுதான் கெத்து.. கண்ணிமைக்கும் நேரத்தில் ஹமாஸ் வீரர் உடலில்.. டிராக்கரை மாட்டிய இஸ்ரேல் வீரர்.. ப்பா

Subscribe to Oneindia Tamil

ஜெருசலேம்: இஸ்ரேல் ராணுவ வீரர் ஒருவர் ஹமாஸ் வீரரின் உடலில் டிராக்கிங் கருவி ஒன்றை மாட்டிய வீடியோ வைரலாகி வருகிறது.

இஸ்ரேல் பாலத்தீன மோதல் போராக மாறி உள்ளது. காஸாவை சேர்ந்த ஹெஸ்புல்லா இயக்கம் நடத்திய இஸ்ரேல் மீதான தாக்குதல் காரணமாக தற்போது போர் உச்சம் அடைந்து உள்ளது. இஸ்ரேல் எதிர்கொண்ட மிகப்பெரிய தாக்குதல்களில் ஒன்றாக.. இஸ்ரேல் வரலாற்றில் அந்த நாடு எதிர்கொண்ட போர் அல்லாத பெரிய தாக்குதலாக இந்த ஹமாஸ் தாக்குதல் பார்க்கப்படுகிறது. இந்த தாக்குதலுக்கு பழி வாங்கியே தீருவோம். ஹமாஸ் இயக்கத்தை மொத்தமாக அழிப்போம்.

Video Footage emerges alleging Israeli soldier planting GPS device on Hamas operative.

காசா இருந்த சுவடே இல்லாமல் ஆக்க போகிறோம். காஸாவில் இருக்கும் பொதுமக்கள் அங்கிருந்து வெளியேற வேண்டும். நாங்கள் மிக பெரிய தாக்குதலை நடத்த போகிறோம் என்று இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

இரும்பு கோட்டை போல இஸ்ரேல் தகர்ந்து உள்ளது. இந்த தாக்குதல்கள் மூலம் இஸ்ரேல் முழுக்க ஹமாஸ் படை வீரர்கள் ஊடுருவி உள்ளனர். பல இடங்களில் ஹமாஸ் வீரர்கள் புகுந்து தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். ஹமாஸ் வீரர்கள் காசாவிற்கு அருகில் இருக்கும் பகுதிகளுக்குள் மட்டுமின்றி மற்ற பகுதிக்குள்ளும் சென்று கொடூரமாக தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

எப்போதும் ஹமாஸ் வான்வெளி தாக்குதல்களை மட்டுமே நடத்தும். ஆனால் இந்த முறை தரைவழி தாக்குதல்களை அதிகப்படுத்தி உள்ளது. ஹமாஸ் வீரர்கள் பாரசூட் வழியாக தாழ்வாக உள்ளே நுழைந்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

பப்ஜியில் வருவது போல ஹமாஸ் படைகள் தாழ்வாக பாராசூட் வழியாக உள்ளே சென்றதாக கூறப்படுகிறது. இது போக தாக்குதலின் தொடக்கத்தில் இஸ்ரேலுக்குள் பாராகிளைடு மூலம் ஹமாஸ் உறுப்பினர்கள் உள்ளே நுழைந்து இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இதற்கான படமும் வெளியாகி உள்ளது. அங்கே மக்கள் அதிகம் உள்ள இடங்களில் இவர்கள் பாராகிளைட் செய்து உள்ளே சென்றுள்ளனர்.

இது தாழ்வாக பறக்கும் எந்திரம் ஆகும். இதன் மூலம் சத்தமின்றி பறந்து செல்ல முடியும். அதேபோல் இவை ரேடாரில் சிக்காது. மிக தாழ்வாக பறந்து ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு செல்ல முடியும். பப்ஜியில் வருவது போல ஹமாஸ் படைகள் தாழ்வாக பாராசூட் அல்லது பாராகிளைட் மூலமாக இப்படி பறந்துள்ளதாக கூறப்படுகிறது.

எங்கே தங்கி இருக்கிறார்கள்: இப்போதும் அவர்கள் இஸ்ரேல் உள்ளே எங்கே தங்கி இருக்கிறார்கள் என்று தெரியவில்லை. இஸ்ரேல் உள்ளே எந்த இடத்தில் அவர்கள் ஒளிந்து கொண்டு பகல் நேரத்தில் வெளியே வருகிறார்கள் என்று இஸ்ரேல் ராணுவத்திற்கே தெரியவில்லை. இப்படிப்பட்ட நேரத்தில்தான் இஸ்ரேல் ராணுவ வீரர் ஒருவர் ஹமாஸ் படை வீரரின் உடலில் டிராக்கிங் கருவி ஒன்றை பொருத்திய வீடியோ வைரலாகி வருகிறது.

அந்த ராணுவ வீரரும் - ஹமாஸ் வீரரும் சண்டை போட்டுக்கொள்ளும்போது ஹமாஸ் வீரரை தப்பி செல்ல அந்த ராணுவ வீரர் அனுமதிக்கிறார். அப்போது வேண்டுமென்றே தப்பி செல்ல அனுமதித்துவிட்டு கடைசியில் அவரின் உடலில் டிராக்கர் ஒன்றை பொருத்துகிறார். அவரை செல்ல விட்டு அதன்பின் அவர்களின் இருப்பிடத்தை, இஸ்ரேலில் அவர்கள் ஒன்று கூடும் இடத்தை கண்டுபிடிக்கும் விதமாக அவர்கள் இந்த செயலை செய்ததாக கூறப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+