விஜய் பிறந்த நாள்.. பக்ரைனில் மெகா ரத்த தான முகாம்.. 'மக்கள் இயக்கம்' அசத்தல்
பஹ்ரைன்: ரசிகர்களால் அன்புடன் 'தளபதி' என அழைக்கப்படும் நடிகர் விஜய் நாளை 45 வது பிறந்த நாள் விழாவை கொண்டாட உள்ள நிலையில், அவரது ரசிகர்கள் கொண்டாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். அதே நேரம், ரத்த தானம், அன்னதானம், மருத்துவ முகாம் என ரசிகர்கள் ஏற்பாடு செய்துள்ளனர்.

இந்தநிலையில், பஹ்ரைனில் உள்ள விஜய் மக்கள் இயக்கம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது, விஜய் அவர்களின் 45வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு வளைகுடா அரபு நாடான பஹ்ரைனில் இந்தியாவில் பதியப்பட்ட விஜய் மக்கள் இயக்கமானது வரலாற்றில் முதன் முறையாக இந்திய மற்றும் வெளிநாட்டு குருதி கொடையாளார்கள், அண்ணனின் அன்பிற்கு இனிய ரசிகர்கள் உள்ளம் மகிழ்ந்து உதிரம் கொடுத்து இந்த மாபெரும் இரத்ததான முகாமை சிறப்பித்தார்கள்.

அதனை தொடர்ந்து city point hotel ல் வைத்து நடைபெற்ற நலிவடைந்த ஏழை எளிய அன்றாட கூலி தொழிலாளர்களுக்கு அவர்களின் வாழ்க்கை ஏற்றம் பெறும் வகையில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் மற்றும் உழைத்து கலைத்து போன நம் உழைப்பாளர் உள்ளம் மகிழும் வகையிலான கலை நிகழ்ச்சிகள், இரவு அறுசுவை உணவுடன் சிறப்பான முறையில் நிறைவு பெற்றது.

இவ்விழாவை பஹ்ரைன் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் சிறப்பான முறையில் ஏற்பாடு செய்தனர். மேலும் எங்களின் இப்பெரும் முயற்சிக்கு உறுதுணையாக இருந்த மக்கள் இயக்க நிறுவனர் புரட்சி இயக்குனர் ஐயா திரு .S.A.சந்திரசேகர் மற்றும் அகில இந்திய பொறுப்பாளர் அன்பு அண்ணன் திரு.புஸ்ஸி.N.ஆனந்த்.EX.M.L.A அவர்களுக்கு விஜய் மக்கள் இயக்கம் பஹ்ரைன் சார்பாக நெஞ்சார்ந்த நன்றி கலந்த வணக்கத்தை தெரிவித்துக் கொள்கின்றோம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கிடையில், இன்று மாலை 6 மணிக்கு, விஜய்யின் 63 வது படமான பிகில் படத்தின் ஃ பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது, நள்ளிரவு 12 மணிக்கு 2 - வது லுக் போஸ்டரை வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது. நயன்தாரா நாயகியாக தோன்ற ஏ. ஆர். ரஹ்மான் இசையில் உருவாகும் விஜய் - யின் இந்த புதிய படம் வரும் தீபாவளிக்கு திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில், அவரது ரசிகர்கள் #Bigil என்ற ஹேஷ்டேக்கை டிரெண்ட் செய்து வருகின்றனர்.


-
எடப்பாடியை பார்க்க விஜய் டைம் கேட்கவில்லை.. ஆதவ் ஒரு சந்தர்ப்பவாதி! போட்டுத் தாக்கிய கேபி முனுசாமி! -
உடனே வாங்க.. அதிகாரிகளை மீட்டிங் ரூமிற்கு அழைத்த விஜய்.. துளைச்சு எடுத்துட்டாரே.. வாத்தி ரெய்டு! -
நிலத்தை உடனே கைப்பற்ற வேண்டும்.. விஜய் வெளியிட்ட புது உத்தரவு.. 15 திட்டங்கள் 'Waiting'! -
எடப்பாடி பழனிசாமியை விஜய் சந்திக்காதது ஏன் தெரியுமா? இதென்ன ட்விஸ்ட் ? மொத்த அதிமுகவை அள்ளுதே தவெக -
மகள் கல்யாணத்திற்காக முதல்வர் விஜய்யை சந்தித்த குஷ்பு குடும்பம்.. வெளியே வந்ததும் உருக்கமான பதிவு -
அண்ணாமலைக்கு, விஜய் கொடுத்த நம்பிக்கை! பாஜகவிற்கு ‘குட்பை' கூறி புது கட்சி தொடங்குவது ஏன்? பின்னணி -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித்











Click it and Unblock the Notifications