For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வாவ்! ரொம்ப அழகாக இந்தி பேசுறீங்களே! ஜப்பான் சிறுவனை வியந்து பாராட்டிய பிரதமர் நரேந்திர மோடி!

Google Oneindia Tamil News

டோக்கியோ: குவாட் மாநாட்டில் பங்கேற்க டோக்கியோ சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடியிடம் ஜப்பானை சேர்ந்த சிறுவன் இந்தி மொழியில் பேசினார். இதனால் மகிழ்ச்சியடைந்த பிரதமர் மோடி, ‛வாவ்... எங்கு இந்தி கற்றாய்? உனது இந்தி மிகவும் அழகாக இருக்கிறதே?' என வியந்து பாராட்டி ஆட்டோகிராஃப் போட்டு கொடுத்த வீடியோ வெளியாகி உள்ளது.

இந்தியா, ஜப்பான், ஆஸ்திரேலியா, அமெரிக்கா ஆகிய 4 நாடுகள் இணைந்து ‛குவாட்' அமைப்பை உருவாக்கி உள்ளன. இந்த அமைப்பின் உச்சிமாநாடு ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடத்த முடிவு செய்யப்பட்டது.

இதையடுத்து 2 நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் பங்கேற்க இந்திய பிரதமர் நரேந்திர மோடி தனிவிமானத்தில் ஜப்பான் புறப்பட்டு சென்றுள்ளார்.

விவேக் குமார் - இனி இவர்தான் பிரதமர் நரேந்திர மோடியின் தனிச் செயலாளர்... என்ன அதிகாரம் தெரியுமா? விவேக் குமார் - இனி இவர்தான் பிரதமர் நரேந்திர மோடியின் தனிச் செயலாளர்... என்ன அதிகாரம் தெரியுமா?

குவாட் மாநாடு

குவாட் மாநாடு

ஜப்பான் தலைநகர் டோக்கியோ சென்ற நரேந்திர மோடிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இன்று பிரதமர் நரேந்திர மோடி குவாட் மாநாட்டில் பங்கேற்றுள்ளார். முன்னதாக நேற்று அவர் அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். ஜப்பான் தொழில்அதிபர்களை சந்தித்து பேசினார். இந்தியாவில் தொழில் முதலீடு செய்ய வரும்படி அழைப்பு விடுத்தார். மேலும் டோக்கியோவில் ஜப்பான் வாழ் இந்தியர்களின் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.

பிரதமர் மோடி பேச்சு

பிரதமர் மோடி பேச்சு

இந்த நிகழ்ச்சியில் ஜப்பானுடனான இந்தியாவின் உறவு, ஆன்மிகம், ஒத்துழைப்பு பற்றி பேசினார். மேலும் இந்தியாவின் வளர்ச்சி பயணத்தில் ஜப்பான் மிகப்பெரிய பங்காற்றியுள்ளது என பெருமையாக பேசினார். இதற்கிடையே பிரதமர் நரேந்திர மோடியை பொதுமக்கள் வரவேற்றனர். ஜப்பான் நாட்டு குழந்தைகள் பிரதமர் நரேந்திர மோடியின் படம், இந்திய தேசியக்கொடி ஆகியவற்றை ஓவியமாக வரைந்து வரவேற்றனர்.

இந்தியில் பேசிய ஜப்பான் சிறுவன்

இந்தியில் பேசிய ஜப்பான் சிறுவன்

அப்போது இந்திய தேசியக்கொடி வரைந்து மோடியை, ஜப்பான் டோக்கியோவை சேர்ந்த சிறுவன் காத்திருந்தான். அவன் பிரதமர் நரேந்திர மோடியினட் இந்தி மொழியில் பேசினான். இதனை கேட்ட பிரதமர் நரேந்திர மோடி பூரித்தார். மேலும் ‛வாவ், இந்தி எங்கு கற்றாய்? உனக்கு ரொம்ப நன்றாக தெரிகிறதே?' எனக்கூறி வியந்தார். மேலும் சிறுவன் வைத்திருந்த இந்திய தேசியக்கொடியின் படத்தில் பிரதமர் நரேந்திர மோடி ஆட்டோகிராஃப் போட்டு கொடுத்தார். தற்போது இதுதொடர்பான வீடியோ வெளியாகி இணையதளங்களில் பரவி வருகிறது.

மகிழ்ச்சி

மகிழ்ச்சி

இதுபற்றி அந்த சிறுவனிடம் கேட்டதற்கு, ‛‛என்பெயர் விசுகி. நான் 5ம் வகுப்பு படிக்கிறேன். எனக்கு இந்தி மொழியில் அதிகம் பேச வராது. ஆனால் புரிந்து கொள்வேன். பிரதமர் நரேந்திர மோடி நான் எழுதி வைத்திருந்ததை வாசித்து பாராட்டினார். மேலும் கையெழுத்திட்டு கொடுத்தார். நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன்'' என்றார்.

English summary
The Japanese boy spoke in Hindi to Prime Minister Narendra Modi, who was on his way to attend the Quad conference. Delighted by this, Prime Minister Modi said "Wow ... where did you learn Hindi? you know it pretty well? '.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X