உக்ரைன் போரில்.. ரஷ்யா அணு ஆயுதத்தை பயன்படுத்தினால் அடுத்து என்ன நடக்கும் தெரியுமா?
மாஸ்கோ: உக்ரைன் ரஷ்யா போர் தீவிரமடைந்தால், அது அணு ஆயுதப் போராக மாறும் நிலை வரும் என உலக நாடுகள் எச்சரித்து வருகின்றன. ஒருவேளை அணு ஆயுத போரை ரஷ்யா தொடங்கினால், உலகநாடுகள் என்ன செய்ய வேண்டும் என்று விவாதித்து வருகின்றன.
அணு ஆயுதப்போர் நடந்தால், அதன் விளைவுகள் மிகப்பெரியதாய் இருக்கும், நினைத்துப் பார்க்க முடியாத சேதங்கள் ஏற்படுத்தும். இதனால் அணு ஆயுதப்போர் வரக்கூடாது என அனைவரும் நினைத்துவருகின்றனர்.
ஆனால், ஒருவேளை அணு ஆயுதப்போர் ஏற்பட்டால், உலக நாடுகள் அதை எப்படி எதிர்கொள்ள வேண்டும், ஐக்கிய நாடுகள் சபை அதை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பதையும் விவாதித்து வருகின்றன.

ரஷ்யா
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து ஐந்து நாட்களாகிறது. போர் நிறுத்தம் தொடர்பாக இரு நாடுகளும் பெலராஸ் நாட்டில் அமைதிப் பேச்சுவார்த்தையை நடத்தின. ஆனால் அதில் எந்த முடிவும் எட்டவில்லை. இரு நாடுகளும் தங்கள் முடிவில் உறுதியாக இருப்பதால், இறுதி முடிவு எடுக்கமுடிவதில்லை. இதனால் ரஷ்ய ராணுவ படைகள் உக்ரைனில் முன்னேறி வருகின்றன. நேற்று போர் நிறுத்த ஒலி எழுப்பப்பட்டது, ஆனால் பேச்சுவார்த்தைக்கு முன்னரே மீண்டும் அது ஒலிக்கப்பட்டது.

அணு ஆயுதம்
இந்த நிலையில் ரஷ்ய அதிபர் புதின், தனது அணு ஆயுதப் படைப் பிரிவை தயார் நிலையில் வைத்திருக்குமாறு ராணுவத்துக்கு உத்தரவிட்டுள்ளார். சிறப்பு ஆயத்த நிலையில் அவற்றை வைத்திருக்குமாறும் புடின் கூறியுள்ளதால் உலக நாடுகள் அச்சத்தில் இருக்கின்றன. அணு ஆயுத போர் மூண்டால் பாதிப்புகள் மிக மோசமாக இருக்கும். ரஷ்யா அணு ஆயுதத்தைப் பயன்படுத்தினால், பதிலடி கொடுக்க உக்ரைனிடம் எந்த அணு ஆயுதமும் இல்லை.

ஆயுதம்
உலகின் மற்ற நாடுகளை விட ரஷ்யாவிடம் அதிக அணு ஆயுதங்கள் இருக்கிறது. பராமரித்து வருகிறது. 6257 அணு ஆயுதங்கள் ரஷ்யாவிடம் உள்ளன. இவற்றில், 1458 அணு ஆயுதங்கள் செயல்பாட்டில் இருக்கின்றன. 3039 அணு ஆயுதங்கள் செயல்படுத்தப்படாததும், 1760 அணு ஆயுதங்கள் செயலற்றதுமாக தற்போது ரஷ்யாவிடம் உள்ளன. மிகப்பெரிய வல்லரசு நாடான அமெரிக்காவை விட இது அதிக எண்ணிக்கை. இதனால் தான் உலக நாடுகள் போர் சூழலில் ரஷ்யாவைப் பார்த்து பயப்படுகின்றன.

எப்போது பயன்படுத்தும்
ரஷ்யா உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. வான் வழியாக, தரை வழியாக தாக்கி வருகிறது. குடியிருப்புகளைத் தாக்கவில்லை என்றும் ரஷ்யா தெரிவித்துள்ளது. இந்நிலையில் ரஷ்யா எப்போது அணு ஆயுதத்தை பிரயோகப்படுத்தும் என்ற யூகம் ஏற்பட்டுள்ளது. போரில் யார் கை ஒங்கி இருக்கும் என்பதைப் பொறுத்து, போரில் எதிரிகளைப் பின்வாங்க வைக்க, கட்டளைகளை ஏற்க வைக்க என பல விஷயங்களை எதிரிகளை செய்ய வைக்க அணு ஆயுதம் தேவையாக இருக்கிறது. அதாவது அணு ஆயுதத்தை பிரயோகப்படுத்தும் முன்பே, அதை வைத்து எதிரிகளை மிரட்டி அடிபணியவைக்கும் முறை இது.

அமெரிக்கா
உக்ரைனிடன் எந்த அணு ஆயுதங்கள் இல்லை என்றாலும், அதன் நட்பு நாடான அமெரிக்காவிடம், ரஷ்யாவுக்கு அடுத்தபடியாக அதிக ஆயுதங்கள் உள்ளன. மேலும் உக்ரைனுக்கு உதவும் இங்கிலாந்து, பிரான்ஸ் நாடுகளும் அணு ஆயுதங்களை வைத்துள்ளன. அதேபோல, நேட்டோ நாடுகளான ஜெர்மனி, இத்தாலி, நெதர்லாந்து, துருக்கி நாடுகளில் அமெரிக்கா தங்கள் அணு ஆயுதங்களை இந்த நாடுகளில் நிலப்பரப்பில் வைத்துள்ளது.

என்ன செய்ய வேண்டும்
உலக நாடுகள் அமைதியை விரும்புகிறது. உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்ததால், ரஷ்யா மீது அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் பொருளாதார தடை விதித்துள்ளன. போரை நிறுத்த உலக நாடுகளின் தலைவர்கள் கூட்டு பாதுகாப்பு மற்றும் சர்வதேச சட்டத்திற்கு ஆதரவாக ஒன்றிணைய வேண்டும். பொருளாதார தடைகள் போதாது. ஐநா உறுப்பு நாடுகள், போருக்குப் பிந்தைய காலத்தில் செயல்பட, ஆக்கிரமிப்புச் செயல்களுக்கு கூட்டாகவும் தீர்க்கமாகவும் பதிலளிக்க, முதலில் வடிவமைக்கப்பட்ட விதத்தில் ஐநா அமைப்பைப் பயன்படுத்த வேண்டும்.
Recommended Video

ஐநா
ஐநா பாதுகாப்பு கவுன்சில் நடவடிக்கை ரஷ்ய வீட்டோவால் தடுக்கப்பட்ட நிலையில், ஐ.நா. பொதுச் சபை அமைதிக்கான ஐக்கிய கொள்கையின் மூலம் செயல்படும் அதிகாரத்தைக் கொண்டுள்ளது, இது பாதுகாப்பு கவுன்சில் பதிலளிக்கத் தவறினால் ஆக்கிரமிப்புக்கு ஒருங்கிணைந்த பதிலைச் செயல்படுத்த ஐ.நா உறுப்பு நாடுகளின் கடமையை விதிக்கிறது. இரண்டாவதாக, உலகெங்கிலும் உள்ள சாதாரண மக்கள் அணு ஆயுதப் போரின் அச்சுறுத்தலின் கீழ் வாழ்வதை இனியும் பொறுத்துக் கொள்ள மாட்டோம் என்பதை தெளிவுபடுத்த வேண்டும்.
-
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம்












Click it and Unblock the Notifications