For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஜாலி ஹார்பரில் ஜாரி ரைடு.. சோக்ஷியுடன் சிக்கிய பெண்.. கணவரின் தோழி அல்ல.. மனைவி விளக்கம்!

Google Oneindia Tamil News

ஆன்டிகுவா: பஞ்சாப் நேஷனல் வங்கியில் கோடிக்கணக்கில் ஏமாற்றிவிட்டு ஆன்டிகுவா நாட்டில் தப்பியோடிய மெகுல் சோக்ஷியுடன் பெண் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் யார் என்பதில் இரு வேறு கருத்துகள் நிலவுகின்றன.

பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ 13 ஆயிரம் கோடிக்கு மேல் கடன் பெற்றுக் கொண்டு அதை திருப்பி செலுத்தாமல் நீரவ் மோடியும் அவரது உறவினர் மெகுல் சோக்ஷியும் வெளிநாட்டுக்கு தப்பி சென்றுவிட்டனர்.

சூப்பர்.. கொரோனா நோயாளிகளுக்கு உணவு வழங்க.. மருத்துவமனைகளில் தலா 10 பேர் நியமனம்.. மா.சு அறிவிப்பு! சூப்பர்.. கொரோனா நோயாளிகளுக்கு உணவு வழங்க.. மருத்துவமனைகளில் தலா 10 பேர் நியமனம்.. மா.சு அறிவிப்பு!

இந்த நிலையில் ஆன்டிகுவா நாட்டில் மெகுல் இருப்பதாக தகவல் கிடைத்த நிலையில் அவரை காணவில்லை என அவரது வழக்கறிஞர் தெரிவித்தார். இந்த நிலையில் டொமினிகாவில் ஜாலி ஹார்பரில் ஒரு பெண்ணுடன் ஜாலி டிரிப் வந்ததாகவும் அப்போது மெகுல் கைது செய்யப்பட்டதாகவும் டொமினிகா போலீஸார் தெரிவித்துள்ளனர்.

மனைவி

மனைவி

இந்த நிலையில் இந்த பெண் யார் என்பது குறித்து இரு வேறு கருத்துகள் நிலவுகின்றன. மெகுல் சோக்ஷி தனது பெண் தோழியுடன் விருப்பத்துடன் டொமினிகாவுக்கு ஜாலி டிரிப் சென்றதாக ஆன்டிகுவான் பிரதமர் காஸ்டான் பிரவுன் தெரிவித்தார். ஆனால் சோக்ஷியின் வழக்கறிஞரும் அவரது மனைவியும் வேறு மாதிரி சொல்கிறார்கள்.

விஜய் அகர்வால்

இதுகுறித்து வழக்கறிஞர் விஜய் அகர்வாலும் சோக்ஷியின் மனைவி ப்ரீத்தி ஆகியோர் கூறுகையில் என் கணவருடன் கைதான பெண்ணின் பெயர் பாபரா ஜராபிகா. அவர் நடைப்பயிற்சி செல்லும் போது எனது கணவருடன் பழக்கமானார். சோக்ஷியுடன் கடந்த 6 மாதங்களாக நட்புபாராட்டி வருகிறார் ஜராபிகா.

ஜாலி ஹார்பர்

ஜாலி ஹார்பர்

தனது வீடு ஆன்டிகுவாவில் ஜாலி ஹார்பரில் உள்ளதாக தெரரிவித்த ஜராபிகா, அங்கு எனது கணவரை கடந்த மே 23 ஆம் தேதி விருந்து சாப்பிட அழைத்தார். அந்த இடத்தில்வைத்து தான் எனது கணவரை 8 முதல் 10 பேர் கடத்தி அவரை கடுமையாக தாக்கி தூக்கிச் சென்றார்கள். அந்த பெண் ஆன்டிகுவாவை சேர்ந்தவரல்ல. அவர் அவ்வப்போது அந்த நாட்டிற்கு வந்து செல்பவர். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம், இந்த ஆண்டு ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் அவர் அந்த நாட்டுக்கு வந்துள்ளார்.

புகார்

புகார்

ஆன்டிகுவாவில் நாங்கள் வசித்த அபார்ட்மென்ட்டுக்கு அருகேயும் அவர் தங்கியுள்ளார். சொத்துகளை புதுப்பிக்கும் பணியின் ஆலோசகராக அவர் கூறிவந்தார். எனது கணவரை கடத்திய பிறகு அந்த பெண் தலைமறைவாகிவிட்டார். கடத்தல் விவகாரத்தில் அவருக்கு தொடர்பில்லை எனில் அவரது வீட்டுக்கு சென்ற இடத்தில் எனது கணவரை யாரோ கடத்தியதை அவர்தானே முதலில் ஆன்டிகுவா போலீஸுக்கு புகார் அளித்திருக்க வேண்டும். ஆனால் தலைமறைவாக இருக்கிறாரே. அந்த பெண்ணின் உண்மையான பெயர் பாபரா ஜெராபிகா என்பது கூட தெரியவில்லை. ஊடகங்களில் வெளியாகும் பெண்ணின் புகைப்படத்தை பார்த்தால் எனது கணவருடன் நட்பு பாராட்டிய பெண்ணை போல் இல்லை என ப்ரீத்தி தெரிவித்தார்.

English summary
Who is Babara Jarbica, a bulgarian property consultant trapped with Mehul Choksi.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X