For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கிச்சு கிச்சு மூட்டிய மின்னிழை... சிரித்தபடி போஸ் கொடுத்த சூரியன்... நாசாவின் அரிய க்ளிக் !

Google Oneindia Tamil News

நியூயார்க்: மின்னிழை ஒன்று கடந்து சென்ற போது, சூரியன் புன்னகைப்பது போன்று ஏற்பட்ட அற்புதக் காட்சியை நாசா படமாக்கியுள்ளது.

கோபம், சூடு என்றாலே முதலாவதாக உவமைக்கு சொல்லப் படுவது சூரியன் தான். குளுமைக்கு நிலாவை உதாரணமாக கூறுவார்கள். ஆனால், அந்த சூரியனையும் சிரிக்க வைத்துள்ளது மின்னிழை ஒன்று.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் மிகப் பரந்த மின்னிழை ஒன்று சூரியனின் கீழ் பகுதியைக் கடந்தது. அப்போது சூரியனில் கருப்புக் கோடு போன்ற ஒரு தோற்றம் ஏற்பட்டது.

Why is the sun so upset? Giant filament turns solar surface into a giant 'sad face' emoji

அந்த இருண்ட வரி, சூரியன் சிரிப்பது போன்ற மாயத்தோற்றத்தை உருவாக்கியது.

இந்த அரிய படத்தை அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசாவின் ஹப்பிள் தொலைநோக்கி படம்பிடித்துள்ளது. இந்தப் புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளது நாசா.

ஆனால், இதனையும் சிலர் சூரியன் சோகமாக இருப்பது போன்ற முகபாவத்தைக் காட்டுவது போலத் தோன்றுவதாக தெரிவித்துள்ளனர். இந்த மின்னிழையானது 67 பூமிகளைச் சேர்த்தால் வரும் நீளத்தை விட அதிகமாகும். மேலும் இதன் நீளமானது 5 லட்சத்து 33 ஆயிரம் மைல்கள் அளவில் இருக்கும் என்றும் கணக்கிடப்பட்டுள்ளது.

English summary
Shows a vast filament of material snaked across the lower half of the sun forming a dark 'smile' line
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X