For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

காதலன் மீது சந்தேகம்! அப்பார்ட்மென்ட்டுக்கு தீ வைத்து 46 பேரை கொலை செய்த 51 வயது பெண்! கோர்ட் அதிரடி

Google Oneindia Tamil News

தைவான்: தைவானில் காதலன் மீது சந்தேகப்பட்டு இளம் பெண் ஒருவர் செய்த காரியம் அனைவரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

காதலுக்காக எந்த எல்லைக்கும் செல்வார்கள் என்றும் பொதுவாக சொல்வார்கள். அப்படி தான் தைவானில் ஒரு பெண் தனது காதலனுக்காக ஒரு செயலை செய்துள்ளார்.

ஆனால், இதில் அந்த பெண்ணுக்கு எதவும் ஆகவில்லை. அப்பாவி மக்கள் பலரும் பரிதாபமாக உயிரிழந்தனர். அப்படி என்ன செய்தார்? யார் அந்த பெண்? வாருங்கள் பார்ப்போம்.

'டிமிக்கி கொடுக்க முயன்ற காதலன்' விஷம் குடித்து காதலனை கரம்பிடித்த காதலி. . கடலூரில் நெகிழ்ச்சி! 'டிமிக்கி கொடுக்க முயன்ற காதலன்' விஷம் குடித்து காதலனை கரம்பிடித்த காதலி. . கடலூரில் நெகிழ்ச்சி!

தைவான்

தைவான்

தைவான் பகுதியின் தெற்கு நகரமான கவஹ்ஸியுங் என்ற பகுதியில் 13 மாடி கட்டிடம் ஒன்று உள்ளது. அங்கு கடந்த அக்டோபர் மாதம் மிக மோசமான தீ விபத்து ஒன்று ஏற்பட்டது. இதில் அந்தக் கட்டிடத்தின் பல்வேறு தளங்கள் தீக்கிரையாகியது. இந்த கொடூரமான விபத்தில் 46 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 41 பேர் படுகாயமடைந்தனர். தைவான் பகுதியில் நடைபெற்ற மிக கோரமான தீ விபத்துகளில் ஒன்றாக இது கருதப்படுகிறது.

 பெண் கைது

பெண் கைது

இது தொடர்பாக தைவான் போலீசார் நடத்திய விசாரணையில் சில அதிர்ச்சி தகவல்கள் தெரிய வந்தது. கட்டிடத்தில் தீ விபத்தை ஏற்படுத்தியதாக 51 வயதான ஹுவாங் கே-கே என்பவரை போலீசார் கைது செய்தனர். அவர் அப்பார்ட்மென்டில் இருந்து வெளியேறும் முன்பு, சோபாவில் எரி தனலை கொட்டிச் சென்றதாகவும் இதுவே தீ விபத்து ஏற்பட காரணமாக அமைந்தது என்றும் போலீசார் தெரிவித்தனர்.

 என்ன காரணம்

என்ன காரணம்

இதையடுத்து கடந்த ஜனவரி மாதம் அவரை கைது செய்த போலீசார், அவர் மீது கொலை வழக்கை பதிவு செய்தது. ஹுவாங்கின் காதலன் அந்த அப்பார்ட்மென்டில்தான் தங்கி உள்ளார். அவர் தன்னை ஏமாற்றிவிட்டு வேறு ஒரு இளம் பெண்ணுடன் தொடர்பு வைத்திருக்கிறார் என்று அந்த பெண் சந்தேகம் அடைந்துள்ளார். இதனால் வேறு பெண்ணுடன் ரூமிற்கு வரும்போது, அவமானப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் சோபாவில் தீயை வைத்துள்ளார்.

 தண்டனை

தண்டனை

தனது செயல்களுக்கு எந்த வருத்தமும் அந்த பெண் தெரிவிக்கவில்லை என்பதால் அவருக்கு மரண தண்டை வழங்க வேண்டும் என அரசு தரப்பில் வாதிடப்பட்டது. இருப்பினும் மாவட்ட நீதிமன்றம் அவரக்கு ஆயுள் தண்டனையை மட்டுமே விதித்தது. அந்த பெண் மற்றவர்களுக்கு தேசம் விளைவிக்க வேண்டும் என இந்த காரியத்தில் ஈடுபடவில்லை என்றும் இதை கொலை என்று குறிப்பிட ஆதாரம் போதுமானதாக இல்லை என்றும் நீதிபதி தெரிவித்தனர்.

 மேல்முறையீடு

மேல்முறையீடு

இருப்பினும், இந்த உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்ய உள்ளதாக அரசு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். முதலில் கொசுக்களை விரட்டவே அப்படி செய்ததாக ஹுவாங் தெரிவித்தார். இருப்பினும், முதலில் ரூமில் இருந்து கிளம்பும் முன்னர், அதை குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டதாக தெரிவித்தார். ஆனால் பின்னர் என்ன செய்தேன் என மறந்துவிட்டேன் என்று மாற்றிக் கூறியுள்ளார்.

English summary
A Taiwanese woman who set off the island's deadliest fire to get back at her boyfriend: (தைவான் தீ விபத்து காதலனை அவமானப்படுத்த பெண் செய்த காரியம்) Reason behind Taiwan's deadliest fire.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X