2018 கால்பந்து: இறுதிப் போட்டிக்கு முன்னேறிய பிரான்ஸ், தோல்வியில் மிளிரும் பெல்ஜியம்
செயின்ட் பீட்டர்ஸ்பர்க் மைதானத்தில் பிரான்ஸ் - பெல்ஜியம் இடையே நடந்த அரை இறுதி உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் ஒன்றுக்கு பூஜ்யம் என்ற கணக்கில் பெல்ஜியம் தோல்வி அடைந்ததை அடுத்து, இறுதி போட்டிக்கு முன்னேறி உள்ளது பிரான்ஸ்.
இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அல்லது குரேஷியா அணிக்கு எதிராக பிரான்ஸ் விளையாடும். 1966 ஆம் ஆண்டுக்கு பின் இப்போதுதான் இந்த மூன்று அணிகளும் உலகக் கோப்பை இறுதி ஆட்டத்திற்கான போட்டியில் உள்ளன.
முன்னேறி வந்த பெல்ஜியம்
பெல்ஜியம் கடுமையாக விளையாடி முன்னேறி வந்தது. கால் இறுதியில் முன்னாள் உலக சாப்பியனாக இருந்த பிரேசிலை வீழ்த்தி அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. ஆனால், அந்த மாயாஜாலம் அரை இறுதியில் நிகழவில்லை.
- 2018 கால்பந்து: பெல்ஜியம், குரேஷியா ஆதிக்கம் செலுத்துவது எப்படி?
- 2018 கால்பந்து: பிரான்ஸ், பெல்ஜியம், இங்கிலாந்து வெற்றிக்கு உதவிய குடியேறிகள்
அரை இறுதி போட்டியில் தோல்வி அடைந்திருந்தாலும் பெல்ஜியம் அணிக்கு நல்ல எதிர்காலம் இருப்பதாகவே கூறுகிறார் பெல்ஜியம் அணியின் மேலாளர் ராபர்டோ மார்டினஸ். அவர், "பெல்ஜியம் அணியில் மிகத் திறமையான இளம் வீரர்கள் இருக்கின்றனர்" என்கிறார்.
இதுவரை எந்த பெரிய போட்டிகளிலும் வெல்லாத பெல்ஜியம் அணி, ரஷ்யாவில் நடந்துவரும் இந்த உலகக் கோப்பை போட்டியில் வியத்தகு வகையில் விளையாடியது.
இதுவரை நிகழ்த்திய மாயாஜாலம்
அரை இறுதியில் தோற்றிருந்தாலும் இந்த உலகக்கோப்பையில் சிறப்பாகவே விளையாடியது பெல்ஜியம். இதற்கு என்ன காரணம், எப்படி அவர்களால் சாதிக்க முடிந்தது என்பதற்கு பதில் தருகிறார், பிபிசி உலக சேவையின் பெர்னாண்டோ டுவார்ட்.
- ''கால்பந்தைக் கற்றுக்கொள், கவலை உனக்கில்லை ஒப்புக்கொள்'': சாதிக்கும் தமிழ்பெண்கள்
- 2018 உலகக்கோப்பை: அர்ஜென்டினாவை பிரான்ஸ் வெளியேற்றியது எப்படி?
அவர், " பெல்ஜியத்தில் வளம் என்பது பணமும், விளையாட்டின் புகழும் ஆகும். உலகின் முதல் 20 பணக்கார நாடுகளில் ஒன்றாக பெல்ஜியம் உள்ள நிலையில், பெல்ஜியம் மக்கள் தங்கள் விளையாட்டை மிகவும் தீவிரமாக எடுத்துக்கொள்கின்றனர். 2010 கணக்கின்படி பெல்ஜியத்தில் 17,000 கால்பந்து கிளப்புகள் உள்ளன. இதில் கிட்டதட்ட 1.35 மில்லியன் பேர் உறுப்பினராக உள்ளனர். இது அந்நாட்டு மக்கள் தொகையில் 10 சதவீதமாகும்." என்று குறிப்படுகிறார்.
உலகக் கோப்பை செல்லும் அணி?
பெல்ஜியத்தை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு நுழைந்துவிட்டது பிரான்ஸ்.
இன்று (புதன்கிழமை) இங்கிலாந்து குரேஷியாவுடன் மோதுகிறது. இதில் வெல்லும் அணி இறுதிப் போட்டியில் பெல்ஜியத்துடன் மோதும்.
இருபது ஆண்டுகளுக்கு முன்பு ஒரே ஒரு முறை பிரான்ஸ் கால்பந்து உலகக் கோப்பையை வென்றது. பாரீசில் நடந்த அந்தப் போட்டியில் 3-0 என்ற கணக்கில் பிரேசிலை வீழ்த்தியது அது. வரலாறு திரும்புமா, அல்லது வேறு பாதையில் செல்லுமா? காத்திருந்து பார்ப்போம்.
பிற செய்திகள்:
- தாய்லாந்து குகை: மீட்புப்பணி வெற்றிகரமாக நிறைவு
- தண்ணீரில் அதிகரிக்கும் யுரேனியம் அளவு: ஓர் எச்சரிக்கை
- உப்பு தண்ணீரை பயன்படுத்தி பைக்கை ஓட வைத்த 10ம் வகுப்பு மாணவி
- உறங்கிய ரயில்வே ஊழியர், ஸ்தம்பித்து நின்ற ரயில்கள்: அச்சம் பரவிய நிமிடங்கள்
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக















Click it and Unblock the Notifications