For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

உலகின் மூத்த ‘கோமாளி’ கிரீக் காலமானார்

Google Oneindia Tamil News

நியூயார்க்: உலகிலேயே வயதான கோமாளி என்ற பெருமையைப் பெற்றிருந்த கிரீக் அமெரிக்காவில் காலமானார். அவருக்கு வயது 98.

வயது வித்தியாசம் பார்க்காமல் அனைவரும் பார்த்து ரசிக்கும் நபர் தான் கோமாளி. சர்க்கசில் கோமாளியின் சேட்டைகளைப் பார்ப்பதெற்கென்றே தனியாக ரசிகப் பட்டாளம் ஒன்று இருக்கும்.

அந்தவகையில், உலகிலே மிகவும் வயதான கோமாளி என்ற சாதனையைப் படைத்தவர் அமெரிக்கக் கோமாளியான கிரீக்.

World's Oldest Clown Dies at 98 in Montana

10 வயது முதலே...

1916-ம் ஆண்டு ஜூலை மாதம் 14-ந்தேதி பிறந்தவர் கிரீக்மோர். தனது 10 வயது முதற்கொண்டே கோமாளி வேஷம் போட்டு அனைவரையும் மகிழ்ச்சி படுத்தத் தொடங்கினார் கிரீக்.

கின்னஸ் சாதனை...

அமெரிக்காவில் உள்ள மோண்டானா மாநிலத்தில் வசித்து வந்தவர் கிரீக்மோர். கடந்த 2012-ம் ஆண்டு உலகிலேயே மிக அதிக வயதுடைய கோமாளி கலைஞன் என்ற கின்னஸ் சாதனை படைத்தார்.

மனைவியின் மரணம்...

அதே ஆண்டு அவரது மனைவி மரணமடைய, அதற்குப் பிறகு கோமாளி வேடம் அணிவதையே விட்டு விட்டார் கிரீக்.

இதய நோய்...

சமீப காலமாக இதய நோயால் அவதிப்பட்டு வந்த கிரீக், பில்லிங்சில் உள்ள தனது வீட்டில் சனிக்கிழமை இரவு காலமானதாக, அவரது மகன் டேவ் கிரீக்மோர் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளார்.

English summary
Floyd "Creeky" Creekmore, a former Montana rancher who held the record as the world's oldest performing clown, has died at age 98, his son said Tuesday
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X