நீ ஒரு அவமானம், இந்தியாவுக்கு ஓடு: இந்தியரை திட்டிய அயர்லாந்து பெண்

Posted By:
Subscribe to Oneindia Tamil

டப்லின்: அயர்லாந்தில் ரயிலில் அந்நாட்டு பெண் ஒருவர் இந்தியரை பார்த்து உன் நாட்டுக்கு திரும்பிப் போ என்று கூறி திட்டியபோது எடுக்கப்பட்ட வீடியோ வைரலாகியுள்ளது.

வெளிநாடுகளில் இந்தியர்களை திட்டுவது, தாக்குவது போன்ற சம்பவங்கள் அவ்வப்போது நடந்து வருகிறது. இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை அயர்லாந்தில் உள்ள லிம்மெரிக் கோல்பர்ட் நிலையத்தில் இருந்து ரயில் ஒன்று லிமெரிக் ஜங்கஷனுக்கு புறப்பட்டது.

'You are a disgrace, go back to India': Racial abuse by Irish woman

கூட்டம் இல்லாத அந்த ரயிலில் பயணம் செய்த இந்தியர் ஒருவர் காலியாக இருந்த இருக்கையில் தனது பையை வைத்தார். இதை பார்த்த அயர்லாந்து பெண்மணி ஒருவர் இந்தியர் மீது கோபம் அடைந்து திட்டினார்.

நீ ஒரு அவமானம், இந்தியாவுக்கு திரும்பிச் செல். இந்த ஆளின் அசிங்கமான தலையை பாருங்கள் என்று திட்டினார். இதை பார்த்து சக பயணி ஒருவர் இந்தியரின் உதவிக்கு வந்தார்.

அதற்கு அந்த பெண் கூறும்போது, அந்த நபர் உனக்கு ஆதரவாக வந்துள்ளார். காரணம் அவர் அசிங்கமாக உள்ளார் என்றார். இந்த சம்பவத்தை ரயிலில் பயணம் செய்த பயணி ஒருவர் தனது செல்போனில் வீடியோ எடுத்து ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ போலீசாரிடமும் அளிக்கப்பட்டுள்ளது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Your are a disgrace, go back to India, a woman on a train in Ireland shouted. The explicit racist comments were made at the India for placing a bag on an empty seat on a train.
Please Wait while comments are loading...