For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இந்து விரோதம்.. திமுக ஆட்சிக்கு ஆபத்து..ஸ்டாலின் உஷார்..எச்சரிக்கும் காடேஸ்வரா சுப்ரமணியம்

Google Oneindia Tamil News

பழனி: தமிழகத்தில் நடைபெறும் திமுக ஆட்சி இந்து விரோத அரசு என்றும், இந்து என்ற வார்த்தையையே உபயோகிக்க கூடாது என்றும் சொல்லும் நபர்களை வளர்த்து வரும் ஆட்சி என்றும் இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் கூறியுள்ளார்.

திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோவிலுக்கு இந்து முன்னனி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் வருகை தந்தார்‌. மலைக்கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார்.

பல நூறு ஆண்டுகளாக பழனி முருகன் கோவிலில் பின்பற்றப்படும் பழக்க வழக்கங்கள் மற்றும் பாரம்பரிய நடைமுறைகளை அழிக்க அதிகாரிகளும் திமுக அரசு முயற்சி செய்வதாக காடேஷ்வரா சுப்ரமணியம் குற்றம்சாட்டினார்.

சோவியத் யூனியன் வீழ்ந்த நிலைதான் இந்தியாவிலும் ஏற்படும்.. 'இந்தி திணிப்பு’ வேண்டாம்.. பொங்கிய வைகோ! சோவியத் யூனியன் வீழ்ந்த நிலைதான் இந்தியாவிலும் ஏற்படும்.. 'இந்தி திணிப்பு’ வேண்டாம்.. பொங்கிய வைகோ!

இந்து விரோத அரசு

இந்து விரோத அரசு

தமிழகத்தில் நடைபெறும் திமுக ஆட்சி இந்து விரோத அரசு என்றும், இந்து என்ற வார்த்தையையே உபயோகிக்க கூடாது என்றும் சொல்லும் நபர்களை வளர்த்து வரும் ஆட்சி என்றும் குற்றம் சாட்டினார். மதசார்பற்ற அரசு என்று சொல்லிக்கொள்ளும் முதல்வர் ஸ்டாலின், தமிழகத்தின் கோவில் வழிபாடுகளில் அரசும், அரசு அதிகாரிகளும் தலையிடுவதை கண்டிக்கவில்லை என்றும் அவர் கூறினார்.

இந்து முன்னணி போராட்டம்

இந்து முன்னணி போராட்டம்

பழனி கோவிலில் பல நூறாண்டு காலமாக நடைபெறும் வழிபாட்டு முறைகள் மற்றும் பாரம்பரிய பழக்க வழக்கங்களில் கோவில் அதிகாரிகள் தலையிட்டு அவற்றை அழிக்கும் நோக்கத்தில் செயல்படுவதாகவும் குற்றம்சாட்டினார். இந்தநிலை தொடர்ந்தால் பழனியில் இந்து முன்னணி சார்பில் போராட்டம் நடத்தப்படும் என்றும் தெரிவித்தார்.

மேலும் திமுக ஆட்சியை கவிழ்க்க தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் உடன் உள்ள கட்சித் தலைவர்களே காரணமாக இருப்பார்கள் என்றும், அந்த ஆபத்தை உணர்ந்து ஸ்டாலின் செயல்பட வேண்டும். இந்து சமய அறநிலையத்துறையை பிரித்து சைவ சமய அறநிலையத்துறை மற்றும் வைணவ சமய அறநிலையத்துறை என்று உருவாக்க வேண்டும் என்று திருமாவளவன் கூறியிருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

திருமாவளவன்

திருமாவளவன்

திருமாவளவன் சொல்வது போல் அவ்வாறு பிரித்தால் கிறிஸ்தவர்கள் இஸ்லாமியர்களை விட இந்துக்கள் சிறுபான்மை இனத்தவராக ஆகும் பொழுது தற்போது உள்ள இட ஒதுக்கீட்டு முறையை விட்டுக் கொடுக்க திருமாவளவன் சம்மதிப்பாரா? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஆன்மீக அரசு

ஆன்மீக அரசு

தி.மு.க அரசு ஆன்மீகத்திற்கு எதிரானது அல்ல. ஆன்மீகத்தை அரசியலுக்கும் சுயநலத்துக்கும் பயன்படுத்துவதற்கு எதிராக குரல் கொடுப்பது தான் தி.மு.க ஆட்சி. தமிழ் மண்ணின் சமய பண்பாட்டை அறிந்து தி.மு.க அரசு செயல்படுகிறது என்று மு.க ஸ்டாலின் கூறியுள்ளார். இந்த நிலையில் திமுக அரசு இந்து விரோத அரசு என்று குற்றம் சாட்டியுள்ளார் காடேஸ்வரா சுப்ரமணியம்

English summary
Hindu Munnani state president Kadeswara Subramaniam said, The DMK government in Tamil Nadu is an anti-Hindu government. and it is nurturing people who say that the word Hindu should not be used he added.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X