சென்னையில் பைக் ரேசின் போது விபத்து.. 13 வயது சிறுவன் உயிரிழப்பு.. சோகம்!
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம் இருங்காட்டுக்கோட்டையில் பைக்ரேஸ் பந்தயத்தில் பங்கேற்ற 13 வயது சிறுவன் விபத்தில் சிக்கி உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள இருங்காட்டு கோட்டையில் பைக் ரேஸ் போட்டிகள் நடைபெற்று வருகிறது. தனியாருக்கு சொந்தமான ரேஸ் மைதானத்தில் இந்த போட்டிகள் நடைபெற்று வருகிறது. இந்த மைதானத்தில் வாரத்தின் இறுதி நாட்களில் கார், பைக் ரேஸ் பந்தயங்கள் நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில், மெட்ராஸ் மோட்டார் ரேஸ் டிராக் சார்பில் 12 முதல் 17 வயதுக்குட்பட்டவர்களுக்கான பைக் ரேஸ் போட்டி நடைபெற்றது.

இந்த ரேஸ் போட்டியில் பெங்களூரை சேர்ந்த 13 வயது சிறுவன் ஸ்ரேயாஸ் ஹரிஸ் பங்கேற்று இருந்தார். தனது பிரிவுக்கான போட்டியில் 3-வது சுற்று ரேஸ் துவங்கியதும் பைக்குகள் சீறிப்பாய்ந்தன. அப்போது வளைவு ஒன்றில் திரும்பும் போது ஸ்ரேயாஸ் ஹரிஷ் ஓட்டிய பைக் சறுக்கியது. இதில் நிலை தாடுமாறி ஹரிஷ் கீழே விழுந்தார். இதில் ஹரிஷ் அணிந்து இருந்த ஹெல்மெட்டும் கழன்று விழுந்ததாக தெரிகிறது.
பின்னால் அதிவேகத்தில் வந்து கொண்டிருந்த பிற பைக்குகளும் அவர் மீது ஏறி இறங்கியதாக சொல்லப்படுகிறது. இதில் தலையில் ஹரிஷுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக சிவப்புக் கொடி காட்டப்பட்டு பந்தயம் நிறுத்தப்பட்டது. ஹரிசை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். எனினும் செல்லும் வழியிலேயே ஹரிஸ் பரிதாபாமாக உயிரிழந்தார்.
இதனால் அங்கு பெரும் சோகம் ஏற்பட்டது. தொடர்ந்து இன்று நடைபெற இருந்த போட்டிகளும் ரத்து செய்யப்பட்டது. 8 ஆம் வகுப்பு படித்து வந்த சிறுவன் ஸ்ரேயாஸ் ஹரிஷ், 2021 ஆம் ஆண்டு முதல் பைக் பந்தயத்தில் பங்கேற்று வந்துள்ளார். கடந்த மே மாதம் ஸ்பெயினில் நடைபெற்ற மினி ஜிபி ரேஸ் போட்டியில் பங்கேற்று பட்டம் வென்றுள்ளார். வரும் ஆகஸ்ட் மாதம் மலேசியாவில் நடைபெற இருந்த MSBK Championship (250cc category) போட்டியில் பங்கேற்கவும் தகுதி பெற்று இருந்தார்.
அதற்குள் இந்த துயர சம்பவம் நடைபெற்றுள்ளது பைக் ரேசர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 12-வயதுக்கு மேற்பட்டவர்கள் பைக் ரேசில் ஈடுபடுவதற்கான லைசன்களை FMSCI வழங்குகிறது. ரேஸ் டிரக்கில் இந்த லைசன்ஸ் பெற்ற சிறுவர்களும் பைக் ஓட்ட அனுமதி அளிக்கப்படுகிறது. எனினும் இந்த லைசன்சை கொண்டு சாலையில் பைக் ஓட்ட அனுமதி கிடையாது.
பைக் ரேசின் போது ஏற்பட்ட விபத்தில் சிக்கி 13-வது சிறுவன் உயிரிழந்ததற்கு மெட்ராஸ் மோட்டார் ஸ்போர்ட்ஸ் கிளப்பை சேர்ந் அஜித் தாமஸ் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், " இது ஒரு சோகமான சம்பவம். திறமையான ஒரு இளம் வீரரை நாம் இழந்து விட்டோம். ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம்" என்றார்.
-
வீட்டு கேஸ் சிலிண்டர் 14.2 கிலோ எடையில் விநியோகம் செய்யப்படுவது ஏன் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
சுப்மன் கில் ஆட்டத்தை பார்க்க வந்த சாரா டெண்டுல்கர்.. பாவமாக அமர்ந்திருந்த அர்ஜுன் டெண்டுல்கர் மனைவி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
எடப்பாடிக்கு அருகில் சீட்.. ஒரே விமானத்தில் பயணம்.. கடைசி நேரத்தில் பிளானை மாற்றிய உதயநிதி! -
ஸ்டாலினுக்கு இத்தகைய நடத்தை அழகல்ல.. நிர்மலா சீதாராமன் விளக்கம் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்!












Click it and Unblock the Notifications