காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் முதல்வர் மனைவி துர்கா ஸ்டாலின் வழிபாடு!
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் நேற்று வழிபாடு நடத்தினார்.
Recommended Video
உலக பிரசித்திப்பெற்றதும், சக்தி பீடங்களில் முதன்மையானதுமான காஞ்சிபுரம் காஞ்சி ஸ்ரீ காமாட்சியம்மன் கோவிலில் ஆஷாட நவராத்திரி உற்சவத்தில் காமாட்சி அம்மனையும், வராகி அம்மனையும் தரிசனம் செய்வது சிறப்பு. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் நேற்று காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலுக்கு வருகை தந்தார்.

காஞ்சி காமாட்சியம்மன் கோவிலில் பிரதான வாசலாக உள்ள கிழக்கு கோபுர வாசல் வழியாக தான் முக்கிய பிரமுகர்கள் முதல் பொது மக்கள் அனைவரும் கோவிலுக்குள் செல்வர். கோவிலுக்கு வருகைப் புரிந்த துர்கா ஸ்டாலின், மேற்கு கோபுர வாசல் வழியாக உள்ளே சென்று பின்னர் பேட்டரி கார் மூலம் காமாட்சியம்மன் மூலஸ்தானம் அமைந்துள்ள பகுதிக்கு வந்தடைந்தார்.

பின்னர் காமாட்சியம்மன் கோவிலில் நடைபெற்ற ஆஷாட நவராத்திரியை ஒட்டிய சிறப்பு அலங்காரத்தில் வீணையுடன் காட்சி அளித்த காமாட்சி அம்மனையும், வராகி அம்மனையும் அவர் வழிபட்டார் சிறப்பு பூஜைகளிலும் அவர் பங்கேற்றார். பின்னர் கோவில் தங்க கொடி மரத்தின் அருகே சென்று வழிபட்ட துர்கா ஸ்டாலின், கோவில் நிர்வாகம் சார்பில் வழங்கப்பட்ட பிரசாதங்களை பெற்றுக் கொண்டார்.
அத்துடன் கோவிலுக்கு தரிசனம் செய்ய வந்த பெண்களுடனும் துர்கா ஸ்டாலின் சிறிது நேரம் உரையாடினார்.
-
அப்பன் மகனுக்கு சம உரிமை கொடுக்க இது என்ன குடும்ப சொத்தா? கே.என்.நேரு குறித்து திருச்சி சூர்யா -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
திமுக தொண்டர்களுக்கு டபுள் ட்ரீட்.. கருணாநிதியின் 103வது பிறந்தநாள் விழாவில் ஸ்டாலின் மெகா விழா -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்?












Click it and Unblock the Notifications