ரோஜா கூட ஒன்னா இருக்க முடியல.. இ-பாஸும் கிடைக்கல.. தூக்கில் தொங்கிய புது மாப்பிள்ளை.. காஞ்சி சோகம்!

இ-பாஸ் கிடைக்காத விரக்தியில் இளைஞர் தற்கொலை செய்து கொண்டார்

Subscribe to Oneindia Tamil

காஞ்சிபுரம்: "ரோஜா கூட ஒன்னா இருக்க முடியலயே" என்று மனம் புழுங்கியபடியே இருந்திருக்கிறார் விக்கி... பிரசவ நேரத்தில் மனைவி பக்கத்தில் கூட இருக்க முடியவில்லையே என்ற வேதனையிலும், இ-பாஸ்-ம் கிடைக்காத விரக்தியிலும் விக்கி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சோக சம்பவம் காஞ்சிபுரத்தில் நடந்துள்ளது.

காஞ்சிபுரம் மாகாளியம்மன் கோவில் பகுதியை சேர்ந்தவர் விக்கி.. காஞ்சிபுரத்தில் உள்ள தனியார் சாயப்பட்டறை கம்பெனியில் கூலி வேலை பார்த்து வந்தார். இவருக்கு கடந்த வருடம் ரோஜா என்பவருடன் கல்யாணம் நடந்தது.. ரோஜா சென்னை தாம்பரத்தை சேர்ந்தவர்.. சில மாதங்களுக்கு முன்பு ரோஜா கர்ப்பமானார்.. அதனால் தாய் வீட்டுக்கு அனுப்பி வைத்திருந்தார்.

 e pass: youth suicide near kanchipuram

இந்நிலையில் ஒருசில நாட்களில் பிரசவம் ஆக போவதாக விக்கிக்கு போன் செய்து மாமியார் வீட்டில் சொன்னார்கள்.. பிரசவ நேரத்தில் மனைவியுடன் இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்ட விக்கி,சென்னை செல்ல இ -பாஸ் பதிவு செய்தார்.. ஆனால் அனுமதி மறுக்கப்பட்டுவிட்டது.

இதனால் கடுமையான விரக்தி இருந்தார்.. கடந்த 20-ம் தேதி இவர்களது முதலாம் ஆண்டு கல்யாண நாள் வந்தது.. அப்போதாவது மனைவியுடன் சேர்ந்து இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார்.. அதுவும் நடக்கவில்லை.. அதனால் மனம் உடைந்த விக்கி, வீட்டில் நேற்றிரவு தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இந்நிலையில், இன்று காலை ரோஜாவுக்கு பிரசவ வலி வரவும் செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் குடும்பத்தினர் அனுமதித்துவிட்டு, விக்கிக்கு போன் செய்தனர்.. அப்போது அவர் போன் எடுக்காததால், நண்பருக்கு போன் செய்து என்ன ஏதென்று பார்க்க சொன்னார்கள்.. அந்த நண்பர் வந்து பார்த்த பிறகுதான், விக்கி தூக்கில் தொங்கியது தெரியவந்தது. உடனடியாக சிவ காஞ்சி போலிசாருக்கு தகவல் சொல்லப்பட்டது.

அவர்கள் விரைந்து வந்து உடலை போஸ்ட் மார்ட்டம் கொண்டு சென்றனர்.. பிரசவத்தின்போது, தன் கூடவே இருக்க வேண்டும் என்று ரோஜா ஆசைப்பட்டு சொல்லிகொண்டே இருந்தாராம்.. அதைகூட நிறைவேற்ற முடியவில்லையே என்பது தான் விக்கிக்கு தாங்க முடியாத சோகத்தை தந்துவிட்டதாக கூறுகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+