மாமியார் பேச்சை கேட்காதே! வயிறு எரியுது! பிள்ளைகளுக்கு தமிழ் பெயர் வைங்க! அமைச்சர் அன்பரசன் உருக்கம்!
காஞ்சிபுரம்: பிள்ளைகளுக்கு தமிழ் பெயர்களை வைக்க வேண்டும் என பெற்றோர்களுக்கு உருக்கமுடன் வேண்டுகோள் விடுத்துள்ளார் அமைச்சர் தாமோ அன்பரசன்.
பெரும்பாலானோர் பிள்ளைகளுக்கு தமிழ் பெயர்களை சூட்ட முன்வராததை நினைக்கும் போது தனக்கு வயிறு எரிவதாகவும் வேதனைத் தெரிவித்தார்.
போகிற போக்கை பார்த்தால் நாளடைவில் தமிழ் பெயர்களே மறைந்துவிடுமோ என அச்சம் இருப்பதாக அமைச்சர் தாமோ அன்பரசன் தெரிவித்துள்ளார்.

தமிழ் மொழி
சிறு குறு மற்றும் நடுத்தர தொழில்துறை அமைச்சர் தாமோ அன்பரசனை பொறுத்தவரை தமிழ் மொழி மீது தீராத பற்றும் பாசமும் கொண்டவர். தங்கள் வீட்டு பிள்ளைகளுக்கு தமிழில் பெயர்களை சூட்டியிருப்பதோடு தன்னை பெயர் வைக்குமாறு கட்சியினர் அழைத்தால் அவர்கள் வீட்டு பிள்ளைகளுக்கும் அழகான தமிழ் பெயர்களை மட்டுமே சூட்டக்கூடியவர். இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் நடைபெற்ற வளைகாப்பு நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், பிள்ளைகளுக்கு தமிழ் பெயர்களை வைக்க வேண்டும் என பெற்றோர்களுக்கு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மாமியார் பேச்சு
தமிழ் பெயர்கள் வைக்கும் விவகாரத்தில் மாமியார் பேச்சு, ஜாதககாரர் பேச்சு, என யார் பேச்சையும் கேட்க வேண்டாம் என்றும் தமிழில் எத்தனையோ அழகான பெயர்கள் இருப்பதாகவும் எடுத்துக் கூறினார். பெரும்பாலானோர் பிள்ளைகளுக்கு தமிழ் பெயர்களை சூட்ட முன்வராததை நினைக்கும் போது தனக்கு வயிறு எரிவதாகவும் வேதனைத் தெரிவித்தார்.

அமைச்சர் வேண்டுகோள்
அண்மையில் கூட தாம் பங்கேற்ற பள்ளி நிகழ்ச்சி ஒன்றில் 50 மாணவர்களிடம் பெயர்களை கேட்டபோது அதில் 4 மாணவர்கள் பெயர்கள் மட்டுமே தமிழில் இருந்ததாகவும் மற்ற பெயர்கள் எல்லாம் மற்ற மொழிகளில் இருந்து வைக்கப்பட்டிருந்தது எனவும் கவலை தெரிவித்தார் அமைச்சர் தாமோ அன்பரசன். தமிழ் பெயர்களை மாற்று மொழிகளின் ஆக்கிரமிப்பால் அழிய விட்டுவிடக் கூடாது என உருக்கமுடன் பெற்றோர்களுக்கு கோரிக்கை விடுத்த அவர் தமிழின் அருமை பெருமைகளை எடுத்துக் கூறினார்.

ஸ்டாலின் அறிவுரை
இதனிடையே திமுக நிர்வாகிகளின் இல்ல மண விழாக்களை தலைமை தாங்கி நடத்தி வைக்கும் போது மணமக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் வழங்கும் முக்கிய அறிவுரைகளில் ஒன்று, பிள்ளைகளுக்கு தமிழ் பெயர்களை சூட்டுங்கள் என்பதேயாகும். அமைச்சர் தாமோ அன்பரசன் விடுத்துள்ள இந்தக் கோரிக்கை காலத்தின் அவசியம் என்பது இங்கு கவனிக்கத்தக்கது.
-
தண்ணீர் பாட்டில் வீசுனாங்க.. ஆனால் இன்னைக்கு! ஓபிஎஸ் சொன்னதுமே ஸ்டாலின் கொடுத்த ரியாக்ஷன் -
தவெகவுக்கு தாவும் திண்டுக்கல் திமுக கவுன்சிலர்.. அவங்க அப்பா பெரிய புள்ளியாச்சே! பிரம்மாண்ட ப்ளான்! -
தவெக ஆட்சி முடிவில் தமிழக கடன் ரூ.20 லட்சம் கோடியாக உயரும்.. சவால்விட்டு சொன்ன தங்கம் தென்னரசு! -
'நான் முதல்வன்' திட்டத்தின் பெயரை மாற்றிய தவெக.. பழைய பதிவுகளை கூண்டோடு நீக்கிய விஜய்! -
'Sofa Model' தவெக ஆட்சியில் எம்எல்ஏ-க்களை கொள்முதல் செய்றாங்க.. உதயநிதி ஸ்டாலின் நேரடி அட்டாக்! -
வெளியே போறோம்..புரட்சி செய்யும் புதுக்கோட்டை மும்மூர்த்திகள்! சி.விஜயபாஸ்கருக்கு சிக்கல்! என்னாச்சு? -
சென்னை அதிர்ச்சி.. தமிழகத்தின் கஜானா காலிக்கு காரணம் இவரா? விஜய் வெளியிட்ட "வொயிட் பேப்பர்" ரகசியம் -
OG திமுக இதுதான்.. ரெண்டு பேருமே பெரிய தலக்கட்டாச்சே! மணி & கோவை தட்டித் தூக்கும் திமுக! பரபர கொங்கு -
காங்கிரஸ் செய்த கழுத்தறுப்புகள்.. ஆசிர்வாதம் செய்த ராகுல் காந்தி! விடாத திமுக.. குதிக்கும் தலைகள்! -
சைலண்ட் கில்லரான ஸ்டாலின்.. அதிமுக நிர்வாகிகளுக்கு பறந்த அழைப்பு.. தவெகவுக்கு செக் -
விஜய் சார் இதை மறந்துடாதீங்க.. திமுக ஐடி விங்க் வெளியிட்ட மீம் வீடியோ..! -
திமுக செய்த சாதனை.. உண்மையை ஒப்புக்கொண்ட TVK.. அப்போ பெண்களுக்கான 'இந்த' திட்டம் வருமா? வரதா?












Click it and Unblock the Notifications