எதை பத்தியும் கவலை இல்லை.. மாஸ்க்கும் போடல.. பிரதமர் பிறந்தநாள் விழாவில் இப்படியா? பாஜக தந்த ஷாக்
பாஜக விழாவில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமல் இருந்துள்ளனர்
காஞ்சிபுரம்: மாஸ்க் இல்லாமல், சமூக இடைவெளியும் கடைப்பிடிக்காமல் பாஜகவினர் பிரதமரின் பிறந்த நாள் விழா கொண்டாடி உள்ளனர்.. இது சம்பந்தமான வீடியோ வெளியாகி அதிர்ச்சியை தந்து வருகிறது.
Recommended Video
பிரதமர் மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு பல்வேறு இடங்களில் பாஜகவினர் ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக, காஞ்சிபுரம் மேற்கு பாஜக சார்பில், உதவி வழங்கும் விழா நடந்தது.. காஞ்சிபுரம் சாலை தெரு பகுதியில் நடந்த இந்த விழாவுக்கு, பாஜக காஞ்சி மேற்கு பெருநகர பொது செயலாளர் காஞ்சி ஜீவானந்தம் ஏற்பாடு செய்திருந்தார்.. மாவட்ட தலைவர் பாபு தலைமையில் இந்த விழா நடந்தது.
இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக பாஜக அரசு தொடர்பு பிரிவின் மாநில தலைவர் பாஸ்கரன் கலந்து கொண்டு சுமார் 300க்கும் மேற்பட்ட ஏழை எளியோருக்கு அரிசி,மளிகை பொருட்கள், காய்கறிகள், புடவைகள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மேலும் பள்ளி பயிலும் மாணவர்கள் பயன்பெறும் வகையில் இலவச நோட்டு புத்தகங்களையும் மாணவர்களுக்கு அவர் வழங்கினார்.

இந்த விழாதான் தற்போது சர்ச்சையாகி வருகிறது.. இதில் பங்கேற்ற எந்த பாஜக நிர்வாகியும், மாஸ்க் சரியாக போடாமல் இருந்துள்ளனர்.. சமூக இடைவெளியும் கடைப்பிடிக்காமல் நலத்திட்ட உதவிகளை மக்களுக்கு வழங்கி உள்ளனர்.. இந்த பொருட்களை பெற வந்த பொதுமக்களும் கூட்டம் கூட்டமாக குழுமி உள்ளனர்.. அவர்களும் சமூக இடைவெளியினை கடைபிடிக்காமல் ஒருவருக்கு ஒருவரை முண்டி அடித்து கொண்டு பொருட்களை வாங்கி சென்றுள்ளனர்.

நாடு முழுவதும் தொற்று பரவலை கட்டுபடுத்த சமூக இடைவெளி, முககவசம் உள்ளிட்டவைகளை முறையாக பின்பற்ற வேண்டும் என பிரதமர் மோடி கேட்டு கொண்டு வரும் நிலையில், அவரது பிறந்த நாள் விழா கொண்டாட்டத்திலேயே, அவரின் கட்சி முக்கிய நிர்வாகிகளே அதை பின்பற்றாமல் காற்றில் பறக்கவிட்டுள்ளது பல தரப்பினருக்கு அதிர்ச்சியை தந்து வருகிறது. இது சம்பந்தப்பட்ட வீடியோவும் வைரலாகி வருகிறது.
-
22 எம்பிக்கள் உள்ள திமுக ஏன் பாஜகவை நோக்கி போகணும்? டெல்லி லாபிக்கு பிரபலம் கொடுத்த நச்சுப் பதிலடி -
அண்ணாமலைக்கும் - விஜய்க்கும் இடையேதான் போட்டி.. உடைத்து பேசிய அமர் பிரசாத் ரெட்டி! -
ஒரு மணி நேரம் நடந்த மீட்டிங்.. ரஜினிகாந்த் மருமகனுக்கு மிகப்பெரிய பொறுப்பை கொடுக்கும் அண்ணாமலை! -
பாஜகவும் திமுகவும் ஒன்னு.. டெல்லிக்கு அதிர்ச்சி கொடுத்த அமர் பிரசாத் ரெட்டி! அண்ணாமலையுடன் ஐக்கியம் -
திராவிட அரசியலை உடைத்த தவெக.. விஜய் வெற்றியால் டென்ஷனான பாஜக? சாணக்கிய அமித்ஷா அடுத்த பிளான் இதுதானா -
அமைதியோ அமைதி.. பிள்ளையைக் கிள்ளி விட்ட அண்ணாமலை! அரசியல் கட்சி அறிவிப்பு எப்போது? திடீர் ட்விஸ்ட்! -
பாஜக பல்ஸ் குறையுது.. கமலாலய செங்கல்லை ஒவ்வொன்றாக உருவும் அண்ணாமலை! பாஜக பி-டீமா வி தி லீடர்ஸ்? -
திராவிட நடுக்கம்! அண்ணாமலையின் வலையில் விழும் திமுக, அதிமுக புள்ளிகள்.. களமிறங்கும் மாஜி IAS, IPS! -
அமித்ஷா டெல்லி திரும்பியதுமே மாறிய கணக்கு.. புதுச்சேரி ரங்கசாமிக்கு க்ரீன் சிக்னல்.. யாரந்த 3 பேர் -
நீங்க கிளம்புங்க அண்ணாச்சி.. நயினாருக்கு டெல்லி தந்த ஷாக்! நாற்காலிக்கு சண்டை போடும் தாமரை சொந்தங்கள் -
அண்ணாமலையின் ஸ்கெட்ச்.. பாஜகவுக்கு இல்லை! அதிமுகவுக்குதான்! எடப்பாடி பழனிசாமி ஷாக்! -
காங்கிரஸின் டபுள் கேம்.. வேலையை காட்டிய ராகுல் காந்தியின் டீம்! கேரளாவில் ஷாக்












Click it and Unblock the Notifications