கால் வைக்கும் இடமெல்லாம் கன்னி வெடி! வரிசை கட்டும் வழக்குகள்! எடப்பாடி பழனிசாமிக்காக சிறப்பு பூஜை!

Subscribe to Oneindia Tamil

காஞ்சிபுரம் : எடப்பாடி பழனிசாமிக்காக பெற்ற காஞ்சிபுரம் வழக்கறுத்தீஸ்வரர் திருக்கோவிலில் யாக பூஜை செய்யப்பட்டு சிறப்பு பிரார்த்தனை நடத்தப்பட்டது. வழக்கறித்தீஸ்வரர் திருக்கோவிலில் பக்தர்கள் தங்களின் மனக்கவலையையும், தேவைகளையும் இந்த கோயிலில் உள்ள சிவபெருமானிடம் கூறினால் அவர் அதை உடனடியாக தீர்த்து வைப்பார் என்பது நம்பிக்கை.

அதிமுக இடைக்கால பொதுச் செயலாளராக பொறுப்பேற்று இருக்கும் எடப்பாடி பழனிச்சாமி அடுத்ததாக சில நாட்கள் இடைவெளியில் தேர்தலை சந்தித்து கட்சியின் நிரந்தர பொதுச் செயலாளராக பதவி ஏற்பதற்கான தீவிரமான முன்னேற்பாடுகளை செய்து வருகிறார்.

ஆனாலும் அதிமுக அதிகாரம் கையில் இருந்தாலும் அடுத்தடுத்து நெருக்கடிகள் வரிசை கட்டி வருவதால் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளராக இருக்கும் எடப்பாடி பழனிச்சாமி கடும் அதிருப்தியில் இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

எடப்பாடி பழனிச்சாமி

எடப்பாடி பழனிச்சாமி

அதிமுகவை பொறுத்தவரை எடப்பாடி பழனிச்சாமிக்கு எப்போதும் தலைவலி தான். ஓ.பன்னீர்செல்வம், சசிகலா, டிடிவி தினகரன், தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு விவகாரம் என அடுத்தடுத்து ஏதாவது ஒரு சிக்கல் எழுந்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கும் முன்னர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிரான நெடுஞ்சாலை துறை டெண்டர் முறைகேடு புகார் தொடர்பாக விஜிலென்ஸ் கமிஷனர் மேல் நடவடிக்கை எடுக்க தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது. இதனால் அவருக்கு கூடுதல் நெருக்கடி உருவாகியுள்ளது.

புதிய வழக்கு

புதிய வழக்கு

இதேபோல் எடப்பாடி பழனிசாமி தமிழக மு​தல்வராக இருந்தபோது தமிழகம் முழுவதும் 11 இடங்களில் புதிதாக கட்டப்பட்டன. அவ்வாறு 11 ​அரசு மருத்துவக் கல்லூரி​​யில்​​ மிகப்பெரிய ஊழல் நடைபெற்றதற்கான முகாந்திரம் இருப்பதாக புகார்கள் எழுந்துள்ளன. இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட இருக்கும் நிலையில், எடப்பாடி பழனிசாமி மீது வழக்கு பதிவு செய்து அவரை சிறையில் அடைக்க வேண்டும் என ஓ பன்னீர்செல்வம் தரப்பு ஆதரவாளரான புகழேந்தி உள்ளிட்டவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதுவும் அவருக்கு சிக்கலை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது.

வழக்கறுத்தீஸ்வரர் திருக்கோவிலில்

வழக்கறுத்தீஸ்வரர் திருக்கோவிலில்


இந்நிலையில் எடப்பாடி பழனிசாமிக்காக காஞ்சிபுரம் வழக்கறுத்தீஸ்வரர் திருக்கோவிலில் யாக பூஜை செய்யப்பட்டு சிறப்பு பிரார்த்தனை நடத்தப்பட்டது. பக்தர்கள் தங்களின் மனக்கவலையையும், தேவைகளையும் இந்த கோயிலில் உள்ள சிவபெருமானிடம் கூறினால் அவர் அதை உடனடியாக தீர்த்து வைப்பார் என்று நம்பப்படுகிறது. இந்த கோயிலில் ஏராளமான அரசியல் மற்றும் கலை பிரபலங்கள் வந்து தங்களின் வழக்குகள் தீரச் சிறப்பு யாகங்களைச் செய்துள்ளனர்.

பூஜை மற்றும் சிறப்பு வழிபாடு

பூஜை மற்றும் சிறப்பு வழிபாடு

அந்த வகையில் தான் இந்த கோவிலில் எடப்பாடி பழனிசாமிக்காக பூஜை மற்றும் சிறப்பு வழிபாடு நடந்துள்ளது. இதனை எடப்பாடி பழனிசாமியின் தீவிர ஆதரவாளரும் அண்ணா தொழிற்சங்க பேரவையின் மாநில தலைவர் தாடி மா.ராசு நடத்தியுள்ளார். இது குறித்துப் பேசியுள்ள அவர், முன்னாள் தமிழக முதல்வரும் எதிர்க்கட்சித் தலைவரும் இடைக்கால பொதுச் செயலாளருமான கே.பழனிசாமி அவர்கள் தலைமையில் வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் 40 இடங்களிலும் அமோக வெற்றி பெறவும், சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற மீண்டும் அதிமுக ஆட்சி தமிழகத்தில் மலர வேண்டும் எனவும் வேண்டி பிரசித்தி பெற்ற காஞ்சிபுரம் வழக்கறித்தீஸ்வரர் திருக்கோவிலில் யாக பூஜை செய்யப்பட்டு சிறப்பு பிரார்த்தனை நடத்தப்பட்டது என்றார்.

 ஆன்மீக நாட்டம்

ஆன்மீக நாட்டம்

தற்போது மட்டுமல்லா எப்போதுமே எடப்பாடி பழனிசாமி ஆன்மீக நாட்டம் கொண்டவர் தான், கடந்த சில நாட்களுக்கு முன்னர் கூட வளர்பிறை பஞ்சமியை முன்னிட்டு அஷ்ட வாராஹி அம்மன் கோவிலில் நடந்த சிறப்பு வழிபாட்டில் எடப்பாடி பழனிசாமி சாமி கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தார். வராஹி வழிபாடு மேற்கொண்டால் மிகவும் சிறப்பானதாக கருதப்படுகிறது. குறிப்பாக பஞ்சமி திதி அமாவாசை மற்றும் ஜாதகத்தில் லக்னத்திற்கு குரு ஆறாம் இடத்தில் ஆட்சி அல்லது உச்சம் பெற்று பிறந்தவர்கள் வராஹி வழிபாடு மேற்கொள்ளும் போது தோல்வி கூட தோற்றே விடும் என்கின்றனர்.

 ஆன்மீக நாட்டம்

ஆன்மீக நாட்டம்

தற்போது அதிமுகவில் அடுத்தடுத்து சிக்கல்களை சந்தித்து வரும் எடப்பாடி பழனிச்சாமி பயம் தெளிந்து மனதில் துணிச்சல் தைரியம் தன்னம்பிக்கை பிறக்க வழிபாடு மேற்கொண்டதாக தகவல்கள் வெளியாகின. மேலும் அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொள்ளச் சென்ற போது, அவரது வீட்டில் யாகம், பூஜைகள் ஆகியவை நடைபெற்றன. இந்நிலையில் தற்போது வழக்குகளிலிருந்து வெளிவரவும், புதிய வழக்குகளில் சிக்காமல் இருக்கவும் எடப்பாடி பழனிசாமிக்காக வழக்கறித்தீஸ்வரர் திருக்கோவிலில் யாக பூஜை செய்யப்பட்டு சிறப்பு பிரார்த்தனை நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+