எல்லாமே ’அதுக்காக’ தான்.. ஆட்டைய போட்டு எஞ்சாய் செய்த ஜோடி! மிளகாய் பொடி கேடி..கதிகலங்கிய குமரி!

Subscribe to Oneindia Tamil

கன்னியாகுமரி : கன்னியாகுமரி மாவட்டத்தில் பெண்களிடம் நகைகளை பறித்து கள்ளக்காதல் ஜோடி ஒன்று ஊர் ஊராக சுற்றி வந்தது காவல்துறையினர் நடத்திய விசாரணையில் தெரிய வந்திருக்கிறது. அற்ப சந்தோஷத்திற்காக திருட்டில் ஈடுபட்ட கள்ளக்காதல் ஜோடி தற்போது கம்பி எண்ணி வருகிறது.

கன்னியாகுமரி அருகே அறுமனை பகுதியைச் சேர்ந்த பெட்டிக்கடை நடத்தி வரும் கிறிஸ்டினா என்ற பெண்ணின் கடைக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு ஆணும் பெண்ணும் இருசக்கர வாகனத்தில் வந்தனர்.

பழம் வேண்டும் என கிறிஸ்டினாவிடம் கேட்ட அவர்கள் திடீரென மின்தடை ஏற்பட்டபோது அவர் கழுத்தில் அணிந்து இருந்த தங்க நகையை பறித்து விட்டு தப்பினர். அப்போது அந்த பெண்ணின் செருப்பு அங்கேயே விழுந்தது

நகை பறிப்பு

நகை பறிப்பு

இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில் தக்கலை பகுதியிலும் ஒரு ஆணும் பெண்ணும் பெண் ஒருவரிடம் நகையை பறித்துச் சென்றனர். இதனால் இரு குற்ற சம்பவங்களிலும் ஈடுபட்டது ஒரே கும்பலாக இருக்கலாம் என சந்தேகத்த போலீசார் தொடர்ந்து தமிழக கேரளா எல்லைப் பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர்.

கள்ளக்காதல் ஜோடி

கள்ளக்காதல் ஜோடி

அப்போது அவ்வழியாக வந்த ஆணையும் பெண்ணையும் பிடித்து விசாரணை நடத்திய போது இருவரும் கன்னியாகுமரியில் பெண்களை குறி வைத்து நகை பறிப்பில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்தது. மேலும் இருவரும் கள்ளக்காதல் ஜோடி என்பதும் சில இடங்களில் மிளகாய் பொடி தூவியும் நகையை பறித்தது தெரியவந்தது. கைது செய்யப்பட்டவர்களில் சதீஷ் என்பவர் கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பதும் பெண் சாந்தகுமாரி கேரள மாநிலம் ஆணை பாறை பகுதியைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது.

பணத்துக்காக திருட்டு

பணத்துக்காக திருட்டு

சதீஷ் தனது குடும்பத்துடன் வசித்து வந்ததும் சாந்தகுமாரி தனது கணவரை பிரிந்து வசித்து வந்துள்ளனர். திருவனந்தபுரத்தில் ஹோட்டலில் பணிபுரிந்த போது ஜவுளிக்கடையில் பணிபுரிந்த சாந்தகுமாரியுடன் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. இதை அடுத்து இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்துள்ளனர். வேலைக்கு செல்லாமல் பல இடங்களில் சுற்றி திரிந்ததால் அவர்களுக்கு பணம் தேவைப்பட்டுள்ளது. இதை எடுத்து பணத்துக்காக நகையை தேட முடிவு செய்த அவர்கள் ஊர் சுற்றும் இடங்களில் எல்லாம் தனியாக இருக்கும் பெண்களை குறி வைத்து நகையை பறித்துள்ளனர்.

போலீசார் விசாரணை

போலீசார் விசாரணை

அப்படித்தான் கிறிஸ்டினா மற்றும் தக்கலை பகுதியில் வசிக்கும் பெண்ணிடம் அவர்கள் நகையை பறித்தது தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து நகை இரு சக்கர வாகனம் உள்ளிட்ட அவற்றை பறிமுதல் செய்துள்ளனர். மேலும் வேறு எங்கெல்லாம் அவர்கள் கைவரிசை காட்டி இருக்கிறார்கள் என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+