கொட்டி தீர்த்த மழை.. தனித்தீவுபோல் மாறிய குமரி.. வெள்ளத்தில் சிக்கி தவிக்கும் தோட்ட தொழிலாளர்கள்!
சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த 10 நாட்களுக்கு மேலாக கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. தொடர்ந்து கனமழை பெய்யும் என்று எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை உள்பட 16 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலும் கடந்த சில நாட்களாக பேய் மழை வெளுத்து வாங்கியது.
நாகர்கோவில் மற்றும் அதன் பல்வேறு சுற்றுப்புற பகுதிகளிலும் மழை வெள்ள சேதம் ஏற்பட்டது. மழை காரணமாக நாகர்கோவில்-திருவனந்தபுரம் சாலை முற்றிலுமாக முடங்கியுள்ளது. இந்த பகுதிகளில் சாலை போக்குவரத்து, ரயில் போக்குவரத்து முழுவதுமாக பாதிக்கப்பட்டுள்ளது,

போக்குவரத்து தடை
இதேபோல் கன்னியாகுமரி மாவட்டத்தில் மலை பகுதிகளான கரும்பாறை, மாறாமலை உட்பட பல்வேறு பகுதிகளிலும் மழை காரணமாக வனப்பகுதியில் சாலைகள் துண்டிக்கப்பட்டு போக்குவரத்து முழுவதுமாக தடைப்பட்டுள்ளது.

மண்சரிவு
கரும்பாறை எஸ்டேட் பகுதியில் 70-க்கும் மேற்பட்ட தனியார் தோட்டங்கள் உள்ளன. இங்கு இரண்டாயிரத்திற்கு மேற்பட்டோர் பணிபுரிந்து வருகிறார்கள். தற்போது பெய்துள்ள மழை காரணமாக கடந்த நான்கு நாட்களுக்கு முன் சாலைகளில் விரிசல், மண்சரிவு அதே போன்று பெரிய பாறைகள் சாலைகளில் விழுந்து காணப்படுவதால் போக்குவரத்து முழுமையாக துண்டிக்கப்பட்டுள்ளது.

காட்டாற்று வெள்ளம்
வனப்பகுதியில் 10-க்கும் மேற்பட்ட பகுதிகளில் முழுவதுமாக சாலை காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டும் உள்ளது. இதனால் தற்போது தொழிலாளர்கள் அந்த பகுதிக்கு செல்ல முடியாத சூழ்நிலையும் தோட்டங்களில் உள்ள தொழிலாளர்களும் தோட்ட உரிமையாளர்களும் அங்கிருந்து வெளியே வரமுடியாத சூழலுக்கும் உள்ளாகியுள்ளனர்.

மாவட்ட வனத்துறை கூறுவது என்ன?
அப்பகுதிகளை மாவட்ட வனத்துறை அலுவலர் மற்றும் வனத்துறை ஊழியர்கள் சென்று பார்வையிட்டனர். மேலும் அப்பகுதியில் உள்ள பாதிக்கப்பட்ட நபர்களுக்கு உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்கள் கொண்டு செல்லவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட வனத்துறை அலுவலர் இளையராஜா தெரிவித்துள்ளார்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications