• search
கன்னியாகுமரி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஏன்னா நீ என்ன லவ் பண்றல்ல.. ‘அந்த’ இடத்தில் பச்சை குத்திக்கோ! ‘வல்லவன்’ பாணியில் சைக்கோவான ’காதலன்’!

Google Oneindia Tamil News

கன்னியாகுமரி : கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே தான் காதலித்த பெண்ணை சந்தேகப்பட்டு வந்த காதலன் அவரது மார்பில் தன்னுடைய பெயரை பச்சை குத்திக் கொள்ளுமாறு வற்புறுத்திய சம்பவத்தில் காவல்துறையினர் அந்த இளைஞரை கைது செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

சமூக வலைதளங்கள் பெருகிவிட்ட இந்தக் காலத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை மற்றும் வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வருவது பெற்றோர்கள் சமூக ஆர்வலர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

பேஸ்புக், இன்ஸ்டாகிராம், ஆகிய சமூக வலைதளங்களில் எப்போதுமே மூழ்கிக் கிடக்கும் பெண்களை கவனிக்க அவர்கள் பெற்றோர் மறந்து விடுவதால் பாதை மாறிச்சென்று சில நேரங்களில் சிக்கல்கள் சிக்கிக் கொள்ளும் சம்பவங்களும் நடந்து தான் வருகிறது.

 அப்பாடா, நிம்மதி.. 9 பேருக்கு குரங்கு அம்மை பாதிப்பு இல்லை-மகாராஷ்டிரா சுகாதாரத்துறை அறிவிப்பு அப்பாடா, நிம்மதி.. 9 பேருக்கு குரங்கு அம்மை பாதிப்பு இல்லை-மகாராஷ்டிரா சுகாதாரத்துறை அறிவிப்பு

இளம் பெண்

இளம் பெண்

அந்த வகையில் கன்னியாகுமரியில் இளம் பெண் ஒருவர் தனது பெற்றோர் கூறிய சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே பூ வியாபாரம் செய்து வரும் 28 வயதான ஒரு இளைஞர், பூ வேலை இல்லாத காலங்களில் அருகில் உள்ள ஊருக்கு கூலி வேலைக்கு செல்வது வழக்கம். அவ்வாறு செல்லும் போது அதே பகுதியைச் சேர்ந்த இரண்டாம் ஆண்டு படித்து வரும் கல்லூரி மாணவி ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இளைஞருடன் காதல்

இளைஞருடன் காதல்

தொடர்ந்து சமூக வலைதளங்களிலும் செல்போன் எண்ணையும் பரிமாறிக் கொண்டு பேசி வந்த அவர்களுக்கு இடையே நல்ல நட்பு ஏற்பட்ட நிலையில் திடீரென அந்த மாணவியை காதலிப்பதாக அந்த இளைஞர் கூறியுள்ளார். முதலில் மாணவி மறுத்த நிலையில் பின்பு தொடர்ந்து அவர் வற்புறுத்தியதால் ஒரு வழியாக காதலிப்பதாக அந்த மாணவியும் கூறியுள்ளார். இதை அடுத்து பல இடங்களுக்கு சென்று காதலை வளர்த்து வந்துள்ளனர்.

காதல் டார்ச்சர்

காதல் டார்ச்சர்

நாட்கள் செல்லச் செல்ல அந்த மாணவியை மிகவும் தீவிரமாக காதலிப்பதாக கூறிய அந்த இளைஞர் யாருடனும் பேசக்கூடாது எங்கும் நிற்கக்கூடாது உள்ளிட்ட கடும் கட்டுப்பாடுகளை விதிக்கத் தொடங்கியுள்ளார். சில நேரங்களில் மாணவி எங்கு சென்றாலும் அவரை பின்தொடர்வது கைகளை கிழித்து கொள்வது என சைக்கோ தனங்களை காட்டியதோடு நீ இல்லை என்றால் நான் உயிரோடு இருக்க மாட்டேன் என அடுக்கடுக்காய் வசனம் பேசி அந்த மாணவியை டார்ச்சர் செய்து வந்துள்ளார்.

 மார்பில் பச்சை

மார்பில் பச்சை

இந்த நிலையில் மாணவி தன்னை மட்டும்தான் காதலிக்கிறாரா அல்லது வேறு யாருடன் பழகுகிறார் என்ற சந்தேகம் அந்த இளைஞருக்கு வரத் தொடங்கியுள்ளது. இதனையடுத்து மாணவி தன்னை உண்மையாக காதலிக்கிறாரா என்பதை தெரிந்து கொள்ள வேண்டும் என நினைத்த அவர் மாணவியின் மார்பில் தனது பெயரை பச்சை குத்திக் கொள்ள வேண்டும் எனக் கூறியுள்ளார். நாளுக்கு நாள் இவரது டார்ச்சர் அதிகமாகி செல்வதை கண்டு பயந்து போன அந்த பெண் இதுகுறித்து தனது பெற்றோரிடம் கூறியுள்ளார்.

 காவல் நிலையத்தில் புகார்

காவல் நிலையத்தில் புகார்

இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவியின் தந்தை இது குறித்து மார்த்தாண்டம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரை பெற்றுக் கொண்ட போலீசார் அந்த இளைஞரை பிடித்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். விசாரணையில் மாணவியைத் தான் தீவிரமாக காதலிப்பதாகவும் அவர் கிடைக்கவில்லை என்றால் தான் தற்கொலை செய்து கொள்வேன் எனக்கூறி போலீசாரே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார். இதனிடையே அந்த இளைஞனுக்கு கவுன்சிலிங் கொடுக்கும் நடவடிக்கைகளில் போலீசார் இறங்கி உள்ளதாக கூறப்படுகிறது.

English summary
The lover was suspicious of the woman he loved near Marthandam in Kanyakumari district. The police arrested the young man for forcing his girlfriend to get his name tattooed on her chest, which has caused a lot of shock
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X