கன்னியாகுமரி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கோவிலுக்கு ''கோ தானம்'’ வழங்கிய ஓ.பி.எஸ்.இளைய மகன்..!

Google Oneindia Tamil News

கன்னியாகுமரி: சுசீந்தரத்தில் உள்ள தாணுமாலயன் சுவாமி கோவிலுக்கு ஓ.பன்னீர்செல்வத்தின் இளையமகன் ஜெயபிரதீப் பசுவையும், கன்றையும் தானமாக வழங்கியுள்ளார்.

சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகிய மும்மூர்த்திகளும் இணைந்த உருவமமே தாணுமாலயன். கன்னியாகுமரி-நாகர்கோவில் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள இந்தக் கோயிலில் தான் தேவத்தூதர்களின் தலைவன் இந்திரனுக்கே விமோசனம் கிடைத்ததாக கூறப்படுவது உண்டு.

Ops son donate cow to the dhanumalayan temple

இந்நிலையில், தாணுமாலயன் கோயிலுக்கு சென்ற ஓ.பன்னீர்செல்வத்தின் இளையமகன் ஜெயபிரதீப் பசுவையும் கன்றையும் தானமாக வழங்கி வேண்டுதலை நிறைவேற்றியுள்ளார்.

ஓ.பி.எஸ்.வீட்டில் எல்லோரையும் விடவும் ஆன்மீகத்தில் அதிகம் ஈடுபாடு கொண்டவர் ஜெயபிரதீப். அவரை அவரது ஆதரவாளர்கள் ஆன்மீகச் செம்மல் என்று அழைக்கத் தொடங்கியுள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஓ.பி.எஸ்.ஸின் குலதெய்வக் கோயிலுக்கு தேவையான உதவிகளை பார்த்து பார்த்து செய்பவர் ஓ.பி.ஜெயபிரதீப்.

அதிமுக தனித்து செயல்பட வேண்டும்.. வழக்கம் போல் பாஜகவுக்கு எதிராக பேசும் சுப்பிரமணியன் சுவாமிஅதிமுக தனித்து செயல்பட வேண்டும்.. வழக்கம் போல் பாஜகவுக்கு எதிராக பேசும் சுப்பிரமணியன் சுவாமி

தானங்களிலேயே மிகவும் சிறந்தது எனக் கூறப்படுவது கோ தானம் மட்டுமே. மனதில் நினைத்த காரியம் வெற்றிக்கரமாக முடிய கோ தானம் செய்வது வாழக்கம். மேலும், சுபகாரியங்கள் நடக்கவும், பாவ விமோசனம் பெறவும் கோ தானம் செய்யக்கூடும்.

Ops son donate cow to the dhanumalayan temple

இப்படி பல்வேறு சிறப்புகள் கொண்ட அந்த தானத்தை ஜெய பிரதீப் செய்துள்ளார் என்றால் அதன் பின்னணி இல்லாமலா இருக்கும் எனக் காதைக் கடிக்கின்றனர் தேனி திமுகவினர். தந்தைக்கு முக்கியப் பதவி கிடைக்க வேண்டும் என்பதற்காகவும், அரசியல் பாதையில் தனக்கு குறுக்கீடுகள் வரக்கூடாது என்பதற்காகவும் தான் அவர் கோ தானம் செய்ததாக கூறுகின்றனர்.

கடவுளை வேண்டினால் கூட அதற்கு காரணம் கற்பிப்பதா..? இது போன்று உங்களிடம் பேசுபவர்களை நினைத்தால் வருத்தமாக தான் இருக்கிறது என பதில் அளிக்கிறது ஜெயபிரதீப் வட்டாரம் .

English summary
Ops son JayaPradeep has donated A cow to the Dhanumalayan temple
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X