ஓரு நாள் கூரை மேல் இருந்து சேவல் கூவும்! அப்போது அதிகாரம் கைக்கு வரும்! குமரியில் கொந்தளித்த சீமான்!
கன்னியாகுமரி : அடிப்படை வசதியை ஏற்படுத்தி கொடுக்கமால் இலவசத்தை கொடுத்து மக்களை ஏமாற்றி வருகிறார்கள் எனவும், இந்த நாட்டின் குடியரசு தலைவருக்கு கிடைக்கும் மருத்துவம் கடை கோடியில் வசிக்கும் மக்களுக்கு கிடைக்க வேண்டும் அது தான் இலவசம் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளார் சீமான் கூறியுள்ளார்.
Recommended Video
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடற்கரை நிலத்தை இந்திய அருமணல் ஆலைக்கு கொடுப்பதை கண்டித்தும் மலைகளை உடைத்து கேரளாவுக்கு கனிமவள கொள்ளை நடப்பதாகவும் நாம் தமிழர் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டது.
கன்னியாகுமரி மாவட்டம் திங்கள் சந்தை பகுதியில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கட்சியினர் கலந்து கொண்டனர்.

நாம் தமிழர் சீமான்
ஆர்ப்பாட்டத்தில் பேசிய சீமான்," நாங்கள் எதை கேட்கோறோமோ அதை அரசு செய்யவில்லை எனவும், இலவசம் கொடுத்து 50 ஆண்டுகால இந்த இரு கட்சிகளும் மாறி மாறி கொடுத்து ஏமாற்றி வருகிறது. அடிப்படை வசதியை ஏற்படுத்தி கொடுக்கமால் இலவசத்தை கொடுத்து மக்களை ஏமாற்றி வருகிறார்கள்.

இலவசம்
கமிஷன் அதிகம் பெறவே ஆட்சியாளர்கள் அதிக இலவச திட்டங்களை கொண்டு வருகின்றனர். ஒரு குடும்பத்தை நடத்த முடியாமல் மக்கள் திணறும் நிலை இந்த ஆட்சியில் நடந்து வருகிறது. இந்த நாட்டின் குடியரசு தலைவருக்கு கிடைக்கும் மருத்துவம் கடை கோடியில் வசிக்கும் மக்களுக்கு கிடைக்க வேண்டும் அது தான் இலவசம்.

இலவச பேருந்து வேண்டாம்
மிக்சி, கிரைண்டர் அல்ல. எல்லத்தையும் இலவசமாக கொடுக்கும் அரசு தண்ணீரை மட்டும் விற்பனை செய்து வருகின்றது. உயர் நிறுவனங்களுக்கு கொடுக்கும் தடையற்ற மின்சாரத்தை மக்களுக்கு கேட்கிறோம். எங்களுக்கு இலவச பேருந்து வேண்டாம். படித்து விட்டு லட்ச கணக்கான இளைஞர்கள் உள்ளனர்.

அதிகாரம் கைக்கு வரும்
அவர்களுக்கு வேலை வாய்ப்பு இல்லை. இலவசம் பெறாமல் வாழ்க்கை தரத்தை உயர்த்த முயற்சி மேற்கொள்ளுங்கள். ஒரு நாள் ஒரு கிலோ அரிசி வாங்கி வழி இல்லாத நிலைக்கு தள்ளி விட்டனர். இந்த சேவல் தற்போது கூண்டுக்குள் இருந்து கூவுகிறது. ஓரு நாள் கூரை மேல் இருந்து கூவும் அப்போது அதிகாரம் கைக்கு வரும்" என பேசினார்.
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications