சொந்த செலவில் கல்வி நிதியுதவி.. குமரியில் விஜய் வசந்த் எம்பி செய்த மாஸ் சம்பவம்!
குமரி: விஜய் வசந்த் எம்பி தனது சொந்த செலவில் இன்று பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கல்வி பயில்வதற்கு வசதியாக கல்வி நிதி உதவி வழங்கினார். 75 பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு சுமார் 7 லட்சத்து 85 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான கல்வி உதவியினை அவர் வழங்கினார். நாகர்கோவில் வெட்டுர்ணிமடம் சந்திப்பில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் இந்த நிதியை விஜய் வசந்த் வழங்கினார்.
மறைந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹெச் வசந்தகுமாரின் மகனும், குமரி நாடாளுமன்ற தொகுதி எம்பியுமான விஜய் வசந்த் எம்பி இன்று நாகர்கோவில் வெட்டுர்ணிமடம் சந்திப்பில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு இன்று தனது சொந்த செலவில் கல்வி நிதி உதவி வழங்கினார்.

மறைந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தெய்வத்திரு. H. வசந்தகுமார் அவர்களின் வழியினை பின் தொடர்ந்து கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் அவர்கள் எல்லா வருடமும் ஏழை பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கல்வி நிதியுதவி வழங்கி வருகிறார்.
நடப்பு கல்வி ஆண்டிலும் விண்ணப்பங்கள் பெறப்பட்டு, ஆராய்ந்து பார்த்த பின் 75 பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு சுமார் 7 லட்சத்து 85 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான உதவி தொகை இன்று வழங்கப்பட்டது. மாணவர்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர் இன்று அதற்கான காசோலையை கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் அவர்களிடம் இருந்து பெற்று கொண்டனர்.
நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் தனக்கு கிடைக்கும் ஊதியம் அனைத்தும் மக்களின் கல்வி, மருத்துவ செலவுகளுக்கு அவர் எல்லாம் வருடமும் வழங்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிகழ்ச்சியில் மாநகர மாவட்ட காங்கிரஸ் தலைவர் நவீன்குமார், முன்னாள் மாவட்ட தலைவர் ராதாகிருஷ்ணன், மாநில செயலாளர் வழக்கறிஞர் சீனிவாசன், கிழக்கு மாவட்ட வர்த்தக காங்கிரஸ் தலைவர் டாக்டர் சிவக்குமார், மாநகர இளைஞர் காங்கிரஸ் மாவட்ட தலைவர் டைசன், மாநகர மகிளா காங்கிரஸ் தலைவி சோனி விதுலா மற்றும் மாமன்ற உறுப்பினர்கள், வட்டார தலைவர்கள், வார்டு உறுப்பினர்கள் ஏராளமான காங்கிரஸ் கட்சியினர் கலந்து கொண்டனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications