மெட்ராஸ் படம் போல் சுவற்றுக்காக சண்டை... கரூரில் திமுக - பாஜக இடையே மல்லுக்கட்டு
கரூர்: சுவர் விளம்பரம் எழுதுவதில் திமுக மற்றும் பாஜகவினர் இடையே மோதல் ஏற்பட்டு இருதரப்பினரும் போலீசார் முன்பே கைகலப்பில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
கரூர் மாநகராட்சிக்குட்பட்ட சர்ச் கார்னர் பகுதியில் உள்ள கோட்டாட்சியர் அலுவலத்தின் சுற்றுச்சுவரில் திமுகவினர் விளம்பரம் எழுதிக் கொண்டிருந்தனர். அப்போது அதற்கு எதிர்ப்பு தெரிவித்த பாஜகவினர் தாங்கள் அந்த இடத்தில் விளம்பரம் செய்ய உள்ளதாக கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டு உள்ளனர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இரு தரப்பினருக்கும் இடையே சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பேச்சுவார்த்தைக்கு உடன்படாத இரு கட்சியினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. திடீரென கரூர் மாவட்ட பாஜகவை சேர்ந்த மாநகர மற்றும் ஒன்றிய செயலாளர்கள் சாலையில் இறங்கி திமுகவினருக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது, பாஜக நிர்வாகியின் செல்போனை திமுகவினர் பறித்துக் கொண்டதாக கூறி பாஜகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சுவர் விளம்பரம் வரைவதில் தொடங்கிய பிரச்சனை செல்போன் பறிப்பு பிரச்சனையாக உருமாறி பாஜகவை சேர்ந்தவர்கள் ஒருபக்கம் சாலை மறியலில் ஈடுபட, மறுபக்கம் திமுகவைச் சேர்ந்த மாநகராட்சி பொறுப்பாளர்கள், மாநகராட்சி கவுன்சிலர்கள் சாலையில் இறங்கி பாஜகவினருக்கு எதிராக முழக்கமிட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக சிறிது நேரம் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற கரூர் மாவட்ட பாஜக தலைவர் செந்தில்நாதன் போலீசாருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். அதன் தொடர்ச்சியாக திமுக - பாஜக ஆகிய இரு தரப்பினரையும் போலீசார் தனித்தனியாக அழைத்து சென்று 2 வது முறையாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து இருதரப்பினரும் கலைந்து சென்றனர்.
-
தாத்தா காலத்து பாலிடிக்ஸ் வேலைக்கு ஆகாது! உதய் போடும் மாஸ்டர் ப்ளான்! இனி Gen Z ஸ்டைல் தானாமே! -
"இது அதுல்ல?.. ஜனநாயகத்தை சிதைப்பதில் பாஜகவும் தவெகவும் ஒண்ணு” - திமுக சரமாரி அட்டாக்! -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
Annamalai: புதிய கட்சியா.. பாஜகவில் நீடிப்பாரா.. நாளை 12 மணிக்கு முடிவை அறிவிக்கும் அண்ணாமலை? -
அமித் ஷாவுக்கே அடங்காத அண்ணாமலை! சைலண்டாய் டெல்லியில் பார்த்த வேலை! ஆர்வக்கோளாறில் ஆதரவாளர்கள்! -
அண்ணாமலை விலகுகிறாரா இல்லையா.. நாளை உடையும் மர்மம்.. டெல்லியில் நாளுக்கு நாள் உச்சம்பெறும் டிராமா! -
மம்தாவிற்கு பேரிடி.. 60 எம்எல்ஏக்களை தொடர்ந்து 20 எம்பிக்களை தூக்கும் பாஜக? காலியாகும் தி.காங்கிரஸ் -
பாஜகவில் இருந்து விலகினாரா அண்ணாமலை? அப்படி எதுவும் தகவல் இல்லையே!முழு பூசணிக்காயை மறைத்த நயினார்! -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்?












Click it and Unblock the Notifications