கரூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கரூர் மாணவி தற்கொலை.. காவல் நிலையத்தில் நடந்த கொடூரம்.. மாணவியின் தாயார் கண்ணீர்மல்க பேட்டி!

Google Oneindia Tamil News

கரூர்: கரூர் பரணி பார்க் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்த மாணவி நேற்று முன்தினம் வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். தற்கொலை செய்து கொள்வதற்கு முன்னதாக ''பாலியல் துன்புறுத்தலால் தற்கொலை செய்துகொள்ளும் கடைசிப் பெண் நானாகத்தான் இருக்க வேண்டும்" என அவர் கடிதம் எழுதி வைத்து இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Recommended Video

    Karur பள்ளி மாணவியின் தாயார் கண்ணீர்மல்க பேட்டி | Oneindia Tamil

    சென்னைவாசிகள் கவனத்திற்கு.. இன்னும் 3 நாட்களுக்கு கனமழை இருக்காம்.. தமிழ்நாடு வெதர்மேன் கணிப்பு! சென்னைவாசிகள் கவனத்திற்கு.. இன்னும் 3 நாட்களுக்கு கனமழை இருக்காம்.. தமிழ்நாடு வெதர்மேன் கணிப்பு!

    மகளின் மரணத்திற்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென மாணவியின் தாயார், வெங்கமேடு காவல் நிலையத்தில் புகார் அளிக்க அன்று இரவு தன்னுடைய உறவினர்களை அழைத்துக்கொண்டு சென்றார்.

    மாணவியின் தாயார்

    மாணவியின் தாயார்

    அப்போது போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணதாசன் புகார் மனுவைப் பெறாமல் பாதிக்கப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்தவர்களைத் தகாத முறையில் பேசியதோடு, புகார் அளிக்க வந்த மாணவியின் உறவினரை அடித்து உதைத்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் வெங்கமேடு காவல் நிலையத்தில் நடந்தது என்ன? என்பது குறித்து மாணவியின் தாயார் பரபரப்பு பேட்டி அளித்துள்ளார். அப்போது அவர் கூறியாதவது:-

    தவறாக பேசினாங்க...

    தவறாக பேசினாங்க...

    பாப்பா இறந்து விட்டது, புகார் அளிப்பதற்காக வெங்கமேடு காவல் நிலையத்திற்கு 4 பேர் சென்று இருந்தோம். 3 பேரை ரொம்ப அடிச்சாங்க, என்னை கேட்க கூடாத கேள்விகளை எல்லாம் கேட்டாங்க, இரவு 10 மணிக்கு போயிட்டு அதிகாலை 5.30 மணி வரை காவல் நிலையத்தில் உட்கார வைத்திருந்தார்கள், காலை 10.30 மணிக்கு பாப்பாவை கொடுத்தார்கள் யாருக்கும் காட்டவில்லை, என் தங்கச்சி, அவங்க அத்தை எல்லோரும் பின்னாடி ஓடி வந்தார்கள்,

    ஸ்கூல் மேலதான் சந்தேகம்

    ஸ்கூல் மேலதான் சந்தேகம்

    யாருக்கும் காட்டவில்லை, வேகமாக ஆம்புலன்ஸ் சென்று விட்டது. எங்க பாப்பா நல்லா படிப்பா, லீவு போட மாட்டா, கெமிஸ்ட்ரி வகுப்பு வரும் போதெல்லாம் ஸ்கூலுக்கு போக அடம் பிடிப்பா, விருப்பம் இல்லாத மாதிரியே அடம் பிடிப்பா, வீட்டுக்கு வந்த பிறகு கெமிஸ்ட்ரி புக் எல்லாம் கிழிச்சு போட்டுருவா, அதை வெச்சு தான் கண்டு பிடிச்சோம். ஸ்கூல் மேல தான் எங்களுக்கு சந்தேகம் இருக்கு, கடைசியாக ஸ்கூல் போகும் போது சந்தோஷமா சிரிச்சுகிட்டு தான் போனா, வீட்டுக்கு பஸ்ல வரும் போது அழுதுகிட்டு வந்திருக்கா,

    கெமிஸ்ட்ரி ஆசிரியர்

    கெமிஸ்ட்ரி ஆசிரியர்

    ஸ்கூல்ல வீடியோவில் பார்த்த போது ஜன்னல் ஓரத்தில் சோகமா உட்காந்து வந்திருக்கா, எப்பவும் அப்படி இருக்க மாட்டா, சந்தோஷமா இருப்பா, ஸ்கூல்ல கெமிஸ்ட்ரி சார் மேல தான் சந்தேகப்படுறோம், கெமிஸ்ட்ரி பாடத்தில் மட்டும் தான் அப்படி பன்னுகிறாள், வேற எந்த பாடத்திலும் அப்படி இல்ல, நிறைய ஆதாரங்கள் எடுத்து வைத்திருக்கிறோம்,

    நியாயம் கிடைக்கனும்

    நியாயம் கிடைக்கனும்

    போலீசார் விசாரிக்கராங்க எதுவும் சொல்லல, என் பொண்ணுக்கு நியாயம் கிடைக்கனும் என் பொண்ணுக்கும் நடந்த மாதிரி யாருக்கும் நடக்க கூடாது, என் பொண்ணு டாக்டர் ஆகனும்கற கனவ நிறைவேற்ற முடியல, இந்த ஆசையாவது நிறைவேற்ற வேண்டும் என்று நினைக்கிறேன். என் பொண்ணோடு இது கடைசியா இருக்கனும். வேற எதுவும் வேண்டாம். 10 மாதம் சுமந்து பெத்ததுக்கு இது மட்டும் நிறைவேறினால் போதும் என்று கதறி அழுதபடி மாணவியின் தாயார் கூறினார்.

    English summary
    What happened at Karur Vengamedu police station? The mother of a schoolgirl who committed suicide has given a sensational interview. She told that this suicide of my daughter should be the last one.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X