கரூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

முதல்வர் ஸ்டாலின் வாக்குறுதி..கரூர் மக்களுக்கு விரைவில் நற்செய்தி வரும்.. சொல்கிறார் செந்தில் பாலாஜி

Google Oneindia Tamil News

கரூர்: கரூருக்கு விரைவில் விமான நிலையம் வந்து விடும் என்று தமிழ்நாடு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்தார். கரூர் - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் புத்தாம்பூர் அருகே ஒருங்கிணைந்த ஜவுளி பூங்கா வளாகத்தில் கரூர் மாவட்டம் கைத்தறி மற்றும் துணிநூல் துறை சார்பில் தொழில் முனைவோர் மற்றும் நெசவாளர்களுடான ஆலேசானை கூட்டம் நடைபெற்றது.

சூப்பர்..! 5 ஆண்டுகளுக்கு பின் ஜெயலலிதா இருந்த.. அதே அப்பல்லோவில் இரண்டாம் இன்னிங்ஸை தொடங்கிய சசிகலாசூப்பர்..! 5 ஆண்டுகளுக்கு பின் ஜெயலலிதா இருந்த.. அதே அப்பல்லோவில் இரண்டாம் இன்னிங்ஸை தொடங்கிய சசிகலா

இந்த நிகழ்ச்சியில் கைத்தறி மற்றும் ஜவுளி துறை அமைச்சர் காந்தி, மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, கைத்தரி மற்றும் ஜவுளி துறை அணையர் பீலாராஜேஷ் மற்றும் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் ஆகியோர் பங்கேற்றனர்.

முதல்வர் சிறப்பாக செயல்படுகிறார்

முதல்வர் சிறப்பாக செயல்படுகிறார்

அப்போது கூட்டத்தில் கைத்தறி மற்றும் ஜவுளித் துறை அமைச்சர் காந்தி பேசுகையில், 'கொரோனா கால கட்டத்தில் முதல்வராக பொறுப்பேற்று அனைத்து துறைகளிலும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். பதவி ஏற்ற சில நாட்களிலேயே துறையில் நடைபெறும் குறைகளை கேட்டு, நடவடிக்கைகள் எடுக்க சொன்னார் முதல்வர். டெக்ஸ்டைல்ஸ் 450 கோடி வர்த்தகம், 4500 பேர் தொழிலில் நேரடியாக ஈடுபட்டு, ஒன்றரை லட்சம் பேர் மறைமுகமாகவும் ஈடுபட்டுள்ளனர்.

கருணாநிதியை விட அதிகம்

கருணாநிதியை விட அதிகம்

நிச்சயமாக எந்த கோரிக்கையாக இருந்தாலும் நடவடிக்கைகள் எடுக்கப்படும். கருணாநிதி ஆட்சியிலும் சரி, தற்பொழுதும் ஸ்டாலின் ஆட்சியிலும் சரி சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம். தொழில் வளர்ச்சிக்கு என்ன தேவை என்பதை தெரிந்து வைத்துள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின். கருணாநிதி, அண்ணாவை விட அதிகம் தெரிந்து வைத்துள்ளார் என்று கூறினார்,.

சாயப்பட்டறை பூங்கா

சாயப்பட்டறை பூங்கா

இதனை தொடர்ந்து மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியதாவது:- கரூர் மாவட்டத்தில் ஜவுளி துணி, கொசுவலை, பேருந்து கூண்டு கட்டுதல் பிரதான தொழிலாக உள்ளது. ஜவுளித் துறைக்கு முக்கியமான சாயப்பட்டறை பூங்கா அமைப்பது கடந்த காலத்தில் செயல்படுத்த முடியாத நிலையில், தற்போது அது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

கரூருக்கு விமான நிலையம்

கரூருக்கு விமான நிலையம்

நிச்சயம் முதல்வர் ஜவுளி பூங்காவிற்கு அனுமதி அளித்து, நிதியையும் ஒதுக்குவார். தொழில் வளர்ச்சி பெற வேண்டும், விவசாயமும் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற நோக்கில் சாயப்பட்டறை பூங்கா அமைக்கப்படும்.தேர்தல் அறிக்கையில் முதல்வர் கூறியது போல கரூர் மாவட்டத்தில் விமானம் நிலையம் அமைக்க வழி வகை செய்யப்படும். 100 % வளர்ச்சி பெற்ற மாவட்டமாக கரூர் மாறும் என்று செந்தில் பாலாஜி கூறினார்.

English summary
Tamil Nadu Electricity Minister Senthilbalaji has said that an airport would be set up in Karur soon
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X