கரூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அப்பட்டமான புறக்கணிப்பு.. ஜோதிமணிக்கு செக் வைக்கும் "சீனியர்கள்"?.. என்ன நடக்கிறது கரூரில்?

கரூர் மாவட்ட காங்கிரஸ் கட்சியில் கோஷ்டி பூசல் பெருகி வருகிறது

Google Oneindia Tamil News

கரூர்: காங்கிரஸ் கட்சி தலைவர் அழகிரியின் பிறந்தநாளை முன்னிட்டு, கட்சியினர் கரூரில் ஒட்டிஉள்ள போஸ்டர்களால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.. அந்த போஸ்டரில் எம்பி ஜோதிமணியின் பெயரையே காணோம்... என்ன காரணம்?

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் கேஎஸ் அழகிரியின் பிறந்த நாளை முன்னிட்டு கரூர் மாவட்டத்தில் அவரது விசுவாசிகள் போஸ்டர்களை ஒட்டி உள்ளனர்..

பொள்ளாச்சி பலாத்கார வழக்கு.. கைதானவர்களுக்கு சாலையோரம் கொடுத்த 'சலுகை..' 7 போலீசார் அதிரடி சஸ்பெண்ட் பொள்ளாச்சி பலாத்கார வழக்கு.. கைதானவர்களுக்கு சாலையோரம் கொடுத்த 'சலுகை..' 7 போலீசார் அதிரடி சஸ்பெண்ட்

அதில், பெரிய சைஸில் அழகிரியின் போட்டோ இடம்பெற்றுள்ளது.. அதற்கடுத்தபடியாக, சோனியா காந்தி, ராகுல் காந்தி, முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரம், முன்னாள் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் போன்றோரின் போட்டோக்கள் உள்ளன..

 ஜோதிமணி

ஜோதிமணி

ஆனால், மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவர் சின்னசாமி போட்டோவை காணவில்லை.. அதேபோல, கரூர் எம்பி ஜோதிமணியின் போட்டோவும் இடம் பெறவில்லை.. அதேபோல் மாவட்ட தலைமை நிர்வாகிகள் பெயர்கூட இடம்பெறவில்லை... போஸ்டரை ஒட்டிய 8 பேரின் போட்டோக்களும் அதில் இடம்பெற்றுள்ளன. இதுதான் சர்ச்சையை கூட்டி வருகிறது.. ஜோதிமணியை அப்பட்டமாக கரூர் மாவட்டம் புறக்கணிக்கிறதா? என்ற சந்தேகத்தை இந்த வால்போஸ்டர்கள் கிளப்பி விட்டு வருகின்றன..

 செல்வாக்கு

செல்வாக்கு

ஜோதிமணியை பொறுத்தவரை கரூர் மாவட்டத்தில் செல்வாக்கு மிக்கவர்.. எளியோர்களிடம் இனிமையாகவும், இயல்பாகவும் பேசக்கூடியவர்.. தொகுதியில் இறங்கி வேலை செய்யக்கூடியவர்.. கட்சி பணியாற்றி ராகுல் காந்தியின் நேரடியான நன்மதிப்பை பெற்றவர்.. அதே மாவட்டத்தில் சீனியரான தம்பிதுரையை பலமுறை நேரடியாகவே விமர்சித்தவர்.. அவரை எதிர்த்து களம் கண்டவர்.. தோல்வியை அடுத்தடுத்து அன்றைய தேர்தல்களில் தழுவினாலும், தொடர்ந்து அதிமுகவுடனான மோதல் போக்கை வெளிப்படுத்தி, கட்சியின் செயல்பாடுகளை தீவிரமாக மேற்கொண்டு வந்தார்.. ஆனால், ஜோதிமணிக்கு கட்சிக்குள்ளேயே புகைச்சல்கள் பெருகி கொண்டே வந்துள்ளன..

பதிவு

பதிவு

சட்டமன்ற தேர்தல் சமயத்திலும் இந்த அதிருப்தியை ஜோதிமணி வெளிப்படையாகவே வெளிப்படுத்தி இருந்தார்.. "காங்கிரஸ் கட்சிக்காக உழைப்பவர்களுக்கு மரியாதை இல்லை... பணம் கொடுப்பவர்களுக்கே தேர்தலில் போட்டியிட கட்சி வாய்ப்பு வழங்குகிறது.. தலைவர் ராகுல்காந்தி பணம் தான் பிரதானமென நினைத்திருந்தால் இன்று நான் எம்பி ஆகியிருக்க முடியாது.. இந்த தலைவர்கள் தொண்டர்களுக்கு மட்டுமல்ல தன்னை நம்பிய தலைவருக்கும் துரோகம் செய்கிறார்கள்...

 ரத்தம் கொதிக்கிறது

ரத்தம் கொதிக்கிறது

நமது கட்சியையும், நமது தலைவரின் கௌரவத்தையும் தொண்டர்களாகிய நாம் தான் காப்பாற்றிக்கொள்ள வேண்டும்... உண்மையான கட்சி விசுவாசிகளுக்கு கண்முன்னால் இழைக்கப்படும் துரோகத்தை கண்டு என்னுடைய ரத்தம் கொதிக்கிறது.. எனது யுத்தத்தை நான் தொடர்வேன்.. தொண்டர்களின் குரலாக தொடர்ந்து ஒலிப்பேன். நடப்பது நடக்கட்டும். எதிரிகளை மட்டுமல்ல, துரோகிகளையும் எதிர்கொள்ளும் வலிமை நமக்கு உண்டு" என்று கூறியிருந்தார்.

 அண்ணாமலை

அண்ணாமலை

ஜோதிமணியின் இந்த பதிவு மாநில தலைமைக்கு சற்று அதிர்ச்சியை தந்தாலும், ஜோதிமணி வெளிப்படுத்திய அதிருப்தி ஓரளவு நியாயமானதாகவே பெரும்பாலானோரால் பார்க்கப்பட்டது.. இது கோஷ்டி பூசலை மேலும் வளர்க்க காரணமாகிவிட்டது.. அதையடுத்து ஜோதிமணியை எதிர்த்தே அரசியல் செய்யும் போக்கு அதிகமானது.. சமீபத்தில் அண்ணாமலையை பாஜக மாநில தலைவராக நியமனம் செய்தபோதே, தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவராக அதே கரூர் மாவட்டத்தை சேர்ந்த ஜோதிமணியின் பெயரும் அடிபட்டது..

 முன்னெடுப்புகள்

முன்னெடுப்புகள்

நீண்ட காலம் பரிந்துரையிலும் ஜோதிமணியின் பெயர் இடம் பெற்று வருகிறது.. இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான், மீண்டும் ஜோதிமணியை புறக்கணிக்கும்படியான வால்போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. எம்பி தேர்தலுக்கு மாநிலங்கள் தயாராகி வரும் நிலையில், தமிழகத்தின் பிரதான கட்சிகளும் அதற்கான முன்னெடுப்புகளை இப்போதே தொடங்கி உள்ளன..

எதிர்பார்ப்பு

எதிர்பார்ப்பு

அந்த வகையில் வலு பொருந்திய பாஜகவை எதிர்கொள்ள தமிழக காங்கிரஸ் கட்சி பலத்துடன் தயாராக வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகி உள்ளது.. இந்த சூழலில், கோஷ்டி பூசலை தகர்த்து, மாநில தலைமை பொறுப்பை ஏற்பது யாராக இருக்கும்? பாஜகவுக்கு செக் வைக்க போகும் அந்த காங்கிரஸ் கட்சி தலைவர் யாராக இருக்கும்? என்ற எதிர்ப்பார்ப்பு கிளம்பி உள்ளது.

English summary
Viral Wall Posters against Karur Congress MP Jothimani and Local politics
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X