For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

துபாயில் கூத்தாநல்லூர் எமிரேட்ஸ் ஆர்கனைசேஷனின் இஃப்தார் நிகழ்ச்சி

By Siva
Google Oneindia Tamil News

துபாய்: துபாயில் கூத்தாநல்லூர் எமிரேட்ஸ் ஆர்கனைசேஷன் (கேஇஓ) வருடாந்திர ஒன்று கூடல் மற்றும் இஃப்தார் நிகழ்ச்சி 02/06/2017 வெள்ளிக்கிழமை மாலை தேரா, லேண்ட்மார்க் பிளாசா ஹோட்டலில் நடைபெற்றது.

துவக்கமாக கேஇஓ கெளரவ ஆலோசகர் முஹம்மது சிராஜுதீன் இறைவசனங்களை ஓதினார். கேஇஓ கெளரவ ஆலோசகர் கே. எம். அஹ்மது மைதீன் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார். அவர் தனது உரையில், ஊரின் ஒற்றுமையின் அவசியம் குறித்தும், குறிப்பாக இளைஞர்கள் ஒன்று பட்டு செயல் ஆற்றிட அழைப்பு விடுத்தார்.

KEO throws Iftar party in Dubai

கேஇஓ கெளரவ ஆலோசகர் பி.ஏ. ரபீக் முஹம்மது கேஇஓ ஆற்றிவரும் நலப்பணிகள் குறித்து மிகவும் தெளிவாக விவரித்தார்.

இஃப்தார் பேருரை நிகழ்த்திய மெளலான மெளலவி எ. அப்துல் அஜீஸ் பாகவி (தலைமை இமாம், கரும்புக்கடை பள்ளிவாசல், கோவை) அவர்கள் தனது உரையில், ஒன்று கூடல் நிகழ்ச்சியின் அவசியம் குறித்தும் கூத்தாநல்லூரின் பெருமைகள் குறித்தும் மேலும் இஸ்லாம் காட்டித்தரும் சமூக சிந்தனைகள் குறித்தும் மிகவும் அற்புதமாக எடுத்துரைத்தார்கள்.

KEO throws Iftar party in Dubai

அவர்களை தொடர்ந்து சகோதரர் மகரூப் காக்கா என்று அன்புடன் அழைக்கப்படும் அவர்கள் சிறுதுநேரம் இஸ்லாம் காட்டிய நல்வழிகள் குறித்து எடுத்துரைத்தார்கள்.

இறுதியாக கேஇஓவின் செயலாளர் என்.எம்.இ. தாஹிர் அலி அவர்கள் வருகை தந்த அனைவருக்கும் நன்றி கூறினார். கேஇஓ வின் தலைவர் கோஸ். நூருல் அமீன் அவர்கள் நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கினார். துஆவுடன் கூட்டம் இரவு நேர விருந்துதடன் இனிதே நிறைவுற்றது.

KEO throws Iftar party in Dubai

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கேஇஓ சங்க நிர்வாகிகள் செய்திருந்தனர். இந்நிகழ்ச்சியில் கூத்தாநல்லூர் சகோதரார்கள் மற்றும் பிற சங்க நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Koothanallur Emirates Organisation(KEO) threw an iftar party in Dubai on june 2nd.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X