அடுத்தடுத்து மோதிய 12 வாகனங்கள்.. சென்னை - பெங்களூர் நெடுஞ்சாலையில் கோரம்.. ஒசூர் அருகே 5 பேர் பலி
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே பேரண்டப்பள்ளியில் சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் 12 வாகனங்கள் அடுத்தடுத்து மோதி ஏற்பட்ட விபத்தில் 5 பேர் பலியாகினர். மேலும் 10 பேர் காயமடைந்து மருத்துவமனயைில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே பேரண்டப்பள்ளி வழியாக சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. தேசிய நெடுஞ்சாலை என்பதால் இந்த ரோட்டில் வாகனங்கள் அதிவேகமாக சென்று வருகின்றனர்.

இந்நிலையில் தான் பேரண்டப்பள்ளி வனப்பகுதியில் தற்போத மேம்பாலம் பணி நடந்து வருகிறது. பணியாளர்கள் வேலை செய்து வருவதால் அந்த பகுதியில் வாகனங்கள் மெதுவாக சென்று வரும் வகையில் தற்காலிகமாக வேகத்தடை அமைக்கப்பட்டுள்ளன.
திடீரென்று வேகத்தடைகள் அமைக்கப்பட்டுள்ளதாலும் பல வாகன ஓட்டிகளுக்கு அது தெரியவில்லை. வேகத்தடை அருகே சென்ற பிறகு தான் வாகன ஓட்டிகள் அதனை பார்க்கின்றனர். இதனால் திடீரென்று பிரேக் போடுவதால் முன்னால் செல்லும் வாகனங்கள் மீது பின்னால் வரும் வாகனங்கள் மோதி வருகின்றன.
அந்த வகையில் இன்று வேகத்தடையை நெருங்கிய லாரி டிரைவர் திடீரென்று பிரேக் போட்டார். அப்போது அந்த லாரிக்கு பின்னால் வந்த வாகனங்கள் அடுத்தடுத்து மோதின. லாரி திடீரென்று நின்றதால் பின்னால் வந்த 8 வாகனங்கள், 2 லாரிகள், அரசு பஸ்கள் என மொத்தம் 12 வாகனங்கள் அடுத்தடுத்து மோதிக்கொண்டன.
இதில் 3 கார்கள் முற்றிலுமாக நொறுங்கியது. மேலும் காரில் பயணித்தவர்கள் காயமடைந்து துடிதுடித்தனர். இதையடுத்து அங்கிருந்தவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டனர். அப்போது துரதிர்ஷ்டவசமாக 5 பேர் இறந்திருந்தனர். காயமடைந்த 10 பேர் மீட்கப்பட்டு அருகே உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இந்த விபத்து காரணமாக சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்தில் சிக்கிய வாகனங்களை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரிசெய்யும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் பேரண்டப்பள்ளி பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி












Click it and Unblock the Notifications