அக்கா..ஒரு ரூபாய்க்கு ஒரு புடவையாம்! கடைகாரர்களை தெறிக்க விட்ட தாய்க்குலம்! கிறுகிறுத்த கிருஷ்ணகிரி!
கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி அருகே துணிக்கடை ஒன்றில் ஒரு ரூபாய்க்கு ஒரு புடவை வழங்கப்படும் என்ற விளம்பரத்தால் அந்த கடை முன்பு நூற்றுக்கணக்கான பெண்கள் குவிந்த நிலையில் அவர்களை கட்டுப்படுத்த முடியாமல் கடைக்காரர்களே திணறிய சம்பவம் அரங்கேறி இருக்கிறது.
தொழில்நுட்பம் வளர்ந்து விட்ட போதிலும் ஏதாவது ஒரு வகையில் விளம்பரம் செய்தால் தான் ஒரு பொருளையோ அல்லது ஒரு நிறுவனத்தின் தயாரிப்புகளையும் மக்களிடம் கொண்டு செல்ல முடியும் என்ற நிலை உள்ளது.
அந்தக் காலம் தொடங்கி இந்த காலம் வரை ஏதாவது ஒரு வகையில் விளம்பரம் தேவைப்படுகிறது தற்போது டிஜிட்டல் விபத்தில் செல்போன் பயன்படுத்துபவர்களை குறி வைத்து ஏராளமான விளம்பரங்கள் வருகின்றன.

துணிக்கடை விளம்பரம்
குறிப்பாக துணிக்கடை, உணவகங்கள் திறப்பு விழாவுக்கு தற்போது பல்வேறு யுக்திகள் கடைபிடிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் ஒரு ரூபாய்க்கு பிரியாணி 10 பைசாவுக்கு பிரியாணி ஒரு ரூபாய்க்கு டீசர்ட் என விளம்பரம் கொடுக்கப்படுவதும் அதனை வாங்குவதற்காக மக்கள் குவிவதும் அவர்களை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறுவதும் நடந்து தான் வருகிறது.

ஒரு ரூபாய்க்கு புடவை
சில இடங்களில் பிரச்சனை காரணமாக திறக்கப்பட்ட அன்று மூடப்பட்ட கடைகளும் உண்டு. இந்த நிலையில் அப்படி ஒரு சம்பவம் தான் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடந்திருக்கிறது. கிருஷ்ணகிரி கே தியேட்டர் சாலையில் அமைந்துள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா சில்க்ஸ் பிரபல ஜவுளி கடையின் இன்று முதலாம் ஆண்டை முன்னிட்டு ஜவுளிக்கடைக்கு முதலில் வரும் 500 வாடிக்கையாளர்களுக்கு ஒரு ரூபாய்க்கு புடவை, ஆட்டோ ஓட்டுநர்களுக்கு இலவச பேண்ட், ஷர்ட், மற்றும் பல்வேறு ஆபர்கள் வழங்கப்படும் என அறிவித்தது.

கூட்டம்
இதனை அடுத்து அதிகாலை முதல் கிருஷ்ணகிரி மற்றும் சுற்றுப்புறங்களைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள், முதியவர்கள்,ஆண்கள், கடை திறப்பதற்கு முன்பாகவே வாசலில் காத்திருந்தனர். கடை திறந்த பின் அலைமோதிய மக்கள் கூட்டம் கூட்டமாக முண்டியடித்துக் கொண்டு புடவைகளை வாங்க கடைக்குள் புகுந்தனர்.

மக்கள் அவதி
கூட்டத்தை கட்டுப்படுத்த ஜவுளிக்கடை நிறுவனம் சார்பில் 500க்கும் மேற்பட்ட பணியாளர்களை நியமிக்கப்பட்டு கூட்டத்தை கட்டுப்படுத்தினர். இதனால் அந்த இடமே கலவரக்காடாக காட்சியளித்தது. மேலும் சேலை வங்க வந்தவர்கள் தங்கள் வாகனங்களை அங்கேயே நிறுத்தியதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் அப்பகுதி மக்கள் கடும் அவதியடைந்தனர்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications