கோயிலில் அம்மன் தலைமேல் அமர்ந்து காட்சி அளிக்கும் நல்ல பாம்பு.. ஓசூர் அருகே ஆச்சர்யம்.. வீடியோ
கிருஷ்ணகிரி : ஓசூர் அருகே உள்ள இடை நல்லூரில் அமைந்துள்ள சௌடேஸ்வரி அம்மன் கோயிலில் நாகப்பாம்பு அம்மன் சிலை மீது அமர்ந்து பொதுமக்களுக்கு காட்சி அளிப்பதால் பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக வந்து அம்மனை தரிசித்துச் சென்றனர்.
Recommended Video
அம்மன்கோயில்களில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் திரளான பக்தர்கள் கூட்டம் வருவது உண்டு. அதிலும் மிகவும் பிரபலமான அம்மன் கோயில்களில் சொல்ல வேண்டியதே இல்லை. மக்கள் கூட்டம் மிகப்பெரிய அளவில் இருக்கும்.
ஏனெனில் பெண்கள் பலருககும் அம்மன் கவச பாடல்களை கேட்பது இனிமையான ஒன்றாக இருக்கும். அம்மனிடம் அடைக்கலம் புகுந்தால் குடும்பத்தில் நிம்மதியும் சந்தோஷமும் நீடித்து நிலைக்கும் என்பது அவர்களின் நம்பிக்கை எத்தனை வெள்ளிக்கிழமைகள் வந்தாலும் சரி, ஒவ்வொரு வெள்ளியுமே அம்மன் வழிபாடுக்கு சிறந்தது என்பது அவர்களின் நம்பிக்கையாகும். அன்றைய தினம் விரதம் இருந்து அம்பிகையை வழிபட்டால் இன்பங்கள் இல்லம் தேடி வந்து கொண்டேயிருக்கும் என்பது இறைநம்பிக்கை என்பதால் கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அன்று அலை மோதுகிறது.

மக்கள் ஆச்சர்யம்
இதனிடையே பக்தர்களை அதிசயிக்கும் வகையில் அவ்வப்போது சில கோயில்களில் வித்தியாசமான சம்பவங்கள் நடப்பது உண்டு அப்படித்தான் ஓசூர் அருகே உள்ள இடை நல்லூரில் அமைந்துள்ள சௌடேஸ்வரி அம்மன் கோயிலில் நாகப்பாம்பு அம்மன் சிலை மீது அமர்ந்து காட்சி தந்து ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது.

கோவில் கட்டினார்
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ளஇடை நல்லூரை சேர்ந்தவர் ரவி விவசாயி இவருடைய விளைநிலத்தில் அவர் சவுடேஸ்வரி அம்மன் கோவில் கட்டியுள்ளார் . கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.

திடீரென சத்தம்
இந்த நிலையில் நாற்பது நாட்கள் சிறப்பு பூஜை நாட்களாக சிறப்பு பூஜைகள் நடத்தி வருகின்றனர் இன்று அதிகாலை ரவி பூஜை செய்ய கோவிலுக்குச் சென்றபோது விக்ரகத்தில் இருந்து திடீரென என சத்தம் வந்துள்ளது.

நல்ல பாம்பு
திரும்பி பார்த்தபோது நாகப்பாம்பு படை எடுத்த படி அம்மன் சிலை மீது உட்கார்ந்திருந்தது இதை கண்டதும் ரவி அதிர்ச்சி அடைந்து வெளியே வந்து கிராம மக்களுக்கு தெரிவித்தார், பின்னர் அப்பகுதி பொதுமக்கள் குருபட்டி மத்திகிரி டைட்டான் டவுன்ஷிப் இடை நல்லூர் உள்ளிட்ட கிராம மக்கள் கூட்டம் கூட்டமாக அம்மனுக்கு பூஜை செய்தும் பாம்பை தரிசித்து வணங்கி செல்கிறார்கள்.












Click it and Unblock the Notifications