கிருஷ்ணகிரி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஊத்தங்கரை ‘பாபநாசம்’ ஏட்டையா கொலையில் துலங்கியது துப்பு! பக்கா ஸ்கெட்ச் போட்டதே போலீஸ் மனைவி தானாம்!

Google Oneindia Tamil News

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி அருகே தலைமை காவலர் நான்கு மாதங்களுக்கு முன்பு மாயமான நிலையில் அவரை கொலை செய்து கல்லை கட்டி உடலை கிணற்றில் வீசியது தெரிய வந்திருக்கிறது. பாபநாசம் பட பாணியில் கணவனை கொன்றதே அவரது போலீஸ் மனைவிதான் என்ற அதிர வைக்கும் தகவலும் வெளியாகி இருக்கிறது.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்த கல்லாவியை சேர்ந்தவர் செந்தில்குமார். முன்னாள் போலீஸ்காரர். இவரது மனைவி சித்ரா சிங்காரப்பேட்டை காவல் நிலையத்தில் சிறப்பு உதவி காவல் ஆய்வாளராக பணிபுரிகிறார்.

இந்தநிலையில் செந்தில்குமார் கடந்த,1997ல், போலீசில் சேர்ந்தார். கடந்த, 2009ல், கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்.பி., இன்ஸ்பெக்டராக பணிபுரிந்த முரளி என்பவர் மீது இருந்த காழ்ப்புணர்ச்சியால் அவரது ஜீப்பை கடத்தி சென்று தருமபுரி மாவட்டம் தொப்பூர் காட்டில் உள்ள கணவாயில் உருட்டி விட்டதற்காக சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

எல்லா கோட்டையும் அழிங்க.. முதல்ல இருந்தே விளையாடுறோம்! புரோட்டா காமெடி செய்யும் பிரான்ஸ் ரசிகர்கள்! எல்லா கோட்டையும் அழிங்க.. முதல்ல இருந்தே விளையாடுறோம்! புரோட்டா காமெடி செய்யும் பிரான்ஸ் ரசிகர்கள்!

ஏட்டையா மாயம்

ஏட்டையா மாயம்

அதற்கு முன்னர் ஆயுதப்படை போலீஸ் வாகனத்தை கிருஷ்ணகிரி மாவட்டம் பாரூர் பெரிய ஏரியில் தள்ளிவிட்டதாகவும் அவர் மீது புகார் இருந்தது. அதன் பின்னரும் தொடர்ந்து அவர் பல்வேறு குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்டதால், கடந்த, 2012ல் அவர் போலீஸ் பணியில் இருந்து நீக்கப்பட்டார். முன்னாள் காவலர்செந்தில் குமார் தொடர்ந்து குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததால் கணவன் மனைவி இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்ந்துவந்தனர். இந்நிலையில் ஊத்தங்கரை அடுத்த கல்லாவி பகுதியில் தனது தாய் பாக்கியம் வீட்டில் வசித்து வந்த செந்தில் குமார், கடந்த செப்டம்பர் மாதம் மாயமானார்.

தாய் புகார்

தாய் புகார்

இது குறித்து செந்தில்குமாரின் தாய் பாக்கியம், 65, கல்லாவி போலீசிலும், கடந்த அக்.,31ல், கலெக்டர் அலுவலகத்திலும் புகார் அளித்தார். இதுகுறித்த கல்லாவி போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர் விசாரணையில் முன்னேற்றம் இல்லாததால் ஊத்தங்கரை DSP அமலஅடவின் தலைமையில் ஊத்தங்கரை காவல் ஆய்வாளர் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தினர் விசாரணையில் கடந்த செப்.,16ல், மாயமான செந்தில்குமார் மற்றும் அவரது மகன் ஜெகதீஷ்குமார், மற்றொருவரின் மொபைல் சிக்னல் ஊத்தங்கரை கவர்னர் தோப்பு பகுதியில் புதியதாக வீடுகட்டி கிரக பிரவேசம் நடைபெற்ற அவரது மனைவி சித்ரா வீட்டில் ஒரே நேரத்தில் சுவிட்ச் ஆப் ஆனது கண்டுபிடிக்கப்பட்டது.

முறையற்ற உறவு

முறையற்ற உறவு

ஜெகதீஷ்குமாருடன் இருந்த மற்றொரு மொபைல் எண்ணை வைத்து விசாரிக்கையில், அவர் ஊத்தங்கரை அடுத்த பாவக்கள் கிராமத்தை சேர்ந்த அமல்ராஜ் என்பது தெரிந்தது. அவர் மீதும் பல்வேறு வழக்குகள் உள்ளன. இந்நிலையில், டிசம்பர் 13ம் தேதி ஜெகதீஸ்குமார் மற்றும் கமல்ராஜ் ஆகிய இருவரையும் ஊத்தங்கரை போலீசார் சந்தேகத்தின் பேரில் விசாரித்துவிட்டு மீண்டும் மறுநாள் டிசம்பர் 14ம் தேதி காலை ஊத்தங்கரை போலீஸ் ஸ்டேஷனுக்கு வருமாறு போலீசார் கூறி அனுப்பினர்.

கொலை

கொலை

போலீஸ் விசாரணைக்கு பயந்த ஜெகதீசன் மற்றும் கமல்ராஜ் ஆகிய இருவரும் ஊத்தங்கரை காவல் துறையினர் தங்களை துன்புறுத்தருவதாக கூறி கிருஷ்ணகிரி குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி ஸ்ரீவத்சவா முன்பு ஆஜராகினர். மேலும் கடந்த 2022 செப்.,16ல், செந்தில்குமாரை கொன்று, பாவக்கல் தென்பெண்ணையாற்றில் வீசியதாக கூறியுள்ளனர். அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்து சேலம் சிறையில் அடைத்தனர். அதனை தொடர்ந்து டிசம்பர் 16ம் தேதி செந்தில்குமார் குறித்து அவரது மனைவியும், எஸ்.எஸ்.ஐ.,யுமான சித்ராவிடம் ஊத்தங்கரை டி.எஸ்.பி., அமலா அட்வின் விசாரணை நடத்தினர் அதில் கணவர் செந்தில்குமார் காணாமல் போனது குறித்து தனக்கு எதுவும் தெரியாது என்று கூறிவந்தநிலையில் அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டனர்.

கள்ளக் காதல்

கள்ளக் காதல்

அதே வேளையில் நீதிமன்றத்தில் சரணடைந்த அவரது மகன் ஜெகதீசன் அமல்ராஜ் ஆகியோரை டிசம்பர் 23ம் தேதி போலீஸ் காவலில் எடுத்து ஊத்தங்கரை இன்பெக்டர் பார்த்திபன் தலைமையிலான போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. முன்னாள் காவலர் செந்தில்குமாரின் மனைவி சித்ராவுக்கும் பாவக்கள் கிராமத்தை சேர்ந்த அண்ணாமலை மகன் அமலராஜ் என்பவனுக்கு கடந்த 5 ஆண்டுகளாக கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது. இதில் அடிக்கடி சித்ரா வீட்டிக்கு நேரடியாக சென்று வந்துள்ளார். இதனை நேரில் பார்த்த செந்தில் குமார் பலமுறை கண்டித்துள்ளார் இருப்பினும் தொடர்பை கைவிடவில்லை. கணவன் மனைவிக்கு இடையில் அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

பக்கா ஸ்கெட்ச்

பக்கா ஸ்கெட்ச்

ஒரு கட்டத்தில் கள்ளக்காதலன் அமலராஜ் உடன் உள்ள கள்ளத்தொடர்பை கைவிட முடியாத நிலையில் கணவனை கொலை செய்ய இருவரும் திட்டம் போட்டுள்ளனர். அந்த நேரத்தில் ஊத்தங்கரை பாரதிபுறம் பகுதியை சேர்ந்த தேதி கூலிப்படை புரோக்கர் சரோஜா என்பவரை தொடர்பு கொண்டு தனது கணவரை கொலை செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார். இதனை தொடர்ந்து 10 லட்சம் கேட்ட சரோஜாவிடம் 7லட்சம் பேரம் பேசி முடித்துள்ளார். இதனை தொடர்ந்து ஊத்தங்கரை பாரதிபுரம் பகுதியை சேர்ந்த பிரபல ரவுடி வெள்ளைச்சாமி எண்பவனுக்கு தகவல் தெரிவிக்கவே அவன் அவனது கூட்டளிகளான தூத்துக்குடியை சார்ந்த ராஜபாண்டியன், வினோத் ராஜா, திருநெல்வேலி செங்குட்டுவன், உள்ளிட்ட கூட்டாளிகளுக்கு தகவல் சொல்லி ஏற்பாடு செய்துள்ளார்

கூலிப்படை

கூலிப்படை

தொடர்ந்து செப்16ம் தேதி சித்ராவின் புதிய வீட்டு கிரக பிரவேசத்திற்கு அவர்களது மகன் ஜகதீஷ்குமார் அழைத்ததின்பேரில் அங்கு சென்ற செந்தில் குமாரை முன்னதாக 15ம்தேதியே கூலிப்படையினர் மற்றும் கள்ளக்காதலன் கமல்ராஜ் அகியோரை மகன் ஜகதீஷ்குமார் உதவியுடன் சித்ரா தங்கவைத்துள்ளார் அவர்களுக்கு மது விருந்தும் வைத்துள்ளார். அப்போது வீட்டில் மறைந்திருந்த கூலிப்படையினர் அவர் முகத்தில் மிளகாய் பொடி தூவியும் சுத்தியால் தலையில் அடித்தும் தாக்கியுள்ளனர். இதில் மயங்கி விழுந்த செந்தில்குமாரை அரிசிப்பையால் சுற்றி மூட்டை கட்டி வீட்டிலே வைத்துவிட்டு கூலிபடையினர் சென்று விட்டனர். தொடர்ந்து அன்று சிங்காரப்பேட்டை காவல்நிலையத்தில் ஒரு குற்றவாளியை கோர்ட்டில் ஒப்படைக்க எஸ்காடாக சித்ரா சென்று தன்பணியை செவ்வனே செய்துவிட்டு ஒன்றும் அறியாததுபோல் அடுத்த நாள் வீட்டுக்கு வந்து கொலை செய்யப்பட்ட செந்தில்குமார் உடலை மறைக்க முடியாமல் தவித்துள்ளார்.

பேரம் பேசிய புரோக்கர்

பேரம் பேசிய புரோக்கர்

அப்போது மீண்டும் கூலிப்படை புரோக்கர் சரோஜா இடம் உடலை மறைக்க கேட்டுள்ளார். அப்போது உடலை மறைக்க மீண்டும் மூன்று லட்சம் பணம் வேண்டும் என்றும் கூலிப்படையை சேர்ந்தவர்கள் சேலம் சென்று விட்டதாகவும் கூறியுள்ளார் .அதற்கு மேலும் பேரம்பேசி இரண்டு லட்சம் ரூபாய் பணம் தருவதாக ஒப்புக் கொண்டுள்ளார் சித்ரா. மீண்டும் அன்று செப்,17 இரவு பணத்தை பெற்றுக்கொண்ட கூலிப்படையினர் உடலை சத்தியமங்கலம் காட்டுப்பகுதியில் கொண்டு சென்று எரித்து விடுவதற்கு கூறி இறந்த செந்தில்குமார் எடுத்துச் சென்றுள்ளனர் நீண்ட தூரம் எடுத்துச் சென்றால் இரவு விடிந்து விடும் போலீசில் மாட்டிக் கொள்வோம் என்ற அச்சத்தில் ஊத்தங்கரை பேரூராட்சிக்கு உட்பட்ட இரண்டாவது வார்டு பாரதிபுரம் பகுதியில் உள்ள கிணற்றில் மூட்டை கட்டி கற்களை வைத்து கட்டி வீசி சென்று உள்ளனர்.

கிணற்றில் சடலம்

கிணற்றில் சடலம்

ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் கற்களை வைத்து மூட்டை கட்டி பாழடைந்த கிணற்றில் வீசி சென்றதால் கடந்த மூன்று மாதங்களாக யாருக்கும் தெரியாமலேயே போனது. அவரது தாய் கொடுத்த புகாரின் பேரில் தொடர்ந்து அமல்ராஜ் மற்றும் இறந்த செந்தில்குமாரின் மகன் ஆகியோரை டிசம்பர் 23ம் தேதி போலீஸ் கஸ்டடியில் எடுத்து விசாரணை மேற்கொண்டதில் கொலை செய்து கொன்றதை ஒப்புக்கொண்ட இருவரும் கொலை குழந்தையாக இருந்த கூலி படையினரை காட்டிக் கொடுத்தனர். கூலிபடை தலைவனின் ஓட்டுநர் விஜி என்பவனை கைது செய்த ஊத்தங்கரை போலீசார் தொடர்ந்து விசாரணை செய்ததில் சடலம் இருக்கும் இடத்தை கண்டறிந்து இன்று ஊத்தங்கரை பேரூராட்சி இரண்டாவது வார்டு பாரதிபுரம் பகுதியில் பாழடைந்த கிணற்றில் இருந்த சடலத்தை தீயணைப்புத்துறையினர் உதவியுடன் போராடி மீட்டனர்.

அதிரடி கைது

அதிரடி கைது

இது தொடர்பாக இன்று மகன் ஜெகதீசன், வெள்ளைச்சாமிக்கு கார் ஓட்டுநராக செயல்பட்ட விஜி , ராஜபாண்டியன் கூலிப்படை புரோக்கராக செயல்பட்ட சரோஜா மற்றும் இறந்த முன்னாள் காவலர் செந்தில் குமாரின் மனைவியும் சிறப்பு காவல் உதவி ஆய்வாளருமான சித்ரா உள்ளிட்ட நால்வரையும் கைது செய்து ஊத்தங்கரை குற்றவியல் மற்றும் உரிமைகள் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் சிறை சாலைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சித்ராவின் மகன் ஜகதீஷ்குமார் மற்றும் கள்ளக்காதலன் அமலராஜ் ஆகியோர் போலீஸ் விசாரணையில் உள்ளனர். தலைமறைவாக உள்ள மற்றவர்களை காவல் துறையினர் தேடிவருகின்றனர்.

English summary
It has come to light that the head constable near Krishnagiri murdered him in a mysterious state four months ago, tied him to a stone and threw his body into a well. Shocking information has also come out that it was his police wife who killed the husband in the style of Papanasam film.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X