ஓசூர் அருகே 8 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்.. குற்றவாளியை பிடிக்க 3 தனிப்படைகள் அமைப்பு!
கிருஷ்ணகிரி: ஓசூர் அருகே பள்ளியில் இருந்து வீடு திரும்பிய 8 வயது சிறுமி கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் 3 தனிப்படைகள் அமைத்து குற்றவாளியை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.
பாதிக்கப்பட்ட சிறுமிக்கு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஓசூர் அருகே தேன்கனிக்கோட்டையில் 4 ஆம் வகுப்பு படிக்கும் 8 வயது சிறுமி, மாலை பள்ளி முடிந்து சாலையில் தனியாக நடந்து சென்று கொண்டிருந்தபோது மர்ம நபர் ஒருவர் சிறுமியின் வாயை மூடி காட்டுப் பகுதிக்குள் தூக்கிச் சென்று பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கியுள்ளார்.
பாதிக்கப்பட்ட சிறுமி கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், தேன்கனிக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார், வழக்குப் பதிவு செய்து, இக்கொடூரச் செயலில் ஈடுபட்டு தப்பியோடிய அந்த நபரைத் தீவிரமாக தேடி வருகின்றனர்.
இந்நிலையில், 8 வயது சிறுமி கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் 3 தனிப்படைகள் அமைத்து குற்றவாளியை காவல் துறையினர் தேடி வருகின்றனர். தேன்கனிக்கோட்டை சிறுமி வழக்கில் குற்றவாளியை உடனடியாக கைது செய்து, போக்சோ சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Click it and Unblock the Notifications
