ஓசூரில் உல்லாசத்தின் போது மனைவிக்கு இப்படி ஆகிடுச்சு.. கண்ணீர் விட்ட ஜிம் மாஸ்டர் சிக்கியது எப்படி
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் ஜூஜூவாடி உப்கார் ராயல் கார்டன் பகுதியை சேர்ந்த பாஸ்கரன் என்பவர், அந்த பகுதியில் நான்கு இடங்களில் ஜிம் நடத்தி வருகிறார். இவர் சசிகலா என்பவரை காதலித்து திருமணம் செய்தார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் ஜிம் மாஸ்டர் பாஸ்கருக்கும், அரசு பள்ளி ஆசிரியை ஒருவருக்கும் தொடர்பு இருந்ததாம். இந்த விவகாரம் தெரியவந்ததும், மனைவி சசிகலாவிற்கு எதிராக ஜிம் மாஸ்டர் பாஸ்கரன் என்ன செய்தார் தெரியுமா? அவர் போட்ட நாடகத்தில் அவரே எப்படி சிக்கினார் என்பதை பார்ப்போம்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் ஜூஜூவாடி உப்கார் ராயல் கார்டன் பகுதியை சேர்ந்த 34 வயதாகும் பாஸ்கர் ஜிம் மாஸ்டர் ஆவார். இவர், ஓசூரில் காமராஜர் காலனி, சீதாராம் மேடு, ஜூஜூவாடி மற்றும் ராஜேஸ்வரி லேஅவுட் ஆகிய 4 இடங்களில் 'ஜிம்' வைத்து நடத்தி வருகிறார். பெங்களூருவை சேர்ந்த சசிகலா (33 வயது) அங்குள்ள மாகடி சாலையில் சிறுவர்களுக்கான பள்ளியும் நடத்தி வந்தார். ஜிம் மாஸ்டர் பாஸ்கர் பேஸ்புக் மூலமாக சசிகலா உடன் பழகி உள்ளார்.

இந்த நட்பு காதலாகி உள்ளது. பெற்றோர் சம்மதத்துடன் இருவருக்கும் கடந்த 2018-ம் ஆண்டு ஓசூரில் திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பின்னர் சசிகலா ஓசூர் காமராஜ் காலனியில் பெண்களுக்கான 'ஜிம்' நடத்தி வந்தார். பாஸ்கர் சசிகரலா தம்பதிக்கு ஒரு ஆண் மற்றும் பெண் என இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
இந்த நிலையில், ஜிம் மாஸ்டர் பாஸ்கருக்கும், அரசு பள்ளி ஆசிரியை ஒருவருக்கும் இடையே தொடர்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் அவரை ஓசூர் அலசநத்தம் பகுதியில் பாஸ்கர் தனியாக குடி வைத்திருந்தாராம். இது சசிகலாவுக்கு தெரியவரவே கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் சசிகலா மீது பாஸ்கர் கோபம் அடைந்தாராம்.
கடந்த ஏப்ரல் 30-ந் தேதி இரவு பாஸ்கரும், சசிகலாவும் வீட்டில் உல்லாசமாக இருந்துள்ளனர். அப்போது, திடீரென சசிகலாவுக்கு மூக்கில் இருந்து ரத்தம் வந்ததாக கூறி அவரை, பாஸ்கர் ஓசூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றிருக்கிறார். அங்கு டாக்டர்கள் பரிசோதித்த போது சசிகலா ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியிருக்கிறார்கள். இதுகுறித்து ஓசூர் சிப்காட் போலீசார் விசாரணை நடத்தினர்.
தொடர்ந்து போலீசார், சசிகலாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அப்போது அவரது கழுத்தில் காயம் இருப்பது தெரியவந்தது. இதனிடையே, சசிகலாவின் பெற்றோர் மற்றும் உறவினர்களும் அவரது சாவில் சந்தேகம் இருப்பதாக புகார் அளித்தனர். இதையடுத்து சசிகலாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார், பாஸ்கரிடம் தீவிர விசாரணை நடத்தினர்.
போலீசார் நடத்திய விசாரணையில் நாடகம் அம்பலத்திற்கு வந்துள்ளதாம். சம்பவம் நடந்த ஏப்ரல் 30ம் தேதி அன்று பாஸ்கரும், சசிகலாவும் மது அருந்தி உள்ளனர். பின்னர் மனைவியின் கை, கால்களை கட்டிப்போட்டு உல்லாசமாக இருந்தாராம் பாஸ்கர். ஏற்கனவே மனைவி மீது கடும் ஆத்திரத்தில் இருந்த பாஸ்கர் இதனை தனக்கு சாதகமாக்கி சசிகலாவின் கழுத்தை துணியால் இறுக்கி அவரை கொலை செய்துவிட்டாராம்.
பின்னர் மனைவியின் மூக்கில் ரத்தம் வந்து விட்டது எனக் கூறி மருத்துவமனைக்கு அழைத்து சென்று உயிரிழந்ததாக நாடகமாடினாராம். ஆனால் பிரேத பிரசோதனை அறிக்கை மற்றும் போலீசாரின் விசாரணையில் சிக்கியது தெரியவந்துள்ளது. ஜிம் மாஸ்டர் பாஸ்கரை சிப்காட் போலீசார் கைது செய்து தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள்.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications