• search
லண்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஆபாச படத்தால் வந்த வினை.. லைவில் கதறியழுத மனைவி.. கேட்டதும் ஷாக் ஆன மருத்துவர்கள்!

Google Oneindia Tamil News

லண்டன்: ஆபாச படங்களை பார்ப்பதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து மனம் திறந்து பேச வேண்டும் என மனநல மருத்துவர்கள் பலர் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், இது குறித்து தற்போது சில தகவல்களை பாலியல் துறை சார்ந்த மருத்துவர்களும், மனநல மருத்துவர்களும் வழங்கியுள்ளனர்.

அதில் இந்த பாதிப்புகள் ஏன் ஏற்படுகின்றன எனவும், அதிலிருந்து எப்படி வெளிவருவது எனவும் விளக்கமாக கூறியுள்ளனர்.

திருமண வாழக்கை

திருமண வாழக்கை

பிரிட்டனை சேர்ந்த தனியார் செய்தி ஊடகத்தில் ஒரு பெண் எழுப்பியிருந்த கேள்விக்கு மருத்துவர்கள் அளித்துள்ள பதில்கள் இந்த செய்தியில் தொகுத்து வழங்கப்பட்டிருக்கிறது. அதாவது, 43 வயதான இந்த பெண்மணிக்கு 47 வயதில் ஒரு கணவர் இருக்கிறார். இவர்கள் திருமணமானதிலிருந்து மகிழ்ச்சியாகதான் வாழ்ந்து வந்திருக்கின்றனர். இப்படி இருக்கையில் சமீப நாட்களாக இவர்களது பாலுறவு அவ்வளவு சிறப்பாக இல்லையென அப்பெண்மணி மருத்துவரிடத்தில் கூறியுள்ளார். முன்னரெல்லாம் எதையாவது மனதுக்கு இனிமையானதை பேசிக்கொண்டு சிறு சிறு விளையாட்டுகளில் ஈடுபட்டு பின்னர் இருவரும் அதீத காதல் வயப்படத் தொடங்குவோம். அதன் பின்னர்தான் உடலுறவில் ஈடுபடுவோம்.

ஆபாச படம்

ஆபாச படம்

ஆனால், இப்போதெல்லாம் இவரது கணவர் மிகவும் முரட்டுத்தனமாக நடந்துகொள்வதாகவும், இதனால் தான் கடுமையாக பதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். கணவர் தனது விருப்பத்தை கேட்காமல் அவருடைய விருப்பத்தின் பேரில் நடந்துகொள்வதாகவும், இதன் காரணமாக தான் அவமதிக்கப்படுவதாகவும் கூறியுள்ளார். பின்னர் நாட்கள் செல்ல செல்ல அவர் ஆபாச படங்களுக்கு அடிமையாகி இருப்பது தெரிய வந்ததாகவும், இதற்கடுத்த நாட்களில் அவர் ஆபாச படங்களை பார்த்துக்கொண்டே தன்னிடம் உறவு கொண்டதாகவும், இதில் தான் இருக்க வேண்டிய இடத்தில் அந்த படம் இருந்ததாகவும் கூறியுள்ளார்.

 பிரச்னை

பிரச்னை

இந்த பிரச்னை எங்கள் இருவருக்கும் இடையில் மிகப்பெரிய பள்ளத்தை ஏற்படுத்தியுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார். இதற்கு விளக்கமளித்துள்ள மருத்துவர்கள், "உண்மையில் இதைவிட மோசமான பாதிப்புகளை ஆபாச படங்கள் ஏற்படுத்தும். இந்த படங்களை ஆண்கள் எவ்வளவு அதிகமாக பார்க்கிறார்களோ அந்த அளவுக்கு தங்களது இணையரை வெறுப்பார்கள். தங்கள் இணை மீதான ஆர்வம் குறைந்து முன்பின் பழக்கமில்லாத பெண்ணின் மீதான ஆர்வம் அதிகரித்துவிடும். மட்டுமல்லாது தனது இணையருடன் இருக்கும்போது விரைப்பு தன்மையும் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து ஒரு கட்டத்தில் இணையர் மீது ஈர்ப்பே இல்லாமல் போய்விடும். இதில் உங்களது தவறு எதுவும் கிடையாது. எனவே நீங்கள் மனம் வருந்த தேவையில்லை.

தீர்வு

தீர்வு

இது குறித்து கணவருடன் மனம் விட்டு பேசுங்கள். ஆபாச படங்கள் உங்களுடைய காதலை சீரழிக்கிறது என்பதை உணர்த்துங்கள். இது எல்லாம் உடனடியாக நடந்துவிடாது. கொஞ்சம் கொஞ்சமாகதான் மாற்றம் ஏற்படும். மாறாக அந்த படத்தில் வரும் பெண்களை போன்று ஒருபோதும் உங்களை நீங்கள் மாற்றிக்கொள்ளாதீர்கள். அது உங்கள் மீதான ஆதிக்கத்தை மேலும் அதிகரித்து விடும். அதற்கு இடம் தராதீர்கள். நீங்கள் நீங்களாக இருந்துகொண்டு உங்கள் இணையருக்கு இது குறித்து விளக்க வேண்டும். அப்போதுதான் அவருக்கு எது சரி எது தவறு என்பது புரியும். அதேபோல ஆபாச படங்களில் அதீத கவர்ச்சிக்காக உடல் உறுப்புக்களை பெரியதாக காட்சிப்படுத்தியிருப்பார்கள்.

மாற்றம்

மாற்றம்

எனவே இதிலிருந்து ஆண்களை வெளியேற்றுவது சற்று கடினம்தான். ஆனால் முயன்றால் நிச்சயம் முடியும். கணவரின் கவனத்தை திசைத் திருப்புங்கள். வெளியே செல்லுங்கள். ஒன்றாக உடற்பயிற்சி கூடத்திற்கு செல்லுங்கள், விளையாடுங்கள். நல்ல காமெடியான படங்களை பாருங்கள். புத்தகங்களை படியுங்கள். காதலியுங்கள் இதெல்லாம்தான் அவரை திசை திருப்பும். ஆபாச படங்களில் இருக்கும் விஷயங்களை காட்டிலும் சில நல்ல சுவாரசியமான விஷயங்கள் அதற்கு வெளியே இருக்கிறது என்பதை அவருக்கு புரிய வையுங்கள். மாற்றம் நிச்சயம் நடக்கும்" என்று கூறியுள்ளனர்.

English summary
Many psychiatrists are urging people to speak openly about the effects of watching pornography. In this case, some information about this has been provided by the sex doctors and psychiatrists. They have explained why these effects occur and how to get out of it.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X