"விஜய் முதல்வரானதில் மகிழ்ச்சி.. 30 ஆண்டுகள் இணைந்து பயணித்துள்ளோம்!" அஜித் பெருமிதம்
லண்டன்: அஜித் குமாரின் டீம் கலந்து கொள்ளும் ரேஸை முதல்வர் விஜய் தொடங்கி வைக்கும் நிலையில், லண்டனில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் அஜித் சில முக்கிய கருத்துகளை கூறியிருக்கிறார். விஜய் முதல்வரானதில் தனக்கு மகிழ்ச்சி என குறிப்பிட்ட அஜித், மோட்டர் ஸ்போர்ட்ஸ் போட்டிகளை தமிழக அரசு நல்ல முறையில் ஊக்குவித்து வருவதாக தெரிவித்தார்.
தமிழ்நாடு முதல்வராக பொறுப்பேற்ற பிறகு விஜய் முதல்முறையாக லண்டன் சென்றுள்ளார். நேற்றைய தினம் சென்னையில் இருந்து துபாய் வழியாக விஜய் லண்டன் கிளம்பினார். விமான நிலையத்தில் திரண்டிருந்த மக்கள் விஜய்க்கு உற்சாகமாக வழியனுப்பி வைத்தனர்.

விஜய் லண்டன் பயணம்
லண்டனும் புலம்பெயர்ந்த தமிழர்கள் அவருக்கு சிறப்பான வரவேற்பை கொடுத்தனர். தமிழகத்தை 1.5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்றும் இலக்குடன் முதலீடுகளை ஈர்க்கும் வகையில், உயர்மட்ட குழுவுடன் விஜய் லண்டன் சென்றுள்ளார். ஒரு வார காலம் நடைபெறும் இந்தப் பயணத்தில் முதலீட்டாளர்கள் மற்றும் பல்வேறு நிறுவன தலைவர்களுடன் சந்திப்பு, லண்டனில் உள்ள தமிழ் புலம்பெயர் மக்களுடனான சந்திப்பு, பிரிட்டன் நிறுவனங்களுடனான முக்கிய ஆலோசனைகள் நடைபெறுகின்றன.
"I’m very happy about Vijay being elected Chief Minister ❤️"
— Ayyappan (@Ayyappan_1504) September 11, 2026
— #AjithKumar on CM Vijay pic.twitter.com/XNMKm8v7ZR
திட்டம் என்ன
இதனிடையே தமிழகத்தில் உலகத் தரம் வாய்ந்த மோட்டார் ஸ்போர்ட்ஸ் சிட்டியை அமைக்கப் போவதாக விஜய் சமீபத்தில் சட்டப்பேரவையில் அறிவித்திருந்தார். அதன் ஒரு பகுதியாக உலக புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார் ரேசிங் சர்க்யூட்டுக்கு அவர் நேரில் செல்கிறார். அங்கு பின்பற்றப்படும் சர்வதேச அளவிலான நடைமுறைகளை பார்வையிட்டார்.
மேலும், சில்வர்ஸ்டோனில் நடைபெறும் கார் பந்தயத்தையும் தொடங்கி வைக்கிறார். இது குறித்து பந்தயத்தை நடத்தும் அமைப்பே அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்தப் போட்டியில் தான் நடிகர் அஜித் குமாரின் டீமும் கலந்து கொள்கிறது. இந்த நிகழ்வை ஒட்டி நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், சில்வர்ஸ்டோன் பந்தயத் தளத்திற்கு தமிழக முதல்வர் விஜய் வருவது குறித்து அஜித் குமார் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
அஜித்
ஜோசப் தனது பிஸியான பயணத்திலும் நேரம் ஒதுக்கி ரேஸுக்கு வருவது தனக்கு மகிழ்ச்சி அளிப்பதாக அவர் தெரிவித்தார். மேலும், திரைத்துறையில் இருவரும் 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஒன்றாக பயணித்தோம் என்று குறிப்பிட்ட அவர், அவர் முதல்வராக பதவியேற்று இருப்பது தனக்கு மகிழ்ச்சி என்றும் தமிழக அரசு விளையாட்டு துறையை ஊக்குவிக்க நடவடிக்கை எடுப்பது தனக்கு மகிழ்ச்சி என தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், "அவர் தனது பிஸியான பணத்தில் இருந்து நேரம் ஒதுக்கி, இங்கு வந்து பார்வையிடுவது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. கடந்த 30 முதல் 34 ஆண்டுகளாக நாங்கள் திரைத்துறையில் ஒன்றாக இருந்து வருகிறோம். அதனால் இது குறித்து நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். அவர் இப்போது முதலமைச்சராக தேர்வாகி இருப்பது எனக்கு மகிழ்ச்சி.
மகிழ்ச்சி
மேலும், அவர்கள் விளையாட்டு துறையை மேம்படுத்துவதற்கு நிறைய செய்து வருகின்றனர். இந்த மோட்டர் ஸ்போர்ட்ஸ் விளையாட்டுக்காக மட்டுமல்லாமல், மற்ற விளையாட்டுகளையும் அவர்கள் கவனித்து வருகின்றனர். இங்கு வந்து பார்வையிடுவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். சென்னையில் இதுபோன்ற போட்டிகளை நடத்த என்னென்ன தேவைப்படும் என்பதைப் பார்க்கவும், புரிந்துகொள்ளவும் இது ஒரு வாய்ப்பாக இருக்கிறது. எனது மிக பெரிய ஆசையே இதுபோன்ற ரேஸ்கள் இந்தியாவுக்கு வர வேண்டும் என்பதுதான். இந்தியாவில் உள்ள அனைவரின் விருப்பமும் அதுதான்" என்றார்


Click it and Unblock the Notifications
