பொருளாதார நெருக்கடி.. பாப்பி மலர் விற்று நிதி திரட்டிய பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக்.. ஏன் தெரியுமா?
லண்டன்: பிரிட்டன் பிரதமரான இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக், ஆயுதப்படையில் பணியாற்றியவர்களின் குடும்பங்களுக்கு உதவி செய்யும் வகையில் நிதி திரட்ட லண்டனில் பாப்பி வகை மலர்களை விற்பனை செய்தார். இதுதொடர்பான வீடியோக்கள், போட்டோக்கள் வெளியாகி உள்ளன.
பிரிட்டன் பிரதமராக இருந்த போரிஸ் ஜான்சன் ராஜினாமா செய்தார். இதையடுத்து புதிய பிரதமருக்கான தேர்தல் நடைபெற்றது. பல கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது.
இறுதி போட்டியில் இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக், முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் லிஸ் ட்ரஸ் களத்தில் இருந்தனர். இதில் லிஸ் ட்ரஸ் வெற்றி பெற்று பிரதமரானார்.

பிரதமரான ரிஷி சுனக்
இதையடுத்து லிஸ் ட்ரஸ் தலைமையில் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. பெரிய நிறுவனங்களுக்கு வரி குறைக்கப்பட்டதால் நாட்டின் பொருளாதாரம் மிகவும் மோசமான நிலைக்கு வந்தது. இதனால் அரசியல் நெருக்கடி ஏற்பட்டது. இதையடுத்து லிஸ் ட்ரஸ் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து கடந்த மாதம் இறுதியில் இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

பொருளாதார பிரச்சனை
பிரிட்டன் பிரதமராக பொறுப்பெற்றுள்ள ரிஷி சுனக்கிற்கு வயது 42 தான். இவரது தந்தை பெயர் யாஷ்வீர். தாய் பெயர் உஷா. ரிஷி சுனக்கின் தந்தை வழி தாத்தாவும் பாட்டியும் இந்தியாவின் பஞ்சாப்பை சேர்ந்தவர்கள். இவர்கள் 1960க்கு முன்பு கென்யாவுக்கு குடிபெயர்ந்த நிலையில் அங்கிருந்த ரிஷி சுனக்கின் பெற்றோர் பிரிட்டனுக்கு வந்து வாழ்க்கையை வந்தனர். ரிஷி சுனக்கிற்கு பிரிட்டன் நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் மிகப்பெரிய பொறுப்பு உள்ளது. இதற்காக விரைவில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது.

பாப்பி வகை பூக்கள்
இந்நிலையில் பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் பாப்பி வகை பூக்களை விற்பனை செய்த போட்டோக்கள், வீடியோக்கள் இணையதளங்களில் வேகமாக பரவி வருகிறது. பிரிட்டனில் உள்ள லண்டன் நகரில் வெஸ்ட் மின்ஸ்டர் டியூப் ஸ்டேஷனில் தான் ரிஷி சுனக் பாப்பி வகை பூக்களை விற்பனை செய்துள்ளார். இதன் பின்ணியில் முனக்கிய விஷயம் ஒன்று உள்ளது.

‛பாப்பி டே’ கடைப்பிடிப்பு
அதாவது பிரிட்டனில் ஆர்பிஎல் (RBL) எனும் ராயல் பிரிட்டிஷ் லெஜியன் எனும் தொண்டு நிறுவனம் உள்ளது. இது பிரிட்டனின் ஆயுத படைகயை சேர்ந்த வீரர்கள், குடும்பத்தினருக்கு தேவைப்படும் உதவிகளை செய்து வருகிறது. இதற்காக ஆண்டுதோறும் ‛பாப்பி டே' கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி நேற்று வெஸ்ட் மின்ஸ்டர் டியூப் ஸ்டேஷனில் வைத்து பாப்பி பூக்களை விற்பனை செய்தார்.

நிதி சேகரிப்பு
பிரிட்டன் ராணுவம், கடற்படை மற்றும் விமான படையை சேர்ந்தவர்களுடன் இணைந்து ரிஷி சுனக் விற்பனை செய்தார். இதனை பார்த்த பலரும் ஆச்சரியமடைந்தனர். பிரிட்டன் பிரதமராக பொறுப்பேற்ற ரிஷி சுனக் பொதுவெளியில் ஆயுதப்படையினருடன் சேர்ந்து பாப்பி வகை பூக்களை விற்பனை செய்து நிதி சேகரித்தது தெரியவந்தது. இந்த படங்கள் தான் தற்போது இணையதளங்களில் வெளியாகி உள்ளது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications