மூச்ச்ச்.. "பிளைட் பறந்தா சத்தம் வரும்".. ராணி எலிசபெத்தின் இறுதி சடங்கிற்காக 100 விமானங்கள் ரத்து!
லண்டன்: பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத் உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்த நிலையில் அவரது இறுதி சடங்கு வரும் 19ம் தேதி நடைபெறுகிறது.
சுமார் 70 ஆண்டுக்காலம் ராணியாக வாழ்ந்த இரண்டாம் எலிசபெத்தின் உடல் நல்லடக்கம் செய்யும் நாளில் பிரிட்டிஷ் ஏர்வேஸ் தனது விமான போக்குவரத்தில் சில மாற்றங்களை அறிவித்துள்ளது.
ராணியின் உடல் அடக்கம் செய்யப்படும்போது அமைதியை கடைப்பிடிக்கும் விதமாக சில விமானங்களை ரத்து செய்வதாகவும் அறிவித்துள்ளது.

நல்லடக்கம்
கடந்த 1952ல் பிரிட்டனின் ராணியாக பொறுப்பேற்றுக்கொண்ட இரண்டாம் எலிசபெத், 70 ஆண்டுக்காலம் ராணியாக இருந்துள்ளார். சமீபத்தில் ஏற்பட்ட உடல் நலக்கோளாறு காரணமாக அவர் உயிரிழந்துள்ளார். இது பிரிட்டனுக்கு பேரிழப்பாக கருதப்படுகிறது. அவரது மறைவையொட்டி 10 நாட்கள் துக்க நாளாக அனுசரிக்கபட்டு வருகிறது. வரும் 19ம் தேதி திங்கட்கிழமையன்று ராணியின் உடல் வின்ட்சர் கேஸ்டலில் நல்லடக்கம் செய்யப்படுகிறது.

விமான பயணங்களில் மாற்றம்
இந்த நிகழ்வின்போது அமைதியை கடைப்பிடிக்கும் விதமாக லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்திலிருந்து இயங்கும் பிரிட்டிஷ் ஏர்வேஸ் தனது பயண திட்டத்தில் சில மாற்றங்களை அறிவித்துள்ளது. அதாவது, இந்த இறுதி சடங்கு நிகழ்வில் அமைதியை கடைப்பிடிக்கும் விதமாக பிரிட்டிஷ் ஏர்வேஸ் தனது விமான இயக்க அட்டவணையில் 15% மாற்றங்களை செய்து 100 விமானங்களை குறிப்பிட்ட நேரத்திற்கு ரத்து செய்துள்ளது. ஒரே நேரத்தில் இந்த அத்தனை விமானங்களும் ரத்து செய்யப்படாமல், நேரம் பிரிக்கப்பட்டு விமான இயக்கங்களில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

இறுதி சடங்கு
ராணியின் உடலுக்கு இறுதி சடங்கு செய்து முடித்து அனைவரும் சிறிது நேரம் அமைதியை பின்பற்றுவார்கள். இதனை கருத்தில் கொண்டு காலை 11.40 முதல் மதியம் 12.10 வரை 30 நிமிடங்களுக்கு விமான இயக்கங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதேபோல ராணியின் உடல் ஊர்வலத்தின்போது மதியம் 1.45 மணிக்கு தொடங்கி 35 நிமிடங்களுக்கு விமானங்கள் இயக்கப்படாது. மேலும் மாலை மாலை 3.05 மணிக்கு தொடங்கி 1.40 மணி நேரம் வரை அதாவது மாலை 4.50 மணி வரை விமானங்கள் இயக்கப்படாது.

மாற்றங்கள்
இந்த தடைகள் பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானங்களுக்கு மட்டுமே என்பதால் இதில் முன்பதிவு செய்தவர்கள் வேறு விமானங்களில் பயணித்துகொள்ளலாம் அல்லது பணத்தை திரும்பப் பெற்றுக் கொள்ளலாம் என்றும் அந்நிறுவனம் அறிவித்துள்ளது. ஏற்கெனவே ராணியின் உடல் பக்கிங்ஹாம் அரண்மனையிலிருந்து வெஸ்ட்மின்ஸ்டர் ஹாலுக்கு மாற்றிய போது இதேபோல சுமார் 2 மணி நேரத்திற்கு விமான போக்குவரத்து நிறுத்தப்பட்டிருந்தது. மேலும் ஞாயிற்றுக்கிழமையான நாளை, 1 நிமிட அமைதியை கடைப்பிடிக்குமாறு தனது பயணிகளை ஹீத்ரோ விமான நிலையம் கேட்டுக்கொண்டுள்ளது. அதேபோல உடல் நல்லடக்கம் செய்யும் திங்கட்கிழமையன்று அத்தியாவசியமற்ற கடைகள் மூடப்பட்டிருக்கும் என்று சொல்லப்படுகிறது.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications