அதிக மரணங்களால் மிரளும் ரஷ்யா.. உலகில் கொரோனா மோசமாக பாதித்த டாப் 5 நாடுகள்... ரிப்போர்ட்

Subscribe to Oneindia Tamil

லண்டன்: உலகில் கொரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக அமெரிக்கா திகழ்கிறது. அங்கு கொரோனா தொற்றால் கடந்த 24 மணி நேரத்தில் 76,599 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதற்கு அடுத்தபடியாக இங்கிலாந்தில் 36,100 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24மணி நேரத்தில் உலகிலேயே அதிகபட்சமாக ரஷ்யாவில் 778 பேர் கொரோனாவால் பலியாகி உள்ளனர்

கொரோனா 3வது அலை உலகின் பெரும்பாலான நாடுகளில் தீவிரமாக பரவ தொடங்கி உள்ளது. குறிப்பாக ஐரோப்பா மற்றும் அமெரிக்க நாடுகளில் பரவ தொடங்கி உள்ளது. டெல்டா, ஆல்பா போன்ற வைரஸ்களால் கடும் பாதிப்புகளை இந்த நாடுகள் சந்தித்து வருகின்றன. உலகம் முழுவதும் இதுவரை 229,769,879 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேநேரம் 206,421,653 பேர் குணம் அடைந்துவிட்டனர். கொரோனா தொற்றால் உலகம் முழுவதும் இதுவரை 4,711,715 பேர் பலியாகி உள்ளனர்.

தற்போது கொரோனா தொற்று பாதிப்புடன் 18,636,511 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இன்று காலை நிலவரப்படி 98,699 பேர் கவலைக்கிடமான நிலையில் உலகம் முழுவதும் சிகிச்சை பெற்று வருகிறார்கள்

முதலிடம்

முதலிடம்

உலகிலேயே கொரோனாவின் தீவிரத்தால் மோசமாக பாதிக்கப்பட்ட நாடாக அமெரிக்கா திகழ்கிறது. அங்கு ஒரே நாளில் 76,599 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அங்கு கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 43,078,499 ஆக உயர்ந்துள்ளது. அதேநேரம் ஒரே நாளில் 105,922 பேர் குணம் அடைந்ததால் ஒட்டுமொத்தமாக குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 32,639,332ஆக உள்ளது. ஒரே நாளில் 637 பேர் அமெரிக்காவில் பலியாகி உள்ளனர். இதனால் அமெரிக்காவில் கொரோனாவால் இறந்தவர்கள் எண்ணிக்கை 693,409 ஆக உயர்ந்துள்ளது. உலகிலேயே உச்சபட்சமாக அமெரிக்காவில் தான் 9,745,758 பேர் ஆக்டிவ் நோயாளிகளாக சிகிச்சையில் உள்ளனர்.

2வது இடம்

2வது இடம்

அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக தினசரி பாதிப்பு இங்கிலாந்தில் அதிகமாக உள்ளது. ஆனால் அமெரிக்கா உடன் ஒப்பிடும் போதும் உயிரிழப்பு எண்ணிக்கை மிகமிக குறைவு ஆகும். இங்கிலாந்தில் ஒரே நாளில் 36,100 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் இங்கிலாந்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 7,465,448 ஆக உயர்ந்துள்ளது. அதேநேரம் ஒரே நாளில் 29,195 பேர் குணம் அடைந்ததால் ஒட்டுமொத்தமாக குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 6,010,879 ஆக உள்ளது. ஒரே நாளில் 49 பேர் இங்கிலாந்தில் பலியாகி உள்ளனர். இதனால் இங்கிலாந்தில் கொரோனாவால் இறந்தவர்கள் எண்ணிக்கை 135,252ஆக உயர்ந்துள்ளது. இங்கிலாந்தில் ஆக்டிவ் நோயாளிகள் எண்ணிக்கை 1,319,317 ஆக உள்ளது.

3வது இடம்

3வது இடம்

இங்கிலாந்துக்கு அடுத்தபடியாக தினசரி பாதிப்பு துருக்கியில் அதிகமாக உள்ளது. ஆனால் அமெரிக்கா, இங்கிலாந்து போல் அல்லாமல் ஆக்டிவ் நோயாளிகள் எண்ணிக்கை குறைவாக உள்ளது. துருக்கியில் ஒரே நாளில் 27,688 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் துருக்கியில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 6,874,947 ஆக உயர்ந்துள்ளது. அதேநேரம் ஒரே நாளில் 27,949 பேர் குணம் அடைந்ததால் ஒட்டுமொத்தமாக குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 6,365,019 ஆக உள்ளது. ஒரே நாளில் 231 பேர் துருக்கியில் பலியாகி உள்ளனர். இதனால் துருக்கியில் கொரோனாவால் இறந்தவர்கள் எண்ணிக்கை 61,805 ஆக உயர்ந்துள்ளது. துருக்கியில் ஆக்டிவ் நோயாளிகள் எண்ணிக்கை 448,123 ஆக உள்ளது.

4வது இடம்

4வது இடம்

துருக்கிக்கு அடுத்தபடியாக தினசரி பாதிப்பு இந்தியாவில் அதிகமாக உள்ளது. ஆனால் அமெரிக்கா போலவே ஆக்டிவ் நோயாளிகள் எண்ணிக்கை இல்லை. இந்தியாவில் ஒரே நாளில் 24,925 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 33,502,744 ஆக உயர்ந்துள்ளது. அதேநேரம் ஒரே நாளில் 34,470பேர் குணம் அடைந்ததால் ஒட்டுமொத்தமாக குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 32,742,059 ஆக உள்ளது. ஒரே நாளில் 251 பேர் இந்தியாவில் பலியாகி உள்ளனர். இதனால் இந்தியாவில் கொரோனாவால் இறந்தவர்கள் எண்ணிக்கை 445,416 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் ஆக்டிவ் நோயாளிகள் எண்ணிக்கை 315,269 ஆக உள்ளது.

5வது இடம்

5வது இடம்

கடந்த 24 மணி நேரத்தில் உலகிலேயே அதிக கொரோனா பலி ரஷ்யாவில் ஏற்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 778 பேர் பலியாகி உள்ளனர். இதனால் ரஷ்யாவில் கொரோனாவால் இறந்தவர்கள் எண்ணிக்கை 198,996 ஆக உயர்ந்துள்ளது. ரஷ்யாவில் ஒரே நாளில் 19,744 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் ரஷ்யாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 7,294,672 ஆக உயர்ந்துள்ளது. அதேநேரம் ஒரே நாளில் 11,992பேர் குணம் அடைந்ததால் ஒட்டுமொத்தமாக குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 6,510,674 ஆக உள்ளது. ரஷ்யாவில் 585,002 ஆக்டிவ் நோயாளிகள் எண்ணிக்கை 315,269 ஆக உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+