ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனம் இயக்க அனுமதி பெற்ற ஒரே நபர் எலிசபெத்.. ராணி பற்றிய 15 உண்மைகள்
லண்டன்: பிரிட்டனில் வாகனங்களை ஓட்டுநர் உரிமம் இல்லாமல் ஓட்டுவதற்கான அதிகாரம் பெற்றிருந்த ஒரே நபர் ராணி எலிசபெத்!
கோடையை கழிக்க ஸ்காட்லாந்து சென்றிருந்த ராணி எலிசபெத் உடல் நலக் குறைவு காரணமாக இந்திய நேரப்படி நேற்று இரவு 11. 15 மணிக்கு காலமானார். அவருக்கு வயது 96. அவரது இறப்பை பக்கிங்காம் அரண்மனை உறுதி செய்தது. எலிசபெத் அலெக்சாண்டிரா மேரி எனும் இயற்பெயரை பெற்றவர். இவர் குறித்த சில நிஜ தகவல்களை இங்கே பார்க்கலாம்.
கடந்த 1926 ஆம்ஆண்டு ஏப்ரல் 21 ஆம் தேதி அதிகாலை 2.40 மணிக்கு எலிசபெத் பிறந்தார். இவர் ஜார்ஜ் 6ஆம் மன்னருக்கும் எலிசபெத் ராணிக்கும் மகளாக பிறந்தவர்தான் இந்த அலெக்சாண்டிரா மேரி. இவர் 1953 ஆம் ஆண்டு ஜூன் 2 ஆம் தேதி ராணியாக முடிசூட்டிக் கொண்டார்.

முடிசூட்டு விழா
இவரது முடிசூட்டு விழாவை டிவியில் 20 மில்லியன் பேர் பார்வையிட்டனர். பிரிட்டனில் இதுவரை இல்லாத அளவுக்கு மிக நீண்ட காலம் பதவி வகித்த ராணியாக அறியப்படுகிறார். 70 ஆண்டுகள் பதவியேற்று, 63 ஆண்டுகள் பதவி வகித்த விக்டோரியா மகாராணியின் சாதனையை முறியடித்துவிட்டார்.

வின்ஸ்டன் சர்ச்சில்
வின்ஸ்டன் சர்ச்சில், மார்கரெட் தட்சர், போரிஸ் ஜான்சன் என 15 பிரிட்டன் பிரதமர்களை தேர்வு செய்துள்ளார். இவருக்கு பிடித்தமான நாய் இனம் கோரிஸ் (Corgis) ஆகும். தான் வளர்த்த கோரி எனும் நாயையும் தனது சகோதரி இளவரசி மார்க்ரெட்டின் டச்ஹூண்ட் என்ற நாயுடன் இனப்பெருக்கம் செய்ய வைத்து டோர்கி என்ற ஒரு புதிய இனத்தை உருவாக்கினார்.

ஓட்டுநர் உரிமம்
பிரிட்டனில் வாகனங்களை இயக்க ஓட்டுநர் உரிமம் இல்லாமல் இயக்க அனுமதிக்கப்பட்டு வந்த ஒரே நபர் ராணி எலிசபெத்தான். இவருக்கு இரு பிறந்தநாள்கள் உண்டு. ஒன்று ஏப்ரல் 21 , இன்னொரு ஜூன் மாதம் 2ஆம் தேதி அவரது அதிகாரப்பூர்வ பிறந்தநாளாகும். அன்றைய தினம் பெரிய ஊர்வலத்துடன் ராணியின் பிறந்தநாள் களைகட்டும்.

ராணி எலிசபெத் பிறந்த இடம்
ராணி எலிசபெத் பிறந்த இடமான மே ஃபேரில் எண் 17, ப்ரூட்டன் தெரு, தற்போது பேன்சி கான்டோநீஸ் ரெஸ்டாரன்ட்டாக மாறிவிட்டது. முதல்முறையாக 1976 ஆம் ஆண்டு ராணி இமெயில் அனுப்பினார். அது போல் இன்ஸ்டாகிராமை 2019 ஆம் ஆண்டு பயன்படுத்தியிருந்தார். ராணி எலிசபெத்திற்கு புறா பந்தயம், புட்பால் விளையாடுவது, குதிரை ஓட்டுவது உள்ளிட்டவை பொழுபோக்குகள் ஆகும்.

6 வயதில் வீட்டின் ஓனர்
வெறும் 6 வயதில் ராணி எலிசபெத் , ஒரு வீட்டின் உரிமையாளரானார். விண்ட்சார் ராயல் லாட்ஜ் எனும் இடத்தில் Y Bwthyn Bach எனும் பெயர் கொண்ட இடத்தை வேல்ஸ் மக்கள், எலிசபெத்திற்கு 6 ஆவது வயதில் அன்பளிப்பாக கொடுத்தனர். ஏறக்குறைய 50 ஆயிரம் கிறிஸ்துமஸ் கார்டுகளை ராணி அனுப்பியிருந்தார். பல நாடுகளில் பரிசாக பெற்ற யானை, இரு பெரிய ஆமைகள், ஒரு ஜாக்குவார் ஆகியவற்றை ராணி , லண்டன் விலங்கியல் பூங்காவுக்கு கொடுத்துவிட்டார். இரண்டாம் உலக போரின் போது எலிசபெத் 1940 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் முறையாக ரேடியோவில் பேசினார்.

நகர்வலம்
சில சமயங்களில் மாறுவேடத்தில் நகர்வலம் செல்வார். அப்போது அங்கு பார்க்கும் மக்கள் யாராவது அவரிடம் நீங்கள் உள்ளூர் மக்களா என கேட்டால் ஆம் பக்கத்தில்தா் வீடு இருக்கிறது என்பாராம். நீங்கள் ராணியை பார்த்துள்ளீர்களா என கேட்டால், நான் பார்த்ததில்லை என கூறிவிட்டு இவர் பார்த்துள்ளார் என ராணி தனது பாதுகாவலரை கை காட்டுவாராம்.












Click it and Unblock the Notifications